ஆவிக்குள்ளாகச் செல்லுதல் GETTING IN THE SPIRIT 61-04-28 சிக்காகோ, இல்லினாய் 1. வினோதமான ஒன்று, நான் இங்கே நின்றுகொண்டு சகோதரன் டேவிட் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். கடந்த இரவு என்று நினைக்கின்றேன், இதோ அவர் இன்றிரவு பிரசங்க மேடையின் மீது காணப்படுகின்றார். நல்லது, அது மிக மிக அருமையான ஒன்றாகும். (சகோதரன் டேவிட், இங்கே சிக்காகோவில் நீங்கள் இருப்பதற்காக எங்களுக்கு மகிழ்ச்சி, மேலும் இங்கே இன்றிரவு எனக்கு பின்னால் சகோதரர் அமர்ந்திருப்பது அருமையானதாகும். இப்பொழுது ஜெபத்திலே என்னை தாங்குகிறீர்கள் என்பதை அறியும் போது......? ............ கர்த்தருடைய செய்தி. எனக்காக உடனுக்குடன் ஜெபித்துக் கொண்டேயிருங்கள்.) இங்கே இன்றிரவு அரங்கத்தில் மறுபடியும் இருப்பது மிகவும் அருமையானதாகும். ஜனங்களுடனே அருமையாக அமர்ந்திருப்பதானது அருமையான ஒன்றாகும். இன்றிரவு மறுபடியுமாக பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் வரவும், மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியையை காணவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இங்கே இருப்பதிலும், இந்த ஆராதனையின் ஒவ்வொரு மணி நேரத்தையும் நிச்சயமாக நாங்கள் உணர்ந்து மகிழ்ந்தோம். அங்கே கடந்த ஞாயிறு மாலையிலிருந்து, அல்லது இன்னும் சரியாக கூறுவோமானால், கடந்த ஞாயிறு பிற்பகலிலிருந்து .... மிகவும் அற்புதமான , ஆச்சரியமான நேரத்தை நாங்கள் கொண்டிருந்தோம். நம் மத்தியில் பரிசுத்த ஆவியா னவர் மகத்தான காரியங்களைச் செய்தார். அவர் தாமே வியாதியஸ்தரை சுகமாக்கி, அற்புதங்களை செய்து, ஜனங்களை இரட்சித்து, அவர்களை பரிசுத்த ஆவியால் நிரப்பி இன்னும் மகத்தான காரியங்களைச் செய்ததை நாங்கள் கண்டோம். அவர் காரியங்களைச் செய்வதை நாம் கண்டிருக்கையில், அதைவிட இன்னுமாக நாம் கேட்பதற்கு என்ன இருக்கின்றது? 2. கடைசி நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அறிவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். சுவிசேஷத்தின் ஊழியக்காரர்களாக, கடைசி நாட்களில் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடமாக பேசுகின்ற சிலாக்கியத்தை நாங்கள் கொண்டிருக்கின்றோம் என்று நான் நம்புகிறேன். ஊழியக்காரராகிய எங்களுக்கு இன்று பூமியிலே இருப்பது எப்படிப்பட்ட ஒரு சிலாக்கியமாக இருக்கின்றது. கடைசி சபை காலத்திற்கு, கடைசி சபையிடமாக பேசிக் கொண்டிருப்பது ஒரு சிலாக்கியமே. இப்பொழுது நாங்கள் கடைசி சபை காலத்தினிடமாக பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பதை, உண்மையாகவே, என் முழு இருதயத்தோடும் நான் நம்புகிறேன். முடிவாக அது லவோதிக்கேயா சபையில் முடிவடையும். அதன் பிறகு நாம்... இயேசு வருவார். அப்பொழுது எல்லாம் முடிவடைந்திருக்கும். அது சம்பவிக்கும் போது நான் மகிழ்ச்சியுறுவேன். பழங்காலத்தைச் சேர்ந்த யோவானைப் போல நான் உணர்கிறேன், "ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்" என்கின்றான், ஆமென்" என்கிறான். அதைக் குறித்ததான காரியத்தை போதுமான அளவிற்கு நான் கண்டுவிட்டேன். நான் எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருந்தேன் , உலகமானது சற்று சரியாவதைக் காட்டிலும் இன்னுமாக அது நேரம் செல்ல செல்ல மிகவும் துன்மார்க்கமாகவே, கீழ்த்தரமாகவே சென்று கொண்டிருக்கின்றது. ஆதலால்தான் யோவான் "ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்” என்று கூறினான் என்று நான் நான் நினைக்கின்றேன். அப்பொழுது எல்லாமே முடிவடைந்திருக்கும். 3. ஆகவே நான்... தரிசனத்தைக் குறித்ததான அச்சடிக்கப்பட்ட இந்த சிறு புத்தகத்தை இன்னுமாக இங்கே அவர்கள் வைத்திருப்பதை நான் காண்கிறேன். ஒவ்வொரு முறையும் அதைக் குறித்து நான் சிந்திக்கையில், கூட்டத்தில் இன்னும் அதிகமாக பேச என் இருதயமானது கொழுந்துவிட்டெரிகின்றது. இப்பொழுது எதாவதொன்றை செய்யுங்கள், ஏனென்றால் அது - நாம் எதையுமே செய்யமுடியாத அளவிற்கு நமக்கு சமயம் வாய்க்காமல் போகும் நேரமானது வர அதிக காலம் செல்லாது. ஆகவே எங்களால் செய்யமுடிகின்ற இந்த சமயத்தில் நாங்கள் அதை செய்ய விரும்புகிறோம். ஆகவே கர்த்தர் தாமே மறுபடியுமாக இன்றிரவு தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. இப்பொழுது, நாளை காலை வேளையில் வியாபாரிகளின் காலை ஆகாரக் கூட்டமானது இருக்கின்றது. நான் சரியாக இந்த மைதானத்தில் இருப்பேன் என்று நம்புகிறேன். அவர்கள் அதை ஏற்கெனவே அறிவித்து விட்டனர் என்று நான் நம்புகிறேன். வியாபாரிகளின் காலை உணவுக் கூட்டம் இருக்கும் என்ற அறிவிப்பு செய்யப்பட்டது. அந்த கூட்டத்துக்கு பொதுமக்களும் வரலாம் என்று நான் நினைக்கின்றேன். நீங்கள் கூட்டங்களுக்கு வரும்போதெல்லாம், என்ன, நாங்கள் மிகவும் மகிழ்ச்சி கொள்வோம். காலையில் பேசுகின்ற தருணமானது எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, பேசுவதானது தேவனுக்கு பிரீதியாயிருக்குமானால் ; காலை ஆகாரக் கூட்டத்தில் பேச்சாளர்களில் ஒருவனாக இருக்கின்றேன் . கர்த்தர் நம்மெல்லாருடனுடம் கூட இருப்பார் என்று நான் நம்புகிறேன். இந்த காலை ஆகார கூட்டங்களின் ஒன்றுக்கு நீங்கள் இதுவரை வராதிருப்பீர் களானால் வாணிபம் செய்பவர்களில் இந்த நகரத்தை சேர்ந்த உங்களில் சிலர் இங்கே வந்த மற்ற வியாபாரிகள், வாணிபம் செய்பவர்களுக்கு தேவன் செய்துள்ளதை கேட்பீர்களானால் அது உங்களுக்கு நன்மை பயக்கின்ற ஒன்றாக இருக்கும். 4. இப்பொழுது, உங்கள் வியாபாரத்தைப் பொறுத்த வரையில் நீங்கள் செல்வ செழிப்பு மிக்க ஒரு மனிதனாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இன்னுமாக விருத்தியடைய அல்லது உங்கள் வாணிபமானது விருத்தியடைய நாங்கள் ஏதோ புதிதான ஒன்றை அறிமுகப்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் உங்களை இன்னுமாக சிறந்தவர்களாகச் செய்திட உங்களிடமாக ஒன்றை நாங்கள் அறிமுகப்படுத்த முயற்சிக் கின்றோம். அது - அது கிறிஸ்துவே (பாருங்கள்) கிறிஸ்துவை. ஆகவே கடந்த இரவு நான் கூறினது போல, சபையானது தன்னை உலகத்துடனும், கல்வியுடனும், கும்மாளம் களியாட்டத்துடனும், மற்றும் பொழுதுபோக்குடனும் இன்னும் பிறவற்றுடனும் ஒன்றுபடுத்தி ஒப்பாக்கிக் கொள்ள முயன்றபோது தன்னுடய செயல்முறையிலிருந்து இழந்துபோனது. நாம் அவைகளுடன் ஒருபோதும் ஒப்பாக்கி ஒன்று படுத்திப் பார்க்கமாட்டோம். பகலின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இரவின் பிள்ளைகள் சாமர்த்தியசாலிகளாக இருக்கின்றனர். அவர்கள் - அவர்கள் புத்திகூர்மையானவர்களாக இருக்கின்றனர். இயேசு அவ்விதமாக கூறியுள்ளார். ஆகவே எங்களால் அவர்களுக்கு பொழுதுப்போக்கைத் தரமுடியாது. மேலும் மேலுமாக பார்ப்போமானால், சுவிசேஷமானது கண் கூசுகின்ற ஒளியல்ல, அது பிரகாசமான கொழுந்துவிட்டு எரிகின்ற ஒளியாகும். பாருங்கள்? அது பிரகாசமான ஒளியாகும். மிருதுவான மற்றும் இனிமையான ஒன்றாகும். ஆகவே நாம் - நாம் கொண்டிருக்கின்ற ஆனால் உலகம் கொண்டிராத ஒன்று இருக்கின்றது, அவர்கள் நம்மில் ஒருவராக ஆகும் வரைக்குமாக அவர்களால் அதை கொண்டிருக்க முடியாது. அது என்னவென்றால், நாம் இயேசுவைக் கொண்டிருக்கின்றோம். அதுதான் காரியமாகும். நாம் இயேசுவைக் கொண்டிருக்கின்றோம். 5. அவர்களைப்போல நாம் சாமர்த்தியசாலிகள் அல்ல. அறிவியலில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்கள் அல்ல. அதைக் குறித்து தமக்கு ஒன்றுமே தெரியாது. அவர்களுடனே சமமான நிலையில் இருப்பதற்கு நாம் முயற்சி செய்வதில்லை - இன்னும் சிறந்த ஒரு கல்வியை கற்கவோ அல்லது, சிறந்த பள்ளிகளை வைத்திருக்கவோ இன்னும் பிறவற்றை கொண்டிருக்கவோ நாம் முயற்சி செய்வதில்லை. "எங்கள் சபை இந்த பள்ளியை வைத்திருக்கிறது" என்றும் பிறவற்றையும் கூறுகிறீர்கள். அந்த வழியில் அது சரிதான், ஆனால் நாமோ இயேசுவைக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் நாம் உலகத்திற்கு கொண்டுசெல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அது இயேசு கிறிஸ்துவைத்தான். அவர் தேவனுடைய குமாரன் ஆவார். அவர் நம்முடைய இரட்சகர். மேலும் நாம் அவரை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அறிந்திருக்கிறோம். ஆகவே அதுதான் உண்மையான காரியமாகும். இப்பொழுது, நம்மில் சிலர் தாமே... நானும் கூட ஒருக்கால் அவருடைய புஸ்தகத்தை சிறந்த விதத்தில் அறியாதிருக்கலாம். ஆனால் நான் - நான் அவரை மிகவும் ஆணித்தரமாக அறிந்திருக்கின்றேன். அவருடைய புஸ்தகத்தை அறிந்திருப்பது உங்களுக்கு நித்திய ஜீவனை அளிக்காது. ஆனால் அவரை அறிந்திருப்பது தான் ஜீவனாகும். அவரை அறிவது. அந்த புஸ்தகத்தின் நபரை அறிந்திருப்பது ஜீவனாகும். 6. இப்பொழுது, நாளை இரவு மறுபடியுமாக, கர்த்தருக்கு சித்தமானால், மற்றொரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்தலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பிறகு நாளை அல்லது ஞாயிறு பிற்பகலின் கூட்டம் இறுதியான கூட்டமாயிருக்கும். அதன்பிறகு தான் புறப்பட்டு வடக்கு பிரிடிஷ் கொலம்பியாவிற்கும் டாசன் கீரீக், க்ராண்ட் ப்ரெய்ரீக்கும், 'போர்ட் செயிண்ட் ஜான் மற்றும் அங்கே இருக்கின்ற பிரதேசத்தின் ஒரு பகுதிக்கும் செல்கிறேன், எஞ்சியுள்ள கோடை காலம் முழுவதுமாக கழிக்க நேரிடலாம். ஆகவே இப்பொழுது எங்களுக்காக ஜெபத்தில் இருங்கள், காலையில் நடக்க இருக்கும் காலை ஆராதனை கூட்டத்திலும் மற்றும் தொடர்ந்து நடக்கவிருக்கின்ற கூட்டத்திலும் நீங்கள் இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இப்பொழுது வெளியிலிருந்து வந்திருப்பவர்களாகிய நீங்கள் மற்றும் இங்கே இன்றிரவு இருக்கின்ற எல்லா சகோதரர்களுமாகிய நீங்கள் இதை மறக்க வேண்டாம். அவர்கள் இங்கே உட்கார்ந்திருப்பதன் காரணம் என்னவென்றால், இந்த இதே சுவிசேஷத்தின் ஊழியக்காரராக இருப்பதினால்தான், அவர்களுடைய சபைகள் எங்கே இருக்கின்றது என்று கண்டறிந்துகொண்டு ஞாயிறு காலையன்று அவர்களுடைய சபைகளுக்கு திரளாகச் செல்லுங்கள். பெருங்கூட்டமாக அணிவகுத்துச் செல்லுங்கள். நகரத்தினூடாகச் செல்வதானது ஒரு உண்மையான அருமையான எழுப்புதலை துவக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆம்...... இயேசு வரும் வரைக்குமாக. 7. இப்பொழுது, இங்கே சிறிய ஜோசப், போசே , அநேக வருடங்களுக்கு முன்னர் அவர் எப்பொழுதும் என்னிடமாகக் கூறுவார். அங்கே லேக் ஷோர் ட்ரைவ் இடத்தில் ஒரு நாளிலே உட்கார்ந்திருந் தோம். அப்பொழுது அவர் தன்னுடைய கொச்சையான ஆங்கிலத்தில் "சகோதரன் பிரன்ஹாம், நாங்கள் - சிக்காகோ குலுங்குவதை நான் காண வேண்டும் என்று என் இருதயத்தில் எப்போதுமே ஒரு உணர்வு இருந்தது. சிக்காகோ குலுக்கப்படுவதை நான் காண விரும்புகிறேன். அநேக வருடங்களுக்கு முன்னர், சிக்காகோ குலுங்குவதை நான் காண இங்கே வந்திருந்தேன்” என்று கூறினார். அன்றொரு காலை, என் தனிப்பட்ட நேர்காணல் சந்திப்புகளுக்கு சற்று முன்னர் சகோதரன் ஜோசப்புடன் நான் காலை உணவு சாப்பிட்டேன். எனக்கு எப்போதுமே அவரிடமாக அதிக அன்பு உண்டு. ஆகவே அப்பொழுது நான் "சகோதரன் ஜோசப், உங்களுடைய - உங்களுடைய பெரிய வாஞ்சையானது நிறைவேறிவிட்டது. நீங்கள் தான் அதை புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினேன். பாருங்கள்? ஒரு நகரத்தை குலுக்குவது, ஒரு தேசத்தை குலுக்குவது என்பதைக் குறித்து நீங்கள் பேசுகையில், அப்படியானால் இந்த இடத்தை சுற்றிலும் அணு ஆயுத பொருட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதல்ல. குலுக்குதல் எதற்கென்றால் சபைக்குத்தான் . குலுக்குதலைப் பெறுகின்ற ஒன்றானது சபைதான். ஏதோ ஒரு மதசம்பந்தமான குழுவோ அல்ல, ஆனால் கிறிஸ்துவின் சரீரம்தான் அதைப் பெறுகிறது. அதுதான் ஒரு குலுக்குதலை, அதிர்வைப் பெற்று மறுபடியுமாக நேர்கோட்டிற்குள்ளாக வந்து விடுகிறது. ஆகவே அவர்கள் - சிக்காகோ குழுவானது அதை அறிந்திருக்க வேண்டியதாயுள்ளது. கடந்த சில வருடங்களாக அவர்கள் தாம் ஒரு உண்மையான குலுக்குதலை , அதிர்வைக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆறு அல்லது ஏழு வருடங்களாக அப்படியாக உள்ளது. எப்படியாக தேவனுடைய மகத்தான மனிதர் இந்த நகரத்திற்கு வந்து தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடமாக பிரசங்கம் செய்து, அடையாளங்கள், அற்புதங்கள் மற்றும் காரியங்கள் இங்கே நடைப்பெற்றது, யாருமே சாக்குப்போக்கு சொல்லி நழுவாதபடிக்கு காரியங்கள் நடந்தது. ஆம் முற்றிலுமாக, அதற்கு எந்த ஒரு சாக்கு போக்கும் கிடையாது. அது மனந்திரும்பு அல்லது மாண்டு போ என்பதாகும். அவ்வளவுதான். 8. இப்பொழுது, அதை சரியாக கவனித்து எழுதுகின்ற - அல்லது அதைக் குறித்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் - அதை நாங்கள் அவ்விதமாகக் கூறுகிறோம். நான் ஒரு சிறு பொருளின் பேரில் இன்றிரவு குறிப்புகளை எழுதி வைத்திருக்கின்றேன். சில வேதவாக்கியங் களை வைத்திருக்கின்றேன். அதை நான் பதினொன்று மணி வரைக் குள்ளாக அல்லது அதன் பிறகு சிறிது நேரம் கழித்து முடிக்க வேண்டிய வனாக இருக்கின்றேன். ஆகவே ...... நான் .... கடந்த இரவு நான் ...... உங்களுக்கு நன்றி, நீங்கள் செய்தது அருமையானதாகும். ஒவ்வொரு இரவும், பில்லி என்னிடமாக "நீங்கள் சிக்காகோ செல்லும் போது ஒரு முறையாவது இரவிலாவது - ஒன்பது முப்பது மணிக்குள் நீங்கள் பிரசங்கம் செய்து முடிப்பதை காண நான் விரும்புகிறேன். உங்களால் அதைச் செய்ய முடிகின்றதா என்று நான் காண விரும்புகிறேன்" என்று கூறினான். அதற்கு நான் "ஓ, அது சுலபமானது. அந்த ஒரு இரவு கூட்டத்திலும் நான் இருபது நிமிடங்களுக்கு பிரசங்கம் செய்யப்போகிறேன்” என்றேன். ஒவ்வொரு இரவும் அவன் கவனித்து என்னிடமாக இன்று இரவும் அப்படியாகச் செய்யாமல் விட்டு விட்டீர்களே?" என்றான். நான் "இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அல்ல, அதைப் போன்று அல்ல" என்று கூறினேன். ஆனால் எனக்கு - எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் எனக்குத் தெரிந்ததை நான் தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பது எனக்கு பிரியமான ஒன்றாகும். அது....... அது ஊறி உள்ளே செல்லும் வரைக்குமாக. 9. ஒரு சமயம் வயதான ஊழியக்காரர் ஒருவர் சபைக்குச் சென்றார். இது நகைச்சுவைக்கான இடம் அல்ல என்று எனக்குத் தெரியும். இதை நான் நகைச்சுவையாக கூற விழையவில்லை. சற்று நேரத்திற்கு சிந்தனையின் போக்கை சிறிது மாற்ற நான் இதைக் கூறுகிறேன். அவர் ஒரு சபைக்குச் சென்றார். முதல் இரவு கூட்டத்தில் "மனந்திரும்பு" என்பதன் பேரில் பிரசங்கம் செய்தார். இரண்டாவது இரவும் "மனந்திரும்பு" என்பதன் பேரில் தான் பிரசங்கித்தார். அடுத்ததாக மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இரவும் 'மனந்திரும்பு" என்பதன் பேரிலே பிரசங்கம் செய்தார். சரி, அது சரியானது தான். அப்பொழுது சபையின் மூப்பர்கள் அவரை அழைத்து "டாக்டர், மனந்திரும்புதல் பேரில் நீங்கள் பிரசங்கித்த செய்தியை நாங்கள் பாராட்டுகிறோம், ஆனால் தொடர்ந்து ஆறு இரவுகளுக்கு அதையே - மனந்திரும்புதலைப் பற்றின செய்தியையே நீங்கள் பிரசங்கம் செய்தீர்களே” என்றார்கள். அதற்கு அவர் "ஓ ஆமாம். ஆனால் இதோ பாருங்கள், முதலாவதாக அவர்கள் எல்லாரும் மனந்திரும்பட்டும். பிறகு நான் வேறு ஒன்றைக் குறித்து பிரசங்கம் செய்வேன், புரிகின்றதா” என்று கூறினார். ஆகவே.... அதுதான் காரியம் ஆகும். அவர்கள் எல்லாரும் மனந்திரும்பின பிறகு, ஆம், பிறகு அவர் மற்றதைப் பற்றி அவர் பிரசங்கிப்பார். ஆகவே அது மிகவும் அருமையான நல்ல ஒரு கருத்தாகும், நடைமுறைத்திட்டமாகும். உங்களுக்கு புரிகின்றதா? நாம் எல்லாரும் மனந்திரும்பும் வரைக்குமாக மனந்திரும்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அது அருமையானதாக இருக்கும். நாம் இதன் பேரிலேயே நீண்ட நேரத்துக்கு பேசலாம் என்பது நிச்சயம். 10. இரண்டு ராஜாக்கள், 3-வது அதிகாரத்துக்கு திருப்புவோம். 15வது வசனத்தை நான் வாசிக்க விரும்புகிறேன். இப்போதும் ஒரு சுரமண்டல  வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன் மேல் இறங்கி, இதிலிருந்து ஒரு மூலபாடத்தை நான் வெளியே எடுக்கும்படியாக விழைவேனானால், அதினாலே நான் ஒரு காரியத்தை அமைத்து, இதிலிருந்து நான் "ஆவிக்குள்ளாகச் செல்லுதல்" என்னும் பொருளை எடுக்க ஏதுவாகும். அந்த நாட்களிலே பாலஸ்தீனாவிலும் அதைச் சுற்றிலும் குறிப்பிடத் தக்க ஒரு மாற்றமானது சம்பவித்திருந்தது. ஒரு மகத்தான காரியமானது நடைப்பெற்றிருந்தது. ஒரு மகத்தான, குறிப்பிடத்தக்க ஒரு தீர்க்கதரிசி மறுரூபமாக்கப்பட்டு மகிமைக்குள்ளாக எடுக்கப்பட்டிருந்தான் . அப்படிப்பட்ட ஒரு மனிதன் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கையில் அது சபைக்கு ஒரு பெரிய இழப்பாக இருந்தது. 11. அந்த மனிதன் தேவனுக்கு பிரதிநிதியாக இருக்கும்படிக்கு அனுப்பப்பட்டு மரிக்காமலேயே வீட்டிற்கு சென்றான் என்றும், அவன் எடுத்துக்கொள்ளப்படுதலுக்குள்ளாக்கப்பட்டு மேலே எடுக்கப்பட்டான் என்பதை அறிந்துகொள்ளுதலானது, அப்பொழுது சபை என்பதாக இருந்த அந்த தேசத்திற்கு எப்படிப்பட்ட ஒரு ஆறுதலை அது அளித்திருக்க வேண்டும். அந்த எலியா இந்த நாளிற்கான - மிக அழகான ஒரு அடையாளம் ஆகும். ஒருக்கால் வேதாகமத்தை என்னைவிட நன்றாக அறிந்திருக்கின்ற ஒரு மனிதனுக்கு நான் கூறும் காரியமானது வழக்கமாக இருக்கின்ற கருத்துக்கு மாறாக மிகவுமாக அகன்றிருக்கலாம். ஆனால் எலியாவைப் போன்றே ஒரு செய்தியானது இந்த கடைசி நாட்களில் இருக்கும் என்று நான் அன்புடன் நம்புகிறேன் . அந்த எலியாவின் படியானதான சபையானது மரிக்காது - ஆனால் மறுரூபமாக்கப்படும், மேலே எடுத்துக் கொள்ளப்படும். அக்கினியானது அதை மேலே மகிமைக்குள்ளாக எடுத்துச் சென்று விடும், பெந்தெகொஸ்தே அக்கினியானது அதை எடுத்துக் கொள்ளப்படுதலுக்குட்படுத்தி மேலே எடுத்துக்கொள்ளும். 12. ஆனாலும் தேவன் எப்போதுமே தம்முடைய சபைக்கு ஒரு வழியை உண்டுபண்ணுகிறார். ஒரு மனிதனை அவர் உபயோகித்து முடித்த பிறகு, அதன் பின்னர் அந்த ஊழியத்தை செய்ய காத்திருக்கும் ஒரு மனிதனை அவர் வைத்திருக்கின்றார். தேவன் தம்முடைய மனிதனை உபயோகத்திற்கென்று எடுக்கின்றார். தம்முடைய ஆவியை அல்ல. தம்முடைய ஆவியை வைக்கத்தக்கதாக ஒரு மனிதனை எப்பொழுதுமே அவர் கொண்டிருக்கின்றார். அது வினோதமானதுதான் , ஆனால் வேதாகமம் முழுவதுமாக அப்படியாக உள்ளது, அவர் ஒரு போதும் இரண்டு தீர்க்கதரிசிகளை, இரண்டு பெரிய (Major) தீர்க்கதரிசிகளை காட்சியில், செயல்பாட்டில் வைத்ததில்லை. அவர் எப்போதுமே ஒரு தீர்க்கதரிசியைத்தான் கொண்டி ருந்தார். அந்த தீர்க்கதரிசியின் மூலமாக அவர் பணியை செய்து முடித்து விட்டு, அவனை அவர் காட்சியிலிருந்து எடுத்துக் கொள்கின்றார். அதன் பிறகு அவர் அடுத்ததாக வேறொருவனை எடுக்கப்பட்டவனுடைய இடத்தில் வைக்கின்றார். 13. அந்த விதமாகத்தான் அவர் செய்தார். அவர் செய்தியாளர்களை மட்டுமே மாற்றினார், அவருடைய ஆவியை அப்படியே வைத்தார். எலியா மற்றும் எலிசா. அந்த களைப்புற்றிருந்த தீர்க்கதரிசியை தேவன் ஊழிய களத்திலிருந்து அழைத்துக் கொண்டதான அதைக் குறித்து விரிவாக பேச இன்றிரவு எனக்கு போதுமான நேரம் இருந்தால் நன்றாயிருக்கும் ... அந்த தீர்க்கதரிசி யேசபேலுக்கும் மற்றும் அவளைச் சார்ந்த உலகப்பிரகாரமான மக்கள் திரளுக்கும் எதிராக பிரசங்கித்தான். ஆகாபுகளுக்கும் தலைவர்களுக்கும், ஊழியக்காரர் சங்கங்களுக்கும் மற்றும் எல்லாவற்றிற்கும் எதிராக கூக்குரலிட்டுக் கொண்டேயிருந்தான், களைப்புறும் வரைக்குமாக அப்படியாகச் செய்தான். அப்பொழுது தேவன் அவனை வீட்டிற்கு எடுத்துக் கொள்ளவிருந்தார். ஆகவே அவனை நதியண்டைக்கு அழைத்து வந்தார் பிறகு... அவர் அவனை எடுப்பதற்கு முன்னர், அந்த அதே செய்தியை ஒருவன் எடுத்துச் செல்வதற்காக அவனை அவர் அபிஷேகிக்க விரும்பினார். சற்று கவனியுங்கள். அந்த செய்தியானது அதே விதமாகத்தான் மாறாமல் இருக்க வேண்டியிருந்தது. ஆகவே அவன் சென்றான், தன்னுடைய வஸ்திரத்தை எடுத்து எலிசாவைச் சுற்றிலும் போட்டான். அப்போது எலிசா, எலியாவின் வஸ்திரம் தன் மீது போடப்பட்ட பிறகு அதை தன் கையில் எடுத்திருப்பான். எலியா அதை எலிசாவின் மேலே அந்த வஸ்திரத்தை அப்படியே போட்டான். அவ்வளவுதான், எலிசா அதை மறுபடியுமாக எடுத்துப் பார்த்திருப்பான். ஏனென்றால் எலியா மேலே சென்ற போது அந்த வஸ்திரம் அவனுடைய தோளிலிருந்து விழுந்தது. 14. இப்பொழுது நாம் காண்பது என்னவென்றால் எலிசா ... எலியா அவனை வர வேண்டாம் என்று கூறி நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான் . "நீ இங்கே இரு, தேவன் என்னை வேறே ஒரு இடத்திற்கு செல்ல எனக்கு கூறுகின்றார்” என்று அவன் கூறினான். ஆகவே நாம் இங்கே காண்பதென்னவென்றால் அவன் மூன்று கட்டங் களுக்குச் சென்றான்; கில்காலுக்கு மற்றும் தீர்க்கதரிசிகளின் குழுவிற்கு மற்றும் எரிகோவுக்கும் சென்றான். பிறகு நேராக நதியண்டை சென்றான் . எலிசாவுடன் யோர்தானைக் கடந்தான். ஆபிரகாமும் அவனுக்கு பின் அவனுடைய சந்ததியும் குறித்து கடந்த ஞாயிறன்று நாம் பிரசங்கித்ததை சற்று கவனிப்போமானால், அவர் ஆபிரகாமுக்கு இரு பாதைகள் சேரும் இடம், சந்திப்பு (Junction) மூன்றை அளித்தார்; நீதிமானாக்கப்படுதல் மூலமாக, 12வது அதிகாரத்தில் அவனை அழைத்தார்: 15வது அதிகாரத்தில் பரிசுத்தமாக்குதலான இரத்த பலியின் மூலமாக அழைத்தார். 17வது அதிகாரத்தில் அவனுடைய சரீரத்தை பலப்படுத்தும் படிக்கும், வரவிருக்கின்ற குமாரனுக்காக அவனை பலப்படுத்தும்படியாக பரிசுத்த ஆவியானவர் ஆபிரகாமின் சரீரத்துக்குள்ளாக சென்றார். சபைக்கு அவர் செய்திருப்பதைப் போல, ஆபிரகாமின் சந்ததிக்கும் அவர் செய்தார்: லூத்தரின் மூலமாக நீதிமானாக்கப்படுதல், வெஸ்லியின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுதல், பெந்தெகொஸ்தே அசைவின் மூலமாக ஆவியின் அபிஷேகம், அதன் பிறகு குமாரனை வைத்தல், சபைக்குள்ளாக வரங்களை அளித்தல், பிறகு ரூபத்திலே... தோன்றுதல் ... தேவன் மாம்சத்தில் இருந்தார். அவர் தம்மை தாமே வெளிப்படுத்திக் காண்பித்தல், இருதயத்தின் இரகசியங்களை அறிந்தார். தமக்கு பின்புறத்திலே கூடாரத்தில் சாராள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை பகுத்தறிந்தார். 15. எப்படியாக அந்த சாலை சந்திப்புகளை (Junctions)... அந்த சபைகள் தாமே சரியாக அந்த அதே இடத்திலேயே வந்து கொண்டிருப்பதைக் காண்கையில் ... அந்த செய்திக்குப் பிறகு, எப்படியாக அவர் சாராளின் சரீரத்தை மாற்றி அடுத்ததாக ஆபிரகாமின் சரீரத்தை மாற்ற வேண்டியதாயிருந்தது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த குமாரனை அவர்கள் பெற்றுக்கொள்ளும்படிக்கு அப்படியாக அவர் செய்தார். இந்த சபைக்கும் அதைத்தான் அவர் செய்துள்ளார். அந்த அதே காரியத்தினூடாகவே அதைக் கொண்டுவந்தார். இப்பொழுது, அடுத்த காரியம் என்னவென்றால் ஒரு நொடிப் பொழுதிலே, ஒரு இமைப் பொழுதிலே மறுரூபமாகிச் செல்லுதல்... நாம் மாற்றப்பட்ட ஒரு சரீரத்தைக் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இப்பொழுது, சாராளும் ஆபிரகாமும் தாங்கள் கொண்டிருந்த சரீரத்திலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் நூறு வயதானவர் களாக இருந்தனர். ஆகவே அவர்களுடைய சரீரத்தை மாற்ற வேண்டியிருந்தது. அவர் அவர்களை வாலிபப்பருவத்திற்கு திரும்பக் கொண்டு வருதல் மாத்திரம் அல்ல, அவர் அதைச் செய்தார். அதற்கும் மேலாக அவர்களை மாற்றும்படியாகவும் இருந்தது. ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே வாலிபப்பருவத்தில் வாழ்ந்திருந்தனர். ஆகவே அவர்கள் அந்த குமாரனைப் பெற்றுக் கொள்ளும்படியான விதத்திலே தேவன் அவர்களுடைய சரீரத்தை மாற்றினார். ஆகவே கவனியுங்கள். அடுத்ததாக சபைக்கு இருக்கின்றதாக நாம் காண்பது என்னவென்றால் மாற்றப்பட்ட ஒரு சரீரமாகும். வயதான நாம் திரும்பவுமாக மிகவும் இளம் வாலிப வயதிற்குச் செல்வது அல்ல. ஆனால் அந்த குமாரனை நாம் பெற்றுக்கொள்ளும்படிக்காக ஒரு மாற்றப் பட்ட சரீரத்தை நாம் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏனென்றால் நாம் அவரை ஆகாயத்தில் சந்திக்கப்போகின்றோம். எடுத்துக்கொள்ளப்படுதல் வரும், அப்பொழுது ஒரு நொடிப்பொழுதிலே, ஒரு இமைப்பொழுதிலே மாற்றப்படுவோம். 16. இப்பொழுது, நாம் இங்கே காண்பது என்னவென்றால், தேவன் எலிசாவை அந்த மூன்று காரியங்களினூடாக, மூன்று வித்தியாசப்பட்ட கட்டங்களினூடாக கொண்டு வந்தார். அதன் பிறகு அவன் அந்த குழுவை, புத்திரரை விட்டுச் சென்ற உடனே, யோர்தானுக்குச் சென்று, யோர்தானைக் கடந்தான், அப்பொழுது அவன் எலியாவின் ஆவியின் இரட்டிப்பான பங்கை தன் மீது கொண்டிருந்தான். இப்பொழுது இயேசு "நான் செய்கிறவைகளை நீங்களும் செய்வீர்கள். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால் இதைப் பார்க்கிலும் அதிகமாக நீங்கள் செய்வீர்கள்” என்று கூறினார். அது கிறிஸ்துவும் மற்றும் சபையும் என்பதற்கு நிழலாகும். கிறிஸ்து மேலே எடுக்கப்பட்டார், கிறிஸ்துவின் மேல் இருந்த அந்த அதே ஆவி தாமே அவருடைய சபையின் மேலாக வந்தது. இப்பொழுது, கிறிஸ்து ஒரு இடத்தில் மாத்திரமே இருந்து கொண்டு போதித்துக் கொண்டிருப்பார், இப்பொழுது அவருடைய சபையில் இருக்கின்றார். அவரால் உலகளாவிய நிலையில் இருந்து உலகம் முழுவதுமாக போதித்துக் கொண்டிருக்க முடியும். சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்றிரவு சிக்காகோவில் கிறிஸ்து போதித்துக் கொண்டிருக் கின்றார். அவருடன் நாம் இப்பொழுது இருக்கின்றோம். மேலும் அங்கே பிலேடெல்பியா நகரத்தில் கிறிஸ்து போதித்துக் கொண்டிருக்கின்றார். ஆப்பிரிக்கா, ஜப்பான், ஆசியா, ஐரோப்பா, எல்லா இடங்களிலும், மினி... உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் இந்த இதே நிமிடத்தில் உலகம் முழுவதுமாக மக்கள் அநேகம் பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். (பாருங்கள்?) இரட்டிப்பான பங்கு, கடைசி நாட்களில் அவருடைய ஆவியானது ஊற்றப்பட்டிருக்கின்றது. 17. அங்கே எரிகோவில் மலையின் மேல் இருந்த வேதாகம கலாசாலையின் குழுவினர் வந்து எலியா - எலிசா யோர்தானைக் கடந்ததைக் கண்டார்கள். அப்பொழுது அவன் செய்த அற்புதத்தை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். எலிசா செய்தது போல அப்படியே செய்தான். அப்பொழுது அவர்கள் “எலிசாவின் ஆவி - எலியாவின் ஆவி எலிசாவின் மேல் இறங்கியிருக்கிறது” என்று கூறினார்கள். ஆகவே நாம் காண்பதென்னவெனில் தேவனுடைய ஆவி இந்த தீர்க்கதரிசியின் மேல் இருக்கின்றது என்று மக்கள் அறிந்துக் கொண்டனர். அப்பொழுது அவர்கள் அவனுடன் ஆலோசனை செய்தனர். அவன் அவர்களுக்கு ஒரு அற்புதத்தை செய்யவும், ஒரு நல்ல காரியத்தை செய்யவும் அவனிடமாக ஆலோசனை செய்தனர். அவன் “இதோ ஒரு அழகான பட்டணம் நமக்கு இருக்கின்றது. அது பர்வதத்தின் மேல் இருக்கின்றது - அங்கிருந்து இயற்கைக் காட்சிகள் அழகாக இருக்கின்றது. ஆகவே ஒரு பள்ளியை நிறுவவும் மற்றும் இன்னும் பிறவற்றைச் செய்யவும் மிக அருமையான ஒரு இடமாகும். எலியா அதைக் கட்டி னான். ஆனால் இங்கிருக்கும் தண்ணீரோ கசப்பு மிக்கது” என்றான். அவர்களுக்கு ஒரு புது நீருற்று தேவைப்பட்டது. 18. அவர்கள் ஒரு மாற்றத்திற்குள்ளாகிக் கொண்டிருந்தனர். ஒரு புது நீரூற்றானது திறந்து வெளி வர அவர்களுக்கு அவசியமாயிருந்தது. பாருங்கள். புது திராட்சரசத்தை பழைய துருத்திகளில் வைக்க முடியாது. அது வெடித்து விடும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே இன்றைக்கும் அது போலதான் என்று நான் நினைக்கின்றேன். நமக்கு தண்ணீர் மாற்றம் தேவைப்படுகின்றது. உப்பு நிறைந்த தோண்டி தேவைப்படுகிறது. உப்பால் நிறைந்த ஒரு புது தோண்டி தேவைப்படு கின்றது. அதற்கு முன்பு அதிலே ஒன்றுமே வைக்கப்பட்டிராத ஒரு புது தோண்டி. ஆகவே தேவன் எப்பொழுதுமே வழக்கமாக அப்படியாகத்தான் செய்கின்றார். ஒன்றுமே தெரியாத ஒரு சிறிய மனிதனை எங்கிருந்தோ அவர் எழுப்புவார். அவன் உப்பு தோண்டியை எடுத்து உப்பை அந்த பழைய மதப்பிரகாரமான தண்ணீரில் போடுவான். அதன் பிறகு நடக்கின்ற முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அது மறுபடியுமாக முழுவதுமாக இனிப்பானதாக மாறும், மற்றுமொறு எழுப்புதல், பரிசுத்த ஆவியானவர் எல்லார் மேலும் ஊற்றப்படுதல், எல்லாவிடங்களுக்கு அது செல்லும். அதுதான் இன்றிரவு நமக்கு தேவைப்படுகின்றது. அதுதான் மறுபடியுமாக நமக்குத் தேவைப்படுகின்றது. அது இன்னும் ஒரு படி உப்பு, அது அந்த தண்ணீரை இனிப்பான ஒன்றாக மாற்றுமல்லவா? நினைவில் கொள்ளுங்கள், அவன் ஒரு புத்தம் புதிய தோண்டியை எடுத்தான். இதற்கு முன்னர் அதில் ஒன்றுமே வைக்கப்படவில்லை, அதிலே அவன் உப்பைப் போட்டான். இப்பொழுது, உப்பு போடப்படுமானால் அது ஒரு தனிச்சுவையை நறுமணத்தை அளிக்கும். முதலில் அது போடப்படவேண்டும். அது முதலாவதாக எதிலே போடப்படு கின்றதோ அதிலே அது சேர வேண்டும். 19. இப்பொழுது - இப்பொழுது, அங்கே அரசியல் களத்திலும் கூட ஒரு பெரிய மாற்றமானது நிகழ்ந்திருந்தது. ஆகாப் என்னும் பெயரைக் கொண்டிருந்த ஒரு மனிதன் மரணமடைந்திருந்தான். அவனுடைய குமாரன் யோராம் ராஜ்யபாரம் பண்ணினான். அவனும் கூட அப்படியாக தன் தகப்பனாகிய ஆகாபைப் போல இருந்தான் என்று நினைக்கிறேன். ஓ, அவன் சில காரியங்களை சரி செய்திருந்தான், ஆனால் வேறே சில காரியங்களில் அவன் மோசமாக இருந்தான். ஆகவே இந்த விதமாகத்தான் அது இருக்கின்றது. நாம் ஒரு புது அமைப்பை உண்டாக்கும்போது, பழைய அமைப்பானது கொண்டிராத சில காரியங்களை நாம் எடுத்து இன்னும் மோசமானதான ஒன்றை அதிலே வைத்து விடுகிறோம். அதன்பிறகு அப்படியே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். இந்த காலத்திலும் அந்த விதமாகத்தான் சம்பவித்திருந்தது. சில இரவுகளுக்கு முன்னர், யோசபாத் ஆகாபை சந்திக்க வருவதையும், அவனுடன் ஒரு உடன்படிக்கையை, கூட்டணியை உருவாக்கினான் என்பதைக் குறித்து நான் பேசினேன். அவன் தவறான கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டான். 20. இப்பொழுது, யோசபாத் இன்னுமாக தன்னுடைய ராஜ்யபாரத் தின் பதினெட்டாவது வருஷத்திலே இப்படியாக நடந்தது மிகவும் வினோதமான ஒன்றாகும். ஆகாபின் இடத்தை யோராம் எடுத்துக் கொண்டபோது, யோசபாத் அங்கே வந்தான் - இல்லை யோராம் அவனிடமாக ஆள் அனுப்பினான். ஏனென்றால் அவன் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டான். அப்பொழுது யோசபாத் அங்கே வந்து தவறான தோழர்களுடனே சேர்ந்துகொண்டான். அந்த விதமான காரியங்களை நாம் செய்வது விசித்திரமானதல்லவா? அவர்கள் வறுக்கப்படும் பாத்திரத்திலிருந்து எழும்பி குதித்து நேராக நெருப்பிற்குள்ளாக விழுந்து விடுகிறார்கள். ஜனங்கள் அப்படியாக இருப்பதை நீங்கள் காணலாம், அவர்கள் ..... அவர்கள் சரியாக வெளியே வந்து தேவனுக்கு ஊழியம் செய்ய ஆரம்பிப்பார்கள். அதன்பிறகு நடப்பது என்னவென்று தெரியுமா? அவர்கள் மறுபடியுமாக நேராக உலகத்திற்குள்ளாகவே திரும்பிச் சென்று விடுவார்கள். "நாயானது தான் கக்கினதை தின்னும்படி திரும்புவது போல, பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது போல ” என்று வேதாகமம் கூறுகிறது. நாயானது தான் சாப்பிட்டுள்ள உணவானது தனக்கு குமட்டலுணர்ச்சியை உண்டாக்குகிறது என்பதால்தான் அதை வாந்திப் பண்ணிப் போட்டது என்பதை அறிந்து கொள்ளுமானால், இரண்டாவது முறையும் அப்படியே அது செய்யும். ஆகவே எப்படியாயினும் அதை விட்டு நீங்கள் புறம்பாக தூரமாக இருக்கலாமல்லவா, அது உங்களுக்கு குமட்டல் உண்டாக்கும் படிச் செய்யுமானால் அதை உதறித்தள்ளிவிட்டு, அதிலிருந்து விலகி இருங்கள். பொல்லாங்காயத் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். 21. ஆகவே நாம் காண்பது என்னவென்றால் அந்த விதமாகத்தான் அது நடக்கின்றது. எப்படியாயினும் அதை நாம் கொண்டிருக்கின்றோம். ஆகவே எப்போதுமே அதை நாம் கொண்டிருக்கின்றோம். அதை இன்னு மாக தொடர்ந்து நம்மிடையே இருக்கும் என்று நான் யூகிக்கின்றேன் . ஆனால் யோசபாத் இவ்விதமாக நினைத்திருப்பான் என்று நான் சற்று கற்பனை செய்கிறேன் "சரி, நான் புறப்பட்டுச் சென்று பார்ப்பேனாக, ஒருக்கால் இந்த புதிய மேய்ப்பன் (Pastor) யோராம் சற்று வித்தியாசப்பட்டவனாக இருக்கலாம். அந்த பழைய மேய்ப்பன் இருந்ததை விட இவன் சிறிது வித்தியாசமானவனாக இருப்பான்" என்று நினைத்திருப்பான். ஆனால் நாம் பார்ப்பது என்னவென்றால் அவன் ஒரு புதிய மேய்ப்பன் தான் ஆனால் அவன் அந்த அதே பழைய அமைப்பை அப்படியே வைத்திருந்தான் . அவன் அதற்கு சில புதிய காரியங்களை சேர்த்திருந்தான் அவ்வளவுதான், ஒருக்கால் அந்த பழைய முறைமையானது கொண்டிராத சில புதிய திட்டங்களை அவன் சேர்ந்திருப்பான். நண்பர்களே, இன்று அதைப்போன்று நிறைய காரியங்களை நாம் கொண்டிருக்கின்றோம் என்று நான் நினைக்கின்றேன். நாம் கொண்டிருப்பது... பெந்தெகொஸ்தே மக்களாகிய நாம், அதில் நிறைய காரியங்களை செய்துள்ளோம். நாம் பழைய அமைப்பினை எடுத்துப் போட்டு ஒரு புதிய எழுப்புதலை ஆரம்பிக்க முற்படுகிறோம். ஆனால் முதலில் சம்பவிப்பது என்னவென்று உங்களுக்கு தெரியும். நாம் திரும்பி அந்த புதிய எழுப்புதலை தள்ளிவிட்டு மறுபடியுமாக அந்த பழைய அமைப்பை அப்படியே எடுத்துக் கொள்கிறோம். அதுதான் காரியத்தை கிழித்துப்போடுகிறது. 22. இப்பொழுது. சிறிது காலத்திற்கு முன்னர் "பின்மாரி” என்று அழைக்கப்பட்ட எழுப்புதலானது பெந்தெகொஸ்தேயினருக்குள் வெடித்து எழும்பினது. ஆம், அவர்கள் பல இடங்களுக்கு சென்று "நாங்கள் ஸ்தாபனம் அல்ல" என்று கூறினர். ஆனால் அவர்கள் செய்தது என்னவென்று பார்த்தால் ஏனைய ஸ்தாபனங்களைக் காட்டிலும் அவர்கள் இன்னும் அதிகமாக கோட்பாடுகளுடன் இறுகப்பிணைத்து ஸ்தாபனமாயிருந்தனர். பாருங்கள், ஒரு புதிய மேய்ப்பனுடன் பழைய அமைப்பை அப்படியே கொண்டிருக்கிறீர்கள். அது கிரியை செய்யாது. அவ்வளவு தான். அது முழு காரியத்தையுமே குழப்பத்துக்குள்ளாக்கும். அப்பொழுது நீங்கள் அப்படியே முழுவதுமாக துண்டு துண்டாகப் போவீர்கள். ஆகவே இங்கே அதுதான் நடந்தது. புதிய மேய்ப்பன் (Pastor) யோராம் எப்படியிருக்கின்றான் என்று பார்க்க யோசபாத் புறப்பட்டுச் சென்றான். அவனுடைய புதிதான அமைப்பு முறையையும் மற்றும் அவன் கொண்டிருந்தவற்றைக் காண நாம் செல்லலாம் என்று யோசபாத் நினைத்தான். ஆனால் அதுவோ அவனை மறுபடியுமாக பிரச்சனையில் அகப்பட்டுக் கொள்ள சிக்க வைக்கின்ற ஒரு தூண்டில் மாத்திரமே. ஆகவே அவன் கொண்டிருந்த எல்லா பகட்டான காரியத்துடனும் மற்றும் அவனால் யோராமுக்கு என்னவெல்லாம் வெகுமதியாக கொடுக்க முடியுமோ அதையெல்லாம் எடுத்துச் சென்றான் என்று நாம் காண்கிறோம் - தேவன் தங்கள் மத்தியில் நிச்சயமாக இருக்கின்றார் என்பதை அறியாமல் அவர்கள் கர்த்தரிடமாக ஆலோசிக்காமல் ஏழு நாட்கள் சுற்றித் திரிந்தனர். 23. இப்பொழுது, இதுதான் பிரச்சனைக்குரியதாகும். நாம் காரியங்களை செய்ய ஆரம்பித்து விடுகிறோம், ஆனால் அக்காரியங்களில் உண்மையாகவே நம் மத்தியில் இருப்பது கர்த்தரா அல்லது இல்லையா என்று பார்க்கும்படிக்கு நாம் சற்றும் நிற்பதே கிடையாது. அது ஏதோ ஒருவிதமான உணர்ச்சி வசமா அல்லது ஏதோ ஒரு விதமாக உணர்ச்சியினால் தூண்டப்படுதலா அல்லது ஏதோ ஒரு முட்டாள்தனமான அமைப்பா அல்லது ஏதோ ஒன்றா என்று நாம் பார்ப்பது கிடையாது. அது தேவனால் உண்டானதா அல்லது இல்லையா என்று நாம் கண்டுபிடித்து அதை சரி செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். அங்கேதான் நாம் நம்முடைய தவறுகளைச் செய்கின்றோம் என்று நான் நினைக்கின்றேன் . சபையானது ஏழு நாள் பிரயாணித்தது. ஆகவே நாம் காண்பதென்ன வென்றால் அது பிரயாணித்த ஏழு நாளிலே தேவன் கூட வருகின்றார் என்று கருதிக்கொண்டனர்; அதைத்தான் நாமும் செய்திருக்கிறோம். அது அப்படித்தான் என்று நினைத்துக் கொள்கிறோம். "ஓ ஆம், நாம் சென்று சபையைச் சேர்ந்து கொள்ளலாம். தேவன் அதில் இருக்கின்றார். அதில் துளி கூட சந்தேகம் கிடையாது”. 24. தேவன் அதில் இருக்கின்றாரா அல்லது அதில் இல்லையா என்று நீங்கள் ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள். இயேசு 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்" என்று கூறினார். அடையாளங்கள், அதிசயங்கள், அற்புதங்கள் .... இங்கே நம்முடைய சபைகள் எந்த ஒரு அனலும் இல்லாமல் குளிர்ந்த நிலையில் அப்படியே இருந்து, அந்த காரியங்கள் நடைபெறாமல் ... யாரோ ஒரு விசேஷித்த சுவிசேஷகர் ஒருவர் உங்கள் பட்டணத்துக்கு வந்து டாம்பரீனை எடுத்து அதில் தாளத்தை தட்டி சிறிது உணர்ச்சி வசத்தை தட்டி எழுப்பும் வரைக்குமாக நீங்கள் காத்திருக்க வேண்டியதாயிருக்கின்றது. தேவன் அதில் இல்லை. இல்லை. நான் உங்களுக்கு கூறுகிறேன். இன்றைக்கு உங்களுக்கு தேவைப் படுவது என்னவென்றால் மறுபடியுமாக அந்த பழமையான வேதாகமத் திற்குத் திரும்பிச் செல்லுதல்தான். வேதாகமத்தைக் குறித்த பழமை பாணியிலான பெந்தெகொஸ்தேயினர் போதித்தலுக்கு திரும்பிச் செல்லுதல். தேவைப்படுகின்றது. பரிசுத்த ஆவிக்கு திரும்பிச் செல்லுதல் தேவனுடைய வல்லமைக்கு திரும்பிச் செல்லுதல். முழு இரவு ஜெப கூட்டங்கள் தேவைப்படுகின்றது. தேவனிடமாக பசி தாகம் கொண்டிருக் கின்ற ஒரு முழு இரவு ஜெபக்கூட்டம். அதுதான் இன்றிரவு நம்முடைய சபைகளுக்கு தேவையாயுள்ளது. நம்முடைய முறைமைகளில் அதை கொண்டு வருதல்தான். 25. அப்பொழுது அதை அவர்கள் கண்டுகொண்டனர். ஏழு நாள் பிரயாணம் முடிவில் அந்த பிரயாணமானது ஒரு பாலைவனத்திற்கு அவர்களைக் கொண்டு வந்தது. அந்த அதே காரியத்தைத்தான் நாமும் பார்க்கின்றோம். நாம் இப்பொழுது ஏழு சபை காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் என்ன செய்திருக்கின்றோம் - ஒரு எழுப்புதல் எழும்பியுள்ளதா? நாம் ஒரு ஸ்தாபனத்தை நிறுவி "இதை நாங்கள் விசுவாசிக்கிறோம். அந்த குழுவுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது" என்று கூறி நம்மை ஒரு சிறு குழுவாக அமைத்துக் கொள்கிறோம். இந்த குழுவானது இன்னுமொரு சிறு குழுவை அமைக்கிறது. அந்த குழுவும் இந்த குழுவுடன் எந்த ஒரு தொடர்பும் கொள்ளாமல் அப்படியே இருந்துவிடுகிறது. அக்குழுக்கள் வாதித்துக்கொண்டும் காரசாரமாக சண்டையிட்டுக் கொண்டும், இப்படியும் அப்படியுமாக இருக்கின்றனர். ஆகவே இப்பொழுது நாம் காண்பது என்னவென்றால் அதன் எல்லா காரியங்களின் மத்தியிலும் நாம் ஏழு நாள் அப்படியே சுற்றி திரிந்து நம் மத்தியில் தேவன் இல்லாதபடிக்கு செய்திருந்தோம். அது சரி. 26. இப்பொழுது, ஒரு நாள் உண்டு. அது பகலுமல்ல இரவுமல்ல என்று அந்த தீர்க்கதரிசி கூறியிருந்தான். அந்த நாள் மிகவும் வெளிச்ச மில்லாத, இருளார்ந்த நிலையில் இருக்கும். அந்தவிதமான ஒரு நாளை நாம் கொண்டிருந்தோம். கடந்த இரண்டாயிரம் வருடங்களில் நாம் கூட்டங்கள் நடத்தி இயேசுவை தேவனுடைய குமாரனாகவும் நம்முடைய இரட்சகராவும் ஏற்றுக்கொண்ட நாளை நாம் கொண்டிருந்தோம். தேவன் நம் மத்தியில் பெரிய மகத்தான காரியங்களை செய்ததை நாம் கண்டோம். ஆனாலும் பெந்தெகொஸ்தே வெளிச்சமானது வர மிகவும் நீண்டகாலம் எடுத்துக்கொண்டது. இரண்டாயிரம் வருடங்களாக நாம் ஸ்தாபனங்களை உண்டாக்கினோம். பெரிய பள்ளிகளை நாம் கட்டினோம், அமைப்புகளை நிறுவினோம். இங்கே ஏழாம் சபை காலத்தில் நாம் காண்பது என்னவென்றால் நாம் ஏதோ ஒன்றை தவறவிட்டிருக்கிறோம். ஏதோ ஒன்று தவறாயிருக்கின்றது. நாம் ஒரு பாலைவனத்திற்குள்ளாக சென்றிருப்பதை காணமுடிகிறது. எல்லா கனிகளும் காய்ந்து உலர்ந்து போய்விட்டது. இன்று பெந்தெகொஸ்தே சபை அதைத்தான் செய்துள்ளது. அது மிகவுமாக எதுவும் உள்ளே வராதபடிக்கு இறுகி ஸ்தாபித்துக் கொண்டு ஒரு சபைக்கும் இன்னொரு சபைக்கும் விரோதம் என்ற விதமாக இருக்கின்றது. எல்லா கனிகளும் உலர்ந்துபோய் காய்ந்துவிட்டது. ஆரம்பத்திலே அவர்களிடம் இருந்த விதமாக நம்மிடையே இன்னுமாக அன்பு, சமாதானம், சந்தோஷம், நீடிய பொறுமை, ஐக்கியம் இல்லை. அவர்கள் கொண்டிருந் ததைப் போல நாமும் அவைகளை கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். பாலைவனங்களில் கனிகள் எல்லாம் காய்ந்து போயிற்று. 27. உண்மையான ஜீவனுள்ள தேவனைக் காணமல் ஏழு நாள் செல்வது, நாம் சிறு சிறு கொள்கைகளை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறோம். தேவன் லூத்தருக்கு நீதிமானாக்கப்படுதலை அளித்தார். அவர் அதை எடுத்து அதனுடன் சென்று விட்டார். அவர் வெஸலாம், பரிசுத்தமாக்கப்படுதலை அளித்தார்; அதை அவர் எடுத்து அதனுடன் சென்று விட்டார். அவர் பெந்தெகொஸ்தே மக்கள் அந்நிய பாஷையில் பேசும்படிக்கு விட்டார், அவர்களும் அதை எடுத்து அதனுடன் சென்று விட்டனர். தேவன் நம்மை வல்லமையின் ஒருமைக்குள்ளாக எல்லாரையும் ஒருங்கே அழைத்து அதினாலே பரிசுத்த ஆவியின் நிறைவை சபைக்குள்ளாக கொண்டு வரவும், இருக்கின்ற ஒவ்வொரு அங்கத்திற்குள்ளாக ஆவிக்குரிய வரங்கள் எல்லாம் கிரியையில் இருக்கும்படிக்கு அழைக்க விரும்புகிறார். ஆம், தேவன் இல்லாமல் ஏழு நாட்கள் சென்றது, அது அவர்களை ஒரு பாலைவனத்திற்கு கொண்டு சென்றது. இப்பொழுதும் அதே காரியம் தான் நடக்கின்றது. அவருடைய கனியானது உலர்ந்து காய்ந்து போயிற்று. அவர்கள் மலையிலிருந்து பசுமையான பள்ளதாக்குகளுக்கு சென்று அங்கிருந்து செல்லும்போது இடங்கள் காய்ந்து போவதை கண்டனர். 28. உங்களுக்குத் தெரியுமா, எல்லாருக்கும் மலை உச்சி அனுபவம் வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அவர்கள் பள்ளதாக்கு ஒரு போதும் வேண்டாம் என்று கூறுகின்றனர். எல்லாரும், பெந்தெகொஸ்தே சபையும் கூட. ஒவ்வொரு இரவும் நீங்கள் சத்தமிடவும், நடனமாடவும், மேலும் கீழும் குதிக்கவும், அந்நிய பாஷையில் பேசவும், தரையில் சுற்றிலும் ஓடவும் மற்றும் வேறே எதுவும் செய்யவில்லை என்றால், ஒரு நல்லவிதமான கூட்டமானது நடத்தப்படவில்லை என்று நினைக்கிறீர்கள். சரி, மலையின் உச்சியில் இருப்பது சரிதான் என்று உங்களுக்குத் தெரியும். அது அருமையானதுதான். ஆனால் உங்களிடம் நான் ஒன்றைக் கூறட்டும்: நீங்களும், உங்கள் கனிகளும் - அங்கே மலையில் மேலே இரவில் உறைந்து போய்விடும். குளிர் காற்று அடிக்கும் போது நீங்கள் உங்கள் எல்லா கனியையும் இழந்து விடுவீர்கள். அதுதான் இப்பொழுது சம்பவித்துள்ளது. நாம் கீழே தீர்மானம் என்னும் பள்ளத்தாக்கிலே முழு இரவு ஜெப கூட்டங்களுக்கு பதிலாக, நடனமாடுதல், குலுங்குதல், சுற்றுமுற்றும் குதித்தல் போன்ற மலை உச்சி அனுபவத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். நீங்கள் வந்து தேவனை சந்தித்து, ஏதோ ஒன்று சம்பவிக்கும் வரைக்குமாக உங்கள் ஜீவனையே ஊற்றும்படிக்கு அங்கே நீங்கள் இறங்கி வர வேண்டும். அங்கே மேலே கனிகள் வளர்க்கப்பட்டு நாம் அவைகளை அங்கேயே விட்டுவிடுகிறோம். ஆனால் உறை பனி அதைக் கொன்றுபோடுகிறது. அது சரியே, ஒவ்வொரு முறையும் சிறிது பனிக்காற்று வரும்போது, நீங்கள் சார்ந்திருக்கும்படிக்கான எதுவுமே அப்போது இருக்காது. உணர்ச்சி வசப்படுதலானது மறையும் போது, அப்பொழுது எல்லா சத்தமும் அடங்கிவிடும். ஓசைகள் நின்று போகும், அப்படியானால் நீங்கள் இருக்கும் இடம் என்ன? அப்பொழுது சோதனையானது வரும், உங்களால் அதை தாங்க முடிவதில்லை. 29. நமக்கு தேவைப்படுவது என்னவென்றால் அங்கே கீழே இருக்கின்ற அரைத்து நொறுக்கும் இடத்திற்கு செல்வதுதான் அங்கே கீழே ஆழ பள்ளத்தாக்கிலேதான். அது முற்றிலும் சரி. சபை இன்றிரவு அங்கேதான் இருக்க வேண்டியதாயுள்ளது. சரி, பச்சை பசேலென இலை, (green) வளர ஆரம்பிப்பதை அவர்கள் கவனித்தனர் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. "பச்சை இலையா?” என்று நீங்கள் கேட்கலாம். ஆம், நாம் ஆரம்ப இலையாக இருக்கலாம். ஆனால் எப்படியாயினும் நமக்கு ஜீவன் இருக்கிறது. அது ..... ஆமாம். எல்லாரும் "ஆம், அந்த பெந்தெகொஸ்தே பிரசங்கிகளின் கூட்டம், அவர்களில் சிலர்..." எனலாம். சில காலத்திற்கு முன்னர் நான் ஒரு பள்ளியில் இருந்தேன். அப்பொழுது என் மகன் சில மாணவர்களிடம் "ஆம், நானும் கூட செளத் வெஸ்டர்ன் வேதாகம பள்ளியிலிருந்து தான் வருகிறேன்" என்று கூறினான். அதற்கு அவர்கள் "உங்களால் எழுதவும் படிக்கவும் கூடுமானால், அதோ அங்கே இருக்கின்றதே, அந்த குழுவைக் காட்டிலும் நீங்கள் சற்று பரவாயில்லை ” என்றனர். ஓ என்னே! அவர்கள் "நல்லது, நான் கண்டதிலேயே அவர்கள்தான் பச்சை இலையாக இருக்கும் குழு ஆகும்” என்று கூறுகின்றனர். ஓ, சகோதரனே, நாம் பச்சை இலையாக இருக்கலாம். ஆனால் நாம் கொண்டிருப்பது - நாம் வளையும் விதத்தில் நெகிழ்வு தன்மை கொண்டவர்களாக இருக்கின்றோம். பச்சையாக இல்லாதிருக்கின்ற இலையை சற்று பிடித்து இழுத்துப் பாருங்கள். அது நொறுங்கி உடையும். 30. இன்றைக்கு அதுதான் காரியம் ஆகும், மிக அதிக மக்களுடைய அனுபவங்கள்: அவர்கள் தாமே மிகவும் உலர்ந்து போன மற்றும் நெகிழாத விறைப்புத்தன்மை கொண்டதாக இருக்கின்றனர். நெகிழ்வு தன்மை கொண்டதாக இருப்பது நமக்கு அவசியமாயிருக்கின்றது - காற்று பலமாய் கீழே வரும்போது, அது அந்த இலையை அடித்து இழுக்கும். சுற்றுமுற்றுமாக அடித்துத் தள்ளும், அங்கும் இங்குமாக இழுக்கும். ஆனாலும் அதற்கு ஒன்றும் நேராது - அதை வளரச் செய்யும், அதற்குள்ளாக ஜீவனை செலுத்தும், ஒரு உலர்ந்த இலையாக அசையாமல் அப்படியே இருந்து காற்று அடிக்கும் போது அடக்க ஆராதனையில் இசைக்கப்படும் ஓலமிடுகிற ஓசையைப் போல ஒரு முழக்கமாக இராமல், காற்று என்னை சுற்றிலும் பலமாக வீசும்போது "அற்புதங்களின் நாட்கள் கடந்த காலத்திற்குரியது. தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்று கிடையாது” என்ற சத்தத்தை எழுப்புவதைக் காட்டிலும், நான் சிறிது பசுமை நிறமாக இருந்து பரிசுத்த ஆவியின் அசைவுக்கு இசைந்து கொண்டும் நெகிழ்வு தன்மை கொண்டவனாக இருக்கவே விரும்புகிறேன். அப்படிப்பட்ட சத்தமானது அடக்க ஆராதனையில் இசைக்கப்படுகின்ற ஒரு இசையாகும். ஓ, அந்த இளம் மரங்கள் சிறிது காலத்திற்கு முன்னர் வளர்ந்த மரங்களாக இருக்கலாம். ஆனால் அவைகள் நெகிழ்வு தன்மையைக் கொண்டிருக்கையில் ஆவியானவரின் அசைவுக்கு அது இசைந்து அசையும், பரிசுத்த ஆவி பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல அவர்கள் மேல் வந்து அந்த இளம் மரங்களை அசைக்க ஆரம்பிக்கும், அவைகளை தேவனுடைய நன்மையால் நிரப்பும், ஓ, அந்த விதமான ஒரு ஜீவன் தான் இருக்க வேண்டும். அது ஒரு பச்சை இலையான குழுவாக இருக்கும், ஆனால் அது ஆம், தனக்குள்ளாக ஜீவனைக் கொண்டிருக்கின்ற ஒரு குழு ஆகும். அது அருமையானது. தனக் குள்ளாக ஜீவனைக் கொண்டிராத எந்த ஒன்றுமே மரித்துப்போன ஒன்றாகும். அது மரித்த ஒன்று என்று விஞ்ஞானப்பூர்வமாக அறியப் படும். 31. ஏழு நாள், அது ஒரு... நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் செய்திருந்தது என்ன என்று ஏழாம் நாளில் தான் கண்டுணர்ந்தனர். ஆகவே நாம் லூத்தர், வெஸ்லியினூடாகவும், மற்றும் - மற்றும் பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டிலிருந்து தொடர்ந்து அப்படியாக வந்து இப்பொழுது இது கடைசி சபைக் காலமாக இருக்கின்றது, இப்பொழுதுதான் நாம் என்ன செய்திருக்கின்றோம் என்பதை கண்டுணர்ந்து அறிந்து கொண்டுள்ளோம், பெந்தெகொஸ்தே என்ன செய்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்கு இதுதான் சமயம் என்று நான் நம்புகிறேன். உண்மையான ஆவியினால் நிரப்பப்பட்ட பெந்தெகொஸ்தே அசைவின் தலைவர்கள், உண்மையான ஆவியினால் நிரப்பப்பட்ட பெந்தெகொஸ்தே அசைவின் கிறிஸ்தவர்கள் ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது என்று கண்டுணர்கின்றனர், ஆனால் அவர்களோ விறைத்து போன ஆர்வமற்ற நிலையில் அப்படியே இருந்து விட்டனர். ஏனென்றால் எல்லோருமே மலை உச்சியில் இருக்கவே விரும்பு கின்றனர். தேவன் இல்லாமல் சென்று விட்டனர். இன்றைக்கு நமக்கு உள்ள தேவை என்னவென்றால் தேவனிடமாகத் திரும்பிச் செல்லுதல், அனுபவத்திற்கு திரும்பிச் செல்லுதல், திரும்பிச் செல்லுதல் என்பதே. ஆகவே, ஏழாவது மணி நேரத்தில் தான் அவர்கள் அங்கே கனியில்லாமல் : அன்பில்லாமல் வெளியே இருந்து விட்டனர் என்பதை கண்டுணர்ந்தனர். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளுதல், ”நீ ஒருத்துவக்காரன், நீ மூன்றாவதுக்காரன், நீ அசெம்பிளீஸ் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன் , நீசர்ச் ஆஃப் காட் சபையைச் சேர்ந்தவன், நீ இதை சேர்ந்தவன், அதைச் சேர்ந்தவன், மற்றதைச் சேர்ந்தவன். ஆதலால் உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை .'' ஒருவருக்கொருவர் அவப்பெயர்களால் அழைத்துக்கொண்டு கெட்ட பெயர்கள் அழைத்துக் கொள்ளுதல். 32. உலகமானது திரும்பிப் உற்றுப் பார்த்து "அந்த ஜனங்களுக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்கின்றனர். இருவருமே இந்த சபையில் அந்நிய பாஷையில் பேசுகின்றனர். தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர். இன்னும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனரே. இந்த சபையில் இருக்கின்ற இந்த நபர்.... அவர்கள் தாமே..... அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதில்லை. ஒருவருக்கொருவர் எந்த ஒரு நாகரீக பண்புடனும் நடந்து கொள்வதில்லை. ஓ, இன்றைக்கு நமக்கு இருக்கின்ற தேவை என்னவென்றால் ஆவியின் கனிக்கு திரும்புதலாகும்; அன்பு, சந்தோஷம், சமாதானம், விசுவாசம், நீடிய பொறுமை. தேவன் அவர்களிடமாக ஒரு வரத்தை அனுப்ப முடியும். ஆனால் அவர்களோ அதை மனோதத்துவ ரீதியில் மனித ஆராய்தல் என்று கூறுகின்றனர். அவர்கள் அதை பிசாசு என்று அழைக்கின்றனர். அவர்கள் அது ஏதோ ஒரு காரியம் என்று அழைக்கின்றனர். ஒரு சபை கூட்டத்திற்கு உதவி செய்கின்றது என்றால் மற்றொன்றும் அதே விதமாகச் செய்கின்றது. இப்பொழுதிற்கு அது சரிதான். ஆனால் இந்த சபைதானே அதனுடன் ஏதோ காரியம் ஆக வேண்டும் என்பதற்காகச் செய்கின்றது, அது நல்லதல்ல, ஓ, என்னே, என்னே . என்ன ஒரு பரிதாபத்திற்குரிய ஒரு நிலை? ஆம் ஐயா. விசுவாசத்தின் கனி , அன்பு, சந்தோஷம், சமாதானம், விசுவாசம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை ஆகிய கனி... பொறுமையா? என்ன, ஏழு நாட்கள் கூட அவர்களால் ஒருவருக்கொருவர் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே, ஏழு மணி நேரத்திற்கு கூட, சில சமயங்களில் ஏழு நிமிடங்களுக்கு கூட பொறுமையில்லையே. தாங்கள் கொண்டிருக்கின்ற ஒரு உபதேசம், மிகவுமாக விரும்பி கைக்கொள்கிற ஒரு சிறிய கோட்பாட்டிற்கு ஒத்துவராத காரியம் ஒன்றை நீங்கள் கூறுவீர்களானால் அவர்கள் மேலும் கீழும் குதித்து சபையை விட்டு வெளியே ஓடிவிடுவார்கள். அவர்கள் அதைக் குறித்து உடனடியாக எழுந்து நின்று சபையை விட்டு வெளியே ஓடிப்போவார்கள். ஓ , அவர் களால் ஒரு நிமிடத்திற்கு கூட உட்கார முடியாது. அவர்கள் சபையிலிருந்து வெளியே அங்கே செல்ல வேண்டியதாயிருக்கிறது. "ஆ..., பாஸ்டர் இன்னார் - இன்னார் கூறுவதுடன் அது ஒத்துப் போவதில்லை. அல்லேலூயா, அந்தவிதமான ஒரு காரியத்தை நான் கேட்கவேண்டிய அவசியமே இல்லை” - வெளியே செல். ஓ, மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவனே... சரி... அதோ, தொடர்ந்து செல்..... 33. ஆனால் அதுதான். உங்களால் காண முடிகின்றதா? அவர்கள் எல்லா கனியையுமே இழந்து விட்டார்கள். நாம் அதை உணர்கின்றோம். ஆவியின் கனி உலர்ந்து காய்ந்து போயிற்று. எல்லாம் உலர்ந்து போயிற்று. மிகவுமாக உலர்ந்து காய்ந்து போய், மாவு போல ஆகி, காற்று வீசும் போது அடித்துச் செல்லப்படுவதற்கு தயாராயிருக்கிறது. அந்தவிதமான ஒரு சூழ்நிலையில் அது இருக்கின்றது. இப்பொழுது நாம் கண்டுணர்வது என்னவென்றால், நம்முடைய பெரிய ஸ்தாபனங்கள், அமைப்பு, தங்களிடமாக தேவனைக் கொண்டிருக்கின்ற வரைக்குமாக, ஆவியின் கனி அதற்குள்ளாக இருக்கும் வரைக்குமாக, அது அன்பு மிகுந்ததாக, தயவு மிகுந்ததாக இருந்து ஐக்கியங்கொள்ள விரும்பி, அடுத்த சகோதரனுக்கு உதவ விரும்புமானால் அவைகள் சரியாக இருக்கும். அவன் என்ன விசுவாசித்தாலும் சரி, அவன் ஒரு சகோதரனாயிருந்து தேவன் அவனுக்கு பரிசுத்த ஆவியை அளித்திருப்பாரானால்... தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு தேவன் பரிசுத்த ஆவியை அளிக்கின்றார். அது சரி. ஆகவே நீங்கள் பரிசுத்த ஆவியை கொண்டிருப்பீர்களானால், மெதொடிஸ்டுகள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பார்களானால், பாப்டிஸ்டுகள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பார்களானால், ஒருத்துவக்காரர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பார்களானால். சர்ச் ஆஃப் காட் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்குமானால், சரி, அப்படி யானால் ஏன் நீங்கள் இன்னுமாக எதைக்குறித்து குழப்பி தொல்லைப் படுத்தி அமளியுண்டாக்குகிறீர்கள்? நாம் ஒன்றாகக் கூடுவோமாக. நாம் முன்னே செல்வோமாக. அது - அதுதான் நமக்குத் தேவையாயிருக்கின்றது. பாருங்கள், ஸ்தாபனம் அல்ல. அந்த ஸ்தாபனத்தில் இருக்கின்ற அந்த முறைமைதான் புறம்பே இழுக்கின்றது. அதைச் செய்வது பிசாசுதான். 34. நாம் காண்பது என்னவென்றால் நம்முடைய எல்லாமே - பெரிய கட்டடங்களையும், பெரிய கட்டடம் கட்டும் திட்டங்களையும் மற்றும் காரியங்களையும் செய்ய முயற்சிக்கின்றோம். நான் கற்பனை செய்து பார்க்கின்றேன் - இந்த நபர்கள், ராஜாக்கள் அந்த மலையின் மீது ஏறிச் செல்கையில், மேலே ஏறிச் செல்கையில், அவர்கள் தங்கள் மிகப் பெரிய உயரமான கட்டடம் கட்டும் திட்டங்கள் உயரச் சென்று கொண்டே இருந்ததைக் கவனித்தனர். கனியோ மிகவும் சிறியதாக, சிறியதாக ஆகிக் கொண்டிருப்பதை கவனித்தனர். அதன்பிறகு, எந்த ஒரு கனியும் கூட இல்லாதிருந்தது. நாம் அவ்வாறாகச் செய்துள்ளோம் என்று எனக்குத் தெரியும். இந்த பெந்தெகொஸ்தே காலத்தினூடாக நாம் தொடர்ந்து வந்திருக்கையில், நம்முடைய காலத்தில் நாம் அதைக் கண்டிருக்கின்றோம். நாம் அந்த ஆரம்ப காலத்தில் திரும்பிச் சென்று பார்ப்போமானால் அல்லது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு கூட்ட மக்கள் ஏளனமாகச் சிரித்து அந்த மக்களைப் பார்த்து பரிசுத்த உருளையர் என்று அழைத்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் அந்த மக்கள் இப்பொழுது நாம் இருப்பதைக் காட்டிலும் இன்னும் அதிக ஆவிக்குரியவர்களாக இருந்தனர். அது சரி. ஆவிக்குரிய விதத்தில் பார்ப்போமானால், இப்பொழுது உள்ளதைக் காட்டிலும் அப்போது இருந்த ஒவ்வொரு ஸ்தாபனங்களும், சபையும் நல்ல ஒரு விதத்தில் இருந்தனர். "ஓ நிச்சயமாக! நாங்கள் இலட்சக் கணக்கான மதிப்பு நிறைந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கின்றோம்.” ஆம், தேவனுக்கு அது ஒன்றுமே கிடையாது. யோவான் எப்படி தன் மீது ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டு இயேசுவை அறிந்திருந்தானோ அதைப்போல நானும் நிறைய வைத்திருக்காமல் சிறிது துணிகளையே வைத்திருப்பதையே விரும்புவேன். என் இருதயம் அவருக்கு முன்பாக எந்த ஒரு மாசும் இல்லாமல் சுத்தமாகவும் இருக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆம், நிச்சயமாக, உலகத்தின் எல்லா செல்வங்களை வைத்திருப்பதைக் பார்க்கிலும் அதுவே போதுமானது. 35. ஆனால் காரியம் என்னவென்றால் சபையானது தேவன் இல்லாமல் புறப்பட்டுச் சென்றது. அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அது இல்லாமல் - அப்பொழுது ஆவியின் கனியானது சபையை விட்டுச் சென்று விட்டது என்பதை கண்டனர். நீடிய பொறுமை, அவர்களில் சிலர் அதிக கோபம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஏன், அந்த கோபமானது ஒரு பெரிய சக்கரம் போல அமைந்து சுழலுகின்ற ஒரு அறுவாளையும் கூட எதிர்த்து சண்டை போடும். அதன்பிறகு பரிசுத்த ஆவியைக் குறித்து பேசும். பாருங்கள்? பாருங்கள், ஆவியின் கனியோ அன்பின் ஆவி மற்றும் சந்தோஷம், நீடிய பொறுமை. பொறுமையோடு இருந்திருக்கிறீர்களா? ஆம், சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மாத்திரமே. அவ்வளவுதான். அதன் பிறகு மறுபடியும் கோபம் தெரித்து வரும். நீங்கள் பாருங்கள். ஆகவே நீடிய பொறுமை, கனிகள் எல்லாம் உலர்ந்து காய்ந்து போயிற்று. நம்முடைய பெரிய கட்டடம் கட்டும் திட்டங்கள் அதிகரித்து பெரியதாக நிற்கின்றது. அது சரி. நம்முடைய பெரிய கல்வி திட்டங்கள் எல்லாம் அதிகரித்து மேலே நிற்கின்றது. நம்முடைய பாஸ்டர்கள் நன்றாக அதிக கல்வி கற்றிருக்கின்றனர். ஓ, என்னே, என்னே . நாம் அந்த நிலைக்கு மேலே செல்கையில் உறையும் குளிரில் கூட நிறைய பட்டங்களை பெறுகிறோம். மலை உச்சியில் அந்த நேரத்தில் சீதோஷண நிலை பூஜ்ஜயத்திற்கு நாற்பதுக்கு கீழே இருக்கும். ஓ, ஐயா. 36. ஆனால் அதை எல்லாவற்றை பெற்றிருக்கிறோம். அது சரி, நாம் காண்பது என்னவென்றால், நாம் மேலே ஏறிக்கொண்டேயிருக்கின்றோம். ஆனால் எல்லா கனியும் காரியங்களும் நம்மை விட்டு அகன்று கொண்டேயிருக்கின்றன. ஜீவ தண்ணீர் எல்லாமே வற்றிக் கொண்டிருப்பது போலத் தெரிகிறது. நித்திய ஜீவனாக இன்னுமாக இல்லை. அது ஏறக்குறைய எப்படி இருக்கிறதென்றால் - அன்று இரவு நான் கூறினது போல மேய்ப்பர்கள் (Pastors) மிகவும் நேரமில்லாமல் இருக்கிறார்கள். மக்களும் தங்கள் சபையிலிருந்து மற்றொரு சபைக்கு மற்றொரு சபையிலிருந்து தங்கள் சபைக்கு அங்கத்தினர்கள் பரிமாற்றத்தைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு பிணத்தை ஒரு பிணவறையிலிருந்து இன்னொரு பிணவறைக்கு மாற்றுவது போல, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வது. அது - அது உண்மையே. அவர்களில் சிலர் வறுத்தெடுக்கப்படு கின்றனர். மற்றவர் குளிர்ந்த நிலையில் உறைந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே அந்த விதமாகத்தான் ஸ்தாபனம் செய்தது. நான் ஏற்கெனவே கூறியுள்ளேன், சில கொள்கைகளை உள்ளே எடுத்துக் கொள்வது, அதன் பிறகு சிறிது காலம் கழித்து அது நடைமுறைக்கு ஒத்ததாக இல்லை என்பதாக அந்த கொள்கைகள் மாறிவிடுகிறது. இதோ இது நிலைமை. உங்களுக்கு புரிகிறதா? ஆகவே அந்த ஒரு நிலைக்குதான் சபை வந்திருக்கின்றது, எல்லா இடங்களிலும் ஆவியின் கனி உலர்ந்து காய்ந்துபோய் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் ஆவியின் கனி உலர்ந்து காய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் அப்படியாக இருப்பதைப் பார்க்கின்றோம். அது உண்மை என்று கூற வகையுண்டு. ஏனென்றால் அது அவ்விதம்தான் இருக்கின்றது. 37. ஆகவே நாம் கண்டது என்னவென்றால் அவர்கள் அங்கே பாலைவனத்தில் மரித்துக் கொண்டிருந்தனர். என்ன ஒரு பயங்கரமான நிலைமை, தேவன் இல்லாமல் புறப்பட்டுச் சென்றபடியால், அவர்கள் அப்படியாக அந்த நிலைமைக்கு செல்லும்படிக்கு ஆயிற்று ஓ, அவர்கள் ஏழு நாள் திசை காட்டியை (Compass) வரவழைத்தனர். ஓ நிச்சயமாக. அவர்கள் இரவு முழுவதும் பார்த்தனர். அவர்கள் தங்களை சுட்டிக் காட்டி "நாங்கள் - நாங்கள் இன்னார் - இன்னார் மற்றும் அந்த இன்னார் இன்னார்” என்று கூறினர். அது உண்மைதான், ஆனால் தேவன் எங்கே? அது தான் அந்த காரியத்தில் தேவன் எங்கே? நாம் பெரிய சபைகளை வைத்திருக்கிறோம். அந்த கட்டடங்களின் உச்சியில் பெரிய கோபுர கூம்புகளை வைத்திருக்கிறோம். பெரிய சிலுவைகளை வைத்திருக்கிறோம். மிகவும் உச்சிதமான இருக்கைகளை வைத்திருக்கிறோம். பெந்தெகொஸ்தே மக்களாகிய நாம் அவர்களை எந்த ஒன்றிலாவது நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பணம் பாய்ந்து செல்லுகின்றது. யாருக்கு - மிகச் சிறந்த விதத்தில் ஆடை, உடுத்தியுள்ள மக்கள் கூட்டம், சகோதரனே, காடிலாக் கார்கள் எல்லாவிடங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதில் தேவன் எங்கே? தேவன் எங்கே? அப்பொழுது அவர் அதன் நடுவில் வரும்போது அவர்களில் அநேகர் "ஆ, இப்பொழுது அதற்கு செவிகொடுக்காதீர்கள். அது - அது அர்த்தமற்ற ஒன்றாகும். அதற்கு எந்த ஒரு கவனத்தையும் செலுத்த வேண்டாம்" என்று கூறுகின்றனர். பாருங்கள்? மரித்த கட்டைகள், அதற்கு அவ்வளவுதான் இருக்கின்றது. இப்பொழுது, அது சரியே. நீண்ட காலத்திற்கு முன்னரே கனிகள் காய்ந்து உலர்ந்து போயிற்று. ஓ , என்னே ஒரு பயங்கரமான மணி நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 38. இந்தவிதமான ஒரு நேரம் வரும்போது, முதல் காரியம் என்ன தெரியுமா, அவர்களுக்கு தண்ணீர் இல்லாமல் போய்விடும். அவர்களுக்கு தண்ணீர் இல்லாமற்போயிற்று. அப்பொழுது "ஐயோ, ஐயோ, ஓ தேவனே, நீர் எங்களுக்கு இந்த பெரிய கட்டடங்களை கொடுத்து நல்ல தேவனாக எங்களுக்கு இருந்தீர்" என்று கூக்குரலிட ஆரம்பித்தனர். அவர்களில் அநேகர் “ஜீவ தண்ணீ ர் எங்கே?” என்று அழ ஆரம்பித்தனர். கம்யூனிஸம் உள்ளே வந்து கொண்டிருப்பதை காண்கின்றனர். உலகம் அதன் முடிவின் சமயத்தில் இருக்கிறது என்பதையும் காண்கின்றனர். தீர்க்கதரிசிகளும் முடிவு சமீபமாயிருக்கிறது என்றும் இன்னும் பிறவற்றையும் தீர்க்கதரிசனமாக உரைத்துக் கொண்டிருக் கின்றனர், ஆனாலும் நாம் "தண்ணீர் எங்கே இருக்கின்றது?” என்று வினவிக்கொண்டிருக்கிறோம். என்ன நடந்தது? அப்பொழுது அங்கே கதறிக்கொண்டிருந்த ஒரு நீதிமான் இருக்க நேர்ந்தது. அவன் "நாம் போய் சந்திக்கும்படிக்கு எங்காவது ஒரு தீர்க்கதரிசி இருக்கின்றாரா? எங்காவது ஒரு தீர்க்கதரிசி இருக்கின்றாரா?" என்று கேட்டான். அந்த நீதிமானான யோசபாத் உரத்த சத்தமிட்டான். " ஒரு தீர்க்கதரிசி ஒருவரும் இல்லையா? நாம் ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கின்றோம். இதைக்குறித்து விசாரித்து அறியும்படிக்கு எங்காவது ஒருவர் இல்லையா ?” என்றான். 39. இப்பொழுது, நாம் ஒருவரிலிருந்து ஒருவர் நம்மை பிரித்து கொண்டு, விசுவாசம் இல்லாமல் இருக்கின்ற ஒரு நிலைக்கு, இடத்திற்கு நம்முடைய ஸ்தாபனங்கள் நம்மை கொண்டு வந்திருக்குமானால், அப்படியானால் எங்கோ ஓரிடத்தில் ஏதோ தவறு இருக்கின்றது. இப்பொழுது நீதிமான்கள் "தேவனுடைய மனிதன் எங்கே? நமக்கு காரியங்களை கூறுகின்ற நபர் எங்கே?” என்று கதறிக் கொண்டிருக் கின்றனர். அவர் இங்கே பரிசுத்த ஆவி என்னும் நபருக்குள்ளாக இன்றிரவு இருக்கின்றார். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறக்கூடிய ஒருவர் அவர் தாமே. உங்கள் இருதயங்கள் குத்தப்படும்படிக்குச் செய்கிற ஒருவர் அவர்தாமே. அவர்தாமே உங்கள் பாவங்களை வெளிகொணர்கிறவர் ஆவார். அவர் தாமே உங்களிலிருந்து சந்தேகத்தை, நடக்கும் என்று நினைக்கிறேன் என்று நினைப்பதை வெளியே எடுத்துப் போட்டு உங்களுக்குள்ளாக அது நிச்சயம் நடக்கும் என்ற எண்ணத்தை வைப்பவர் ஆவார். அதைச் செய்ய கூடிய ஒரே ஒருவர் அவர்தான் , பரிசுத்த ஆவி என்று அழைக்கப்படுகின்ற தேவன் என்னும் நபர்தாமே. இப்பொழுது இங்கே பிரசன்னமாயிருக்கிறவர் அந்த அவர்தாமே. 40. இப்பொழுது நாம் காண்பது என்னவென்றால் அவர்கள் எல்லாரும் ஐயோ என்று கதற ஆரம்பித்தனர். கனிகள் எல்லாம் இல்லாமல் போய்விட்டது போல காணப்பட்டது. அவைகள் உலர்ந்து கீழே விழுந்து விட்டன, அவை தண்ணீர் இல்லாமல் இருந்தன. அப்பொழுது அவர்கள் - நீதிமானான அந்த மனிதன் , தெரிந்து கொள்ளப்பட்ட அந்த ஒருவன் நாம் விசாரிக்கும்படிக்கு ஒரு தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா? இந்த சூழ்நிலையிலிருந்து நாம் எப்படி வெளியேறலாம் என்று நன்றாக அறிந்திருந்து நமக்கு அதை தெரியப்படுத்துகின்ற ஒருவர் இங்கே இல்லையா, இங்கே குழப்ப நிலையில் இருக்கிற நம்மை சேர்ந்திராத ஒருவர் இல்லையா, நாம் எல்லாரும் இங்கே வந்திருக்கிறோம். ஒரு உடன்படிக்கையை, கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். நாம் எல்லாரும் இங்கே ஒன்று சேர்ந்து இந்த மலை உச்சிக்கு வந்துள்ளோம். நாம் யுத்தத்திற்கு போகிறோம். ஆனால் யுத்தம் செய்வதற்கு நம்மிடம் ஒன்றுமே இல்லை” என்று கூறினான். இன்று சபை அந்த விதமான ஒரு நிலையில்தான் இருக்கின்றது. நாம் அநேக அங்கத்தினர்களைக் கொண்டிருக்கிறோம். எல்லாரும் மரித்த நிலையில் இருக்கின்றனர். நாம் பெரிய மகத்தான ஸ்தாபனங்கள் நிறைய வைத்திருக்கின்றோம். அவை மரித்துப்போயிருக்கின்றன. உற்சாகம், ஆர்வம் நம்மிடையே அதிகம் இருக்கின்றது. அது தவறான வழியில் இருக்கின்றது; யாரால் சிறந்த விதத்தில் உடை உடுத்த முடியும் மற்றும் யாரால் பெரியவராக முன்னே செல்ல முடியும். யாரிடம் சிறந்த பள்ளி இருக்கின்றது. எல்லா விளையாட்டு அணிகளை வெல்லக்கூடிய அணி யாரிடம் இருக்கின்றது அல்லது பங்கோ விளையாட்டை (ஒருவித்தாய விளையாட்டு - தமிழாக்கியோன்) சிறந்த விதத்தில் விளையாடக் கூடியவர் யார். அதைப் போன்ற ஒன்றை செய்யக்கூடியவர் யார் என்றே உள்ளது. அந்த காரியங்களில் ஒன்று கூட அல்ல, நமக்கு தேவன் தான் வேண்டும். மறுபடியும் தேவனிடமாக திரும்பி வாருங்கள் 41. "எங்கே இருக்கின்றார்? என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு கூறுகின்ற ஒரு தீர்க்கதரிசி எங்காவது இருக்கின்றாரா? நாம் விசாரிக்கும்படி யாராவது ஒருவர் அங்கே இருக்கின்றாரா?" ஓ, என்ன ஒரு பரிதாபத்திற்குரிய நிலைமை. அது அந்த நீதிமானின் கதறலாக இருந்தது. அவர்கள் மத்தியில் ஒருவன் மாத்திரமே இருந்தான். அவன் தான் யோசபாத். அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான். ஆனால் அவன் தவறான கூட்டாளிகளுடன் சேர்ந்திருந்தான். இன்றிரவு அந்த நிலைமைதான் இருக்கின்றது. அநேக நல்ல மனிதர், நிறைய பேர் உள்ளனர். அவர்கள் எல்லாரும் அங்கே இருக்கின்ற ஸ்தாபனங்களில் இருக்கின்றனர். எல்லாரும் எல்லாவிடங்களிலும் இருக்கின்றனர். அருமையான மனிதர் ஆவர். ஆனால் நாம் ஒரு உண்மையை எதிர்கொள்ளுகிறோம். நாம் ஒன்றை எதிர்கொள்ளு கிறோம். கிறிஸ்தவ சபையானது எவ்வளவாக மனோதத்துவத்தை, உளவியலை வெளியே காண்பிக்கின்றதோ அதே போல முகமதியே மதமும், புத்த மதமும் மற்ற கொள்கைகளும் மனோத்தத்துவத்தை உளவியலை வெளியே காண்பிக்கின்றது. அது சரியே. மனோதத்துவ, உளவியல் அசைவு நமக்கு தேவையல்ல, வேதகலா சாலையின் அசைவு நமக்கு தேவையல்ல, நமக்கு தேவையானது என்னவென்றால் பரிசுத்த ஆவியின் அசைவு சபைக்குள்ளாக இருந்து மக்கள் முன்பிருந்த தேவன் எங்கே? பெந்தெகொஸ்தேயின் தேவன் எங்கே? ஒரு பாவியின் இருதயத்தை எடுத்து அதை வெண்பனியைப் போல வெண்மையாக கழுவும் தேவன் எங்கே? தெருவில் இருக்கின்ற ஒரு விபச்சாரியை எடுத்து அவளை நன்மதிப்புள்ள ஒரு சீமாட்டியாக மாற்றுகின்ற, பாரில் (Bar) மது அருந்துகின்ற ஒரு குடிகாரனை எடுத்து அவனை ஒரு பிரசங்கியாக மாற்றுகின்ற அவர் எங்கே? காட்சியில் வந்து, முடமான கால்களை எடுத்து அதை சீராக்குகின்ற, குருடான கண்களை பார்க்கும்படிக்குச் செய்கின்ற, செவிடான காதுகளை எடுத்து அதற்கு கேட்கும் திறனை அளிக்கின்ற, புற்று நோய் மாயமாக மறையச் செய்கின்ற அந்த தேவன் அதைச் செய்த தேவன் எங்கே?" என்று கூக்கூரலிடுகின்ற காரியம்தான். அதுவே தான். 42. ஏதோ தவறாயிருக்கிறது என்று நாம் கண்டறிந்தோம். முன்றொரு இரவில் வரலாற்றிலே மிக வேமாகச் சென்ற மகத்தான துரித செய்தி என்னும் தலைப்பின் பேரில் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது... வயது சென்ற யோவான் தீர்க்கதரிசியான யோவானின் கண்கள் திரையிடப்பட்டிருந்தன. அவன் எலியாவின் ஆவியைக் கொண்டவனா யிருந்தான். எலியாவும் சூரைச் செடியின் கீழ் இருந்தபோது சற்று தளர்ச்சியுற்றான். யோவான் சிறைச்சாலையில் இருந்த போது தளர்ச்சியுற்றான். யோவான் மிகவுமாக கண்டிப்பான , உரத்த சத்தமாகப் பேசின ஒரு தீர்க்கதரிசியாவான். அவனுடைய பேச்சு எப்பொழுதும் படப்படப்பாக இருக்கும். ஆனால் பிறகு அவனுடைய கழுகு கண்களானது திரையிடப் பட்டிருந்தது. அவன் “நான் தவறாகக் கூறிவிட்டேனா என்று போய் பாருங்கள். அந்த அவர் நீர்தானா - அவர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா என்று இயேசுவைக் கேளுங்கள்” என்று கூறினான். அப்பொழுது இயேசு அவனுக்கு "சிறைச்சாலையில் இருக்கும் போது பொறுமையாக இருப்பது எப்படி” அல்லது அதைப்போன்ற எந்த ஒரு புத்தகத்தையும் கொடுத்தனுப்ப வில்லை. அவர் என்ன கூறினார்? அவர் யோவானின் சீஷர்களிடம் என்ன கூறினார்? அவர், "நீங்கள் இங்கேயே தங்கியிருந்து இந்த பிற்பகல் நடக்கவிருக் கின்ற கூட்டத்தைப் பாருங்கள், பிறகு புறப்பட்டுப்போய் யோவானிடம் காண்பியுங்கள்” என்றார். சப்பாணிகள் நடக்கிறார்கள், குருடர் பார்வையடைகிறார்கள்... யோவான் பிரசங்கித்த சுவிசேஷமானது, மேசியா வரப்போகின்றார் என்றும், தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, நிச்சயமாக, பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். ஆனால் அவர் வந்தபோதோ, அவர் ஒரு சிறிய தாழ்மையான நபராக இருந்தார். மிகவும் தாழ்மையான மற்றும் கீழான ஒரு நிலை. யோ ..... அவர் எப்படியாக இருப்பார் என்று யோவான் நினைத்ததற்கு அது ஒத்துப்போகவில்லை. ஆனால் அவர் "நான் என் கால அட்டவணையின்படி சரியாக இயங்கிக்கொண்டிருக்கிறேன் என்று யோவானிடம் நீங்கள் கூறுங்கள். எல்லாம் சரியாக இருக்கிறது. எல்லா காரியமும் சரியாக இருக்கின்றது” என்று கூறினார். 43. இன்றிரவும் அதே விதமாகத்தான் இருக்கின்றது. சபை, உலக மக்கள் மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட் , பிரஸ்பிடேரியன், அல்லது ஏதோ ஒரு சபையானது கிறிஸ்து மறுபடியும் வரும்படியாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால் அவரோ சரியான நேரத்தில் வந்திருக்கின்றார். சப்பாணிகள் நடக்கிறார்கள். குருடர் பார்வையடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள். மகிமை. அவர் கால அட்டவணையின்படி சரியான நேரத்தில் அவர் இயங்கிக் கொண்டிருக் கிறார். ஆமென். எதுவுமே தவறவில்லை. அவர் சரியாக முன்னே சென்று கொண்டிருக் கின்றார். தேவன் இன்னுமாக ஜீவிக்கின்றார். அவர் இன்னுமாக தேவனாயிருக்கின்றார். 44. ஆகவே இந்த நீதிமான் "நாம் விசாரித்து அறிகிறதற்கு ஒரு தீர்க்கதரிசி எங்காவது இல்லையா” என்று சத்தமிட்டான். அப்பொழுது அவர்கள் மத்தியில் ஒரு நல்ல சகோதரன் இருந்தான் . அவன் "ஆம், ஆம், அப்படிப்பட்ட மனிதன் ஒருவர் எனக்கு - எனக்குத் தெரியும்” என்று சொல்வதை என்னால் கேட்க முடிகின்றது. அவன் யோராமை திரும்பிப் பார்த்து "இதோ, நீர் அவரை விசுவாசிக்கப்போவதில்லை. அது சரியாக இப்பொழுதே எனக்குத் தெரியும். நீர் அந்த நபரை விசுவாசிக்கமாட்டீர். ஏனென்றால் உங்கள் தகப்பனும் அவரை விசுவாசிக்கவில்லை" என்று சொல்லுவதை என்னால் கேட்க முடிகின்றது. (நிச்சயமாக அவன் விசுவாசிக்கவில்லை) "உங்கள் தகப்பன் அங்கே மேலே மலை உச்சியில் ஒரு கூட்டம் தீர்க்கதரிசிகள் குழுவுடன் அல்லது அப்படியாக அழைக்கப்பட்ட ஒரு குழுவுடன் ஒரு பள்ளியை அங்கே வைத்திருந்தாரே, அவர்களும்கூட அவரை விசுவாசிக்கவில்லை , ஏன், அவர்கள் கூறினது... அந்த மனிதனை எனக்குத் தெரியும். அவனுடைய தகப்பனின் ஆவி அவனின் மீது இருக்கிறது. அவன் தகப்பன் செய்த அதே காரியத்தை இவனும் செய்கிறான். எலியா செய்தது போலவே இவனும் அதே விதமாகச் செய்கிறான் . எலியாவின் ஆவி எலிசாவின் மீது இறங்கினது. அவனுடைய கூட்டங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அது உண்மை என்று எனக்குத் தெரியும்." - ஆமென் . தேவன் நமக்கு உதவி செய்வாராக. அதுதான் நமக்குத் தேவையாயிருக்கின்றது : அந்தவிதமான கூட்டங்கள் தான் , அதிலே நாம் நம்முடைய பிதாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஆவியைக் காண்கிறோமே, அதற்கு நிழலாக, முன்னடையாளமாகத்தான் எலியா இருந்தான் . பாருங்கள். அந்த ஆவி...” என்னை விசுவாசிக் கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” ஓ, சகோதரனே. அவர்தான் அந்த ஒருவர் ஆவார். 45. அந்த அருமையான சகோதரன் தொடர்ந்து அந்த மனிதன் எங்கே இருக்கின்றார் என்று எனக்குத் தெரியும். எலியாவின் ஆவி அவர் மீது இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அவர் எலியாவின் கைகளில் தண்ணீர் ஊற்றினார். எலியாவுடன் இவரும் இருந்தார். ஆகவே எலியாவின் ஆவி எலிசாவின் மீது தங்கியிருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். யோராமே, அதை நான் அறிவேன். உன்னால் அதை விசுவாசிக்க முடியாது. அங்கே உள்ள உன் தீர்க்கதரிசிகள் குழுவினரும் கூட அதை விசுவாசிக்கமாட்டனர். அவர்கள் ஏன் விசுவாசிக்க மாட்டார்கள் என்பதை நானே உனக்கு கூறுகிறேன், ஏன் தெரியுமா, இதோ அதன் காரணம். எலிசா திரும்ப வந்து அவர்களை நோக்கி எலியா மேலே எடுத்துக்கொள்ளப்பட்டான் என்று கூறி, அந்த ஆவியின் பங்கு தன் மேல் இரட்டிப்பாக இருக்கின்றது என்று கூறினான். அதற்கு அவர்கள் "இந்த மனிதன் தன் சரியான மன நிலையை இழந்துவிட்டான் . எலியாவை தேடுவதற்காக சுமார் ஐம்பது பேர் கொண்ட தேடுதல் குழுவை தயார் செய்யுங்கள். அவர்கள் தாமே எலியாவைத் தேடட்டும்.... எலியா மேலே ஏறிப் போகவேயில்லை. அவன் எங்கோ ஓரிடத்தில் இருக்கின்றான் என்றார்கள்" என்று கூறினான். அப்பொழுது அவர்கள் - நாம் நம்முடைய எல்லா ஸ்தாபன முறைகளையும் கொண்டு தேடி முயற்சி செய்து பார்த்து விட்டோம். ஓ, என் மீது கோபம் கொள்ளாதீர்கள், ஆனால் நான் உங்களுக்கு இதைக் கூறட்டும். இந்த ஸ்தாபன முறைமைகள் தாமே மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட கர்த்தராகிய இயேசுவை தங்கள் கல்வி திட்டங்கள் மூலமாகவும் வேத கலாசாலை மூலமாகவும் அவரை தேடி கண்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவர் எங்கே உள்ளார் என்று கண்டு கொள்ள தவறிப்போயினர். ஆமென். அவர் மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதகலாசாலை படிப்பின் மூலமாக வருவதில்லை . அவர் ஸ்தாபனங்களின் மூலமாக வருவதில்லை . அவர் சரணடைந்த ஒரு இருதயத்தின் மூலமாகவும், நம்முடைய இருதயத்திற்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மூலமாகவும் வருகின்றார். ஆமென். 46. நம்முடைய மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபனங்களால் அவரைக் காண முடியவில்லை . ஓ, அவர்கள் தேடுதல் குழுக்களை ஆயத்தம் பண்ணி புறப்பட்டுச் சென்று அவரைத் தேடுகின்றனர். "ஓ, இல்லை. ஆவியானவர் அந்த மனிதனை தூக்கிச் செல்லவில்லை. இப்பொழுது சற்று புத்தியுள்ள மனிதராய் இருங்கள். நாமெல்லாரும் இளங்கலையியல் பட்டத்தையும் மற்றும் பிறவற்றையும் பெற்றியிருக் கிறோம் என்பதை நமக்குத் தெரியும். ஆகவே அதைப் போன்ற ஒரு காரியத்தைக் காட்டிலும் நமக்கு - நமக்கு இன்றும் நன்றாக அதைக் குறித்துத் தெரியும். இங்கே நம் மத்தியில் இருந்த ஒரு மனிதன், நம்முடன் சோள ரொட்டியை சாப்பிட்ட ஒரு மனிதன். என்ன, அந்த மனிதன் அக்கினி இரதத்தினால் மேலே எடுக்கப்பட்டிருக்க முடியாது. அந்த பையன் இப்பொழுது மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான். அவன் அங்கே நதிக்கு அப்பாலே சென்றிருந்தான். அவன் அதிக அளவில் தீவிர மூட பக்தியினால் நிரப்பப்பட்டு வந்துள்ளான். ஆகவே அவனைக் காட்டிலும் நமக்கு காரியம் அதிகமாத் தெரியும். அந்த வயதான கிழவனை அப்படியே விட்டுத் தள்ளுங்கள். அவனுடைய வழுக்கைத் தலை மிகவும் சூடாகி விட்டது என்று உங்களுக்குத் தெரியும். ஆகவே அவன் தானே.. அவனை சிறிது அப்படியே விட்டுவிடுங்கள். நீங்கள் எல்லாரும் அங்கே செல்லுங்கள், அங்கே என்ன நடந்தது என்று பார்த்து அறியுங்கள். அந்த மனிதனை தேடும்படிக்கு தேடுதல் குழுக்களை அனுப்புங்கள்.” அதற்கு அவன் அப்படியே தொடர்ந்து செய்யுங்கள். ஆனாலும் நீங்கள் அவரைக் காண மாட்டீர்கள்'' என்றான். என்னை நீங்கள் பரியாசம் பண்ணுங்கள். வேண்டுமானால் நீங்கள் என்னை ஒரு முட்டாள் என்று கூப்பிடுங்கள். ஆனால் தேவன் தாமே...... நீங்கள் அவரை உங்கள் ஸ்தாபன முறைமைகளில் ஒருபோதும் காணவே முடியாது. இல்லை ஐயா. அவர் மேலே உயரே எடுக்கப்பட்டார். அவர் மறுபடியுமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற ரூபத்தில் வருகின்றார். ஆகவே உங்களால் அதை மக்களுக்கு கல்வியறிவினால் காட்டவே முடியாது. அவர்கள் அதற்குள்ளாக பிறக்க வேண்டியவர் களாக உள்ளனர். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்க வேண்டுமே தவிர அதற்கு குறைவாக ஒன்றுமே செல்லுபடியாகாது. ஏதோ ஒரு மனக்கிளர்ச்சி, சற்று உணர்ச்சி வயப்படுதல், அல்லது பக்திபூர்வமான முறைமைகள் அல்லது அடையாளம் அல்ல, ஆனால் அது உண்மையான அசலான பரிசுத்த ஆவியாக இருக்க வேண்டும், அது அன்பு, சந்தோஷம், விசுவாசம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், பொறுமை ஆவியின் கனியைப் பிறப்பிக்கின்ற ஒன்றாக இருக்க வேண்டும். அதுதான். அதுதான் காரியமாகும். ஆம். 47. நிச்சயமாக யோராமால் அதைச் செய்ய முடியவில்லை . அவன் அதை விசுவாசிக்கப் போவதில்லை. அவன் - நீங்கள் பாருங்கள், அவர் களால் அதை விசுவாசிக்க முடியவில்லை . அந்த குழுவினர் "இதோ, ஒரு நிமிடம் இங்கே காத்திருங்கள். இதோ இந்த ஆளிற்கு மிகவும் பைத்தியம் பிடித்து விட்டது ஆகவே அவன் அப்படியே இருக்க விட்டு விடுவோம், நாம் நம்முடைய குழுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து புறப்பட்டுச் சென்று எலியாவை தேடி கொண்டு வருவோம். அவன் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கின்றான் " என்று கூறினர். அதைத்தான் நாமும் இரண்டாயிரம் வருடங்களாக முயற்சி செய்து கொண்டு வருகிறோம். பெந்தெகொஸ்தே மக்களாகிய நீங்கள் அதே காரியத்தைத்தான் செய்துக் கொண்டுவருகிறீர்கள். இயேசுவை ஸ்தாபனத்தின் மூலமாக பார்க்க முயற்சிக்கிறீர்கள். உங்களால் காணவே முடியாது. மற்ற சகோதரர்களிடமிருந்து உங்களை வேறுபிரித்துக் கொண்டு அதைச் செய்யவே முடியாது. நீங்கள் திரும்பி வர வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள், நாம் எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டியவர்களாக உள்ளோம். மனிதன் தவறாக இருந்தால் எனக்குக் கவலையில்லை . அவன் தவறாக இருந்து தன்னுடைய இருதயத்தில் உத்தமமாக இருக்கின்றான், நீங்களும் உங்கள் நம்பிக்கையில் சரியாக இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் செயல்படுகின்ற விதமானது தவறாக உள்ளது. நான் உங்களுடைய இடத்தில் இருப்பதற்கு பதிலாக அவனுடைய இடத்திலேயே இருப்பேன். அது சரி. நான் என்னுடை ருதயத்தில் சரியாயிருந்து அதற்கு மாறாக என்னுடைய போதகத்தில் தவறாக இருப்பேன் . தேவன் அதை இன்னுமாக கனம் பண்ணுவார். ஆகவே ஒரு மனிதன் தவறாயிருப் பானால், அதனால் என்ன? அவனுக்கு உதவி செய்யுங்கள். அவனுக்கு உதவி தேவைப்படுகின்றது. அவனை நேசியுங்கள். உங்களை சிநேகிக் கிறவர்களை நீங்கள் சிநேகிப்பது போல உங்கள் சத்துருவை உங்களால் சிநேகிக்க முடியவில்லையென்றால் நீங்கள் ஆயக்காரர்களை விட மேலான நிலைமையில் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறீர்கள். அது சரி. அதைத் தான் சபையானது கொண்டிருக்கத் தவறி விட்டது. இன்றிரவில் நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்பதை நீங்கள் காண்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். 48. அது அன்பிற்கு, மீட்கின்ற அன்பிற்கு திரும்பவும் வருவதுதான். மற்ற எல்லா காரியமும் அருமையானதுதான், ஆனால் நாம் ஒருவருக்கொருவர் கொள்ளும் ஐக்கியத்திற்கு திரும்பி வர வேண்டியவர்களாக இருக்கின்றோம். நான் ஸ்தாபனங்களை எதிர்த்து சண்டை போடுகிறேன் என்று மக்கள் கூறினர். நான் அப்படிச் செய்வதில்லை . சகோதரத் துவத்தை உடைத்துப்போடும் அந்த முறைமையைத் தான் எதிர்த்து போராடுகிறேன். எப்பொழுதும் அதை செய்வேன். அது சரி. அதுதான் சகோதரத்துவத்தை பிரிக்கின்ற காரியமாகும்... எல்லாரும் ஒன்று சேருவோம். நாம் சகோதரராய் இருப்போம். அன்றொரு நாள் காலையில் (அந்த ஊழியக்காகரர் காலை உணவு கூட்டத்தில்) நாம் இருந்த விதமாக ஒவ்வொரு சபையும், இந்த நகரத்தில் இருக்கின்ற ஒவ்வொரு சபையும், ஒருத்துவக்காரர், இருத்துவக்காரர், திரித்துவக்காரர் எல்லாரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் தங்கள் கரத்தை போட்டுக் கொண்டு இருப்பதை நான் காண்பேனானால், அந்த வயதான சிமியோன் "இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர். உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" கூறினதுபோல நான் கூறுவேன். அது சரியே. நீங்கள் அதை ஒரு சிறிய பிரிவினர் வரைக்குமாக உடைத்து உடைத்துப் போடலாம். அதன் பிறகு முதல் காரியம் என்ன தெரியுமா, பிசாசு அங்கே மறுபடியுமாக உள்ளே இருப்பான், அதை இன்னுமாக உடைப்பான். அப்பொழுது உங்களால் ... எல்லாம் முடிந்து போயிருக்கும், உங்களால் அதைச் செய்யமுடியாது. என்றாவது ஒரு நாளிலே அப்படியாக அது நடந்திருக்கும். தேவன் அவர்களுக்கு ஒரு தண்டனையை அனுப்புவார். அப்பொழுது அவர்கள் அதை பெறத்தான் வேண்டியவர் களாக இருப்பார்கள். 49. ஆகவே பிஷப் யோராம், அவனால் அதை விசுவாசிக்க முடியாது. அவனால் அதை விசுவாசிக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். ஏனென்றால் அவனுடைய பிதாக்கள் அதை விசுவாசிக்கவில்லை. எலியா மேலே எடுக்கப்பட்டான் என்று விசுவாசிக்கவில்லை. ஆகவே அவன் எப்படியாக இதை விசுவாசிக்கப்போகிறான்? வீணான வேதாகம கல்லூரி பாடத்திட்டத்தினாலே அவர்கள் தேடுவார்கள். "இதோ பார், நாங்கள் தீர்க்கதரிசிகளின் குழு , புத்திரர் ஆவோம். நாங்கள் எல்லாவற்றையும் சரியாக ஏற்பாடு செய்துள்ளோம். அவன் சரியாக என்ன செய்யவேண்டியவனாக இருக்கின்றான் என்று எங்களுக்குத் தெரியும். அவன் எப்படியாக அதைச் செய்யவேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால் வந்து "நான் - நான் விசுவாசிக்கிறேன்" என்று தான் கூற மாத்திரம் வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். பிறகு எல்லாரும் கைகளை குலுக்குவார்கள். பிறகு நாங்கள் இந்த விதமான தண்ணீர் தெளிப்போம் அல்லது இந்த விதமாக ஞானஸ்நானம் கொடுப்போம். அல்லது இந்த விதமாக பின்புறமாகவோ அல்லது அந்த விதமாக முன்புறமாகவோ அமிழ்த்தி ஞானஸ்நானம் கொடுப்போம் அல்லது.. (ஓ, என்னே.) நாங்கள் அதை பெற்றுள்ளோம்.” இப்பொழுது, அந்தவித மாகத்தான் அவன் செய்கின்றான். நீங்கள் தொடர்ந்து சென்று இந்த விதமாக ஞானஸ்நானம் கொடுங்கள், அந்த விதமாக ஞானஸ்நானம் கொடுங்கள். இந்த விதமாக தெளிப்பு ஞானஸ்நானம் அந்த விதமாக தண்ணீர் தெளிப்பை செய்யுங்கள், இராபோஜனத்தை இந்த விதமாக கைக்கொள்ளுங்கள், அந்தவிதமாக கைக்கொள்ளுங்கள். ஆனாலும் பார்க்கப்போனால் தேவன் உங்களிடமாக இல்லை என்பதைக் காண்கிறீர்கள். நீங்கள் ஏதோ சில சடங்கு முறைகளை ஆராதனையாக வைத்திருக்கிறீர்கள். அவ்வளவு தான் , "தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடு அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்." ஆமென். அந்த காரியத்தை கிழித்தெரியவும் மற்றும் அது எதைக் காண்பிக்கும் என்ற உண்மையை வெளி கொணர்வதற்காகவே, தேவன் நமக்கு தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். வீண் வேதாகம கல்லூரி பாடத் திட்டங்கள். ஓ. என்னே. 50. இப்பொழுது, நாம் காண்பது என்னவென்றால், அவன் "ஆம், இந்த குறிப்பிட்ட நபர் எங்கே இருக்கின்றான் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறினான். "சரி, அங்கே செல்வோம் அங்கே...” அது.... ஆம்... சிலர் அதைக் குறித்து அப்படியாக ஆச்சரியப்பட்டிருப்பார்கள். ஆனால் ஆனால் இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட உண்மையான ஊழியக்கராரனான யோசபாத் "தேவனுடைய ஆவி அவன் மீது இருக்கின்றது" என்று கூறினான். ஆம். ஐயா. அப்பொழுது இந்த மனிதன் "எலிசா எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியும். அவர் திஸ்பியனாகிய எலிசாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்தார். அவர் - ஆவி - எலிசாவினுடைய - எலியாவின் ஆவி எலிசாவின் மீது இருக்கிறது. ஆம், அந்த அதே ஆவியை எலிசா கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தெரியும். ஆகவே நாம்...” என்றான். 51. எலியாவின் ஆவி இன்னொரு மனிதனின் மீது தங்கியிருக்கிறது என்றும் அந்த மனிதன் எலியா செய்த அதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறான் என்றும் அந்த தேவனுடைய மனுஷன் கேட்ட உடனே, அவன் உண்மையான தீர்க்கதரிசி என்று அறிந்து கொண்டான். எலியாவின் ஆவியானது அதே விதத்திலேயே இன்னொரு மனிதனின் மீது இருக்குமானால், எலியா செய்ததைப் போலவே அதே காரியத்தை அந்த மனிதனும் செய்வான் என்று யோசபாத் அறிந்திருந்தான். சகோதரரே நான் உங்களுக்கு இதைக் கூறட்டும், நண்பர்களே நான் இதை உங்களுக்கு கூறுவேனாக, இயேசு கிறிஸ்துவின் ஆவி சபையின் மீது வருகையில், இயேசு கிறிஸ்து செய்த அதே காரியத்தை சபையும் செய்யும். அது - அது - அது......... நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்”. அவர் அதை நிரூபித்திருக்கிறார், அவர்கள் செய்வார்கள் என்று கூறியிருக்கிறார். அவர்கள் அதை செய்யவில்லை என்றால், அப்படியானால், எங்கோ தவறு காணப்படுகிறது. தேவன் பொய் சொன்னார் என்பதாக இருக்கும் படிக்கு அதை அப்படியே விட்டுவிட்டார்கள். தாங்கள் விசுவாசிகள் என்று அவர்கள் கூறி இந்த காரியங்கள் நடந்தேறவில்லை என்றால், ஒவ்வொரு மனிதனுடைய வார்த்தையும் பொய் என்றும் அவருடையது உண்மை என்றும் அவர் கூறினார். 52. ஆகவே நாம் காண்பது என்னவென்றால் இவன் கூறினான் - இந்த மனிதன் "அந்த உண்மையான தீர்க்கதரிசியின் ஆவி அந்த மனிதனின் மீது தங்கியிருக்கிறது” என்றான். இந்த கடைசி காலத்திற்கென்று தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு, இன்றைய சபைக்கு பிரதிநிதித்துவமாயிருந்த தெரிந்து கொள்ளப்பட்ட இந்த மனிதன் அதைக் கேட்ட உடனே "அப்படியானால் நாம் சென்று அவன் கூறுவதைக் கேட்போம். ஏனென்றால் தேவனுடைய ஆவி அவன் மீது இருக்கின்றது” என்று கூறினான். ஓ, அது எனக்குப் பிடிக்கும். "எலியா செய்த காரியங்கள் இந்த மனிதனின் மீது இருப்பதைக் காண்கிற வரைக்குமாக, நாம் சென்று அவன் கூறுவதைக் கேட்போம்." அப்போது அந்த நல்ல சகோதரன் "ஆம், நான் நிறைய இரவு கூட்டங்களுக்கு சென்று அவன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது சத்தியம் என்று எனக்குத் தெரியும். ஆகவே நாம் எல்லாரும் புறப்பட்டுச் சென்று அந்த மனிதனை சந்திப்போம்” என்று கூறினான். 53. அப்பொழுது எல்லாரும் அந்த தீர்க்கதரிசிக்கு முன்பாக வந்து நின்றனர்.... ஓ என்னே, அவன் எப்படிப்பட்ட ஒரு சிடுசிடுப்புக்கு உள்ளானான். அது அவனுடைய பரிசுத்தமாக்குதலை - சற்று பாதித்திருக்கும். ஆனால் அவன் மிகவும் கோபத்திற்குள்ளானான். அவன் யோராமிடம் "நீ உன் சொந்த தீர்க்கதரிசிகளிடம் ஏன் செல்லவில்லை? (ஓ.) நீ உன் அம்மாவின் தீர்க்கதரிசியிடம் ஏன் செல்லவில்லை ? நீ உன் அப்பாவின் தீர்க்கதரிசிகளிடம் ஏன் செல்லவில்லை? இப்பொழுது உன்னுடைய சடங்காச்சார சபைக்கு செல், உனக்கு விருப்பமானால் அவைகளைச் சேர்ந்து கொள். நீ பிரச்சனையில் இருக்கின்றாய். நீ அவர்களிடம் சென்றிருக்கலாமே?" என்று கூறினான். "ஓ, இல்லை, இல்லை. கர்த்தர் எங்களை இங்கே கொண்டு வந்தார்" என்றான் . "நாங்கள் - நாங்கள் - நாங்கள் மரிக்கப்போகிறோம். அதிலே நாங்கள் கொல்லப்படுவோம்..." என்றான். மரிக்கப்போகின்றாய் என்றல்ல, அவர்கள் ஏற்கெனவே மரித்துப் போயிருந்தனர். எல்லா கனிகளும் காய்ந்து உலர்ந்து போயின, எல்லா ஆவியும் சபையை விட்டு வெளியே சென்று விட்டன. அது ஏற்கெனவே ஒரு - ஒரு பக்திபரவசமான ஸ்தாபனம் ஆகிவிட்டது. அது சரி, அங்கே ஏதோ தவறு இருக்கின்றது. இங்கே சபையிலே எங்காவது ஓரிடத்திலே நாம் தேவனை மறுபடியுமாக கொண்டு வரவில்லை என்றால், நமக்கு என்ன நேரிடும்? நாம் எல்லாருமே மாண்டு போய் மரிக்கப்போகிறோம். ஆகவே இந்த தீர்க்கதரிசி, அவனை சத்தமாக தீட்டித் தீர்த்த பிறகு "யோசபாத் (அந்த தெரிந்து கொள்ளப்பட்ட மனிதன் ) இங்கே வந்திருப்பதால் நான் அவனுக்கு மரியாதை கொடுக்கிறேன், இல்லை என்றால் நான் உன் முகத்தை நோக்கி பார்த்திருக்கக்கூட மாட்டேன்" என்று கூறினான். 54. அதைத்தான் தேவன் இன்றிரவும் கூறியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். அது... இந்த பலவிதமான ஸ்தாபனங்களுடன் உங்களை பிணைத்துக் கட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் தர்க்கித்துக் கொண்டு இருக்கின்ற மக்களாகிய நீங்கள், அவரில் விசுவாசம் வைத்திருக்கின்ற மக்கள் பேரில் தேவன் மரியாதை வைத்திருக்காவிட்டால், ஒரு ஒரல் ராபர்டஸோ அல்லது அதைப் போன்றோ நாடு முழுவதுமாக சென்றிருக்க முடியாது. அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள் எதுவுமே இருந்திருக்காது. அவர் நம்மை நோக்கிப் பார்த்திருக்கவே மாட்டார்... நாம் எல்லாருமே குற்றவாளிகள் ஆவோம். தெரிந்து கொள்ளப்பட்ட வர்கள் நிமித்தமாக அது இல்லையென்றால், தேவனை உண்மையாக விசுவாசித்த அவர்கள், சபையின் நிமித்தமாக இல்லையென்றால், அவர் நம்மை நோக்கிப் பார்க்கவும் கூட மாட்டார். அது சரி. ஆனால் விசுவாசிக்க விரும்புகிற மக்கள் இருக்கின்றனர். தேவன் அவர்களுக்கு ஒரு செய்தியாளனை வைத்திருக்கின்றார். ஆமென். பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார், அவர் வெளியே சென்று நீண்ட காலம் ஆகிவிட்டது. 55. இந்த வயதான தீர்க்கதரிசிக்கு தன்னுடைய நீதியான உளக்கொதிப்பானது கிளர்ந்தெழுந்து அவர்களை நோக்கி சத்தமிட்டு திட்டினான். அவர்கள் கொண்டிருந்த இந்த உடன்படிக்கைகள், கூட்டணிகளை எல்லாவற்றையும் மற்றும் அவர்கள் கொண்டிருந்த ஸ்தாபனங்களையும் குறித்து கூறினான், பிறகு அவன் "சரி, ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்" என்று கூறினான் , ஓ, அவனுடைய கோபத்தை சிறிது தணிக்க வேண்டியவனாக இருந்தான் என்று உங்களுக்கு தெரியும். அவன் மிகவும் கோபமடைந்திருந்தான். ஆகவே அவன் "ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்” என்றான். இப்பொழுது, சபையில் இசை இசைக்கப்படுவதில் விசுவாசம் கொள்ளாத கிறிஸ்துவின் சபை என்று அழைக்கப்படுகின்ற ஸ்தாபன மக்களாகிய உங்களைக் குறித்து என்ன? அவன் கோபடைந்து தீர்ந்த உடன், அவனுக்குள்ளாக ஆவியானவரை கொண்டு வர சிறிது இசை அவனுக்கு தேவைப்பட்டது. அது சரி, ஆம் ஐயா. ஒரு... இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், தேவன் மாறுவது கிடையாது. ஒரு நல்ல இசை அப்பொழுது அந்த தீர்க்கதரிசியின் மீது ஆவியைக் கொண்டு வந்தது என்றால், அதே விதமாகத்தான் இன்றும் இருக்கும். அது முற்றிலும் சரியே. ஏனென்றால் தேவன் அதை நேசிக்கின்றார். நிச்சயமாக. அவன் "ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்” என்றான். நீங்கள் உம், சரி. நான் ஒரு தீர்க்கதரிசி அல்லவே" எனலாம். ஆனால் நீங்கள் வாத்தியக்காரர்களில் ஒருவனாக கூட பாகம் வகிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் - நீங்கள் அதற்கென ஏதாவது ஒன்றை செய்யலாம். அவ்வளவுதான். உங்களிடமாக ஒரு சாட்சி இருந்தால் சொல்லலாம் அல்லது ஏதாவது ஒன்றை நீங்கள் செய்யலாம். 56. அவர்கள் சுரமண்டல வாத்தியக்காரனை அழைத்து வந்து, "நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைக்கூடிடும்” என்று வாசிப்பதை என்னால் காண முடிகிறது. அப்பொழுது ஆவியானவர் திரும்பவுமாக செயல்பட ஆரம்பித்தார். "நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைக்கூடிடும்," ஆவியானவர் தீர்க்கதரிசியின் மீது வருவதற்கு முன்னர் சிறிது இசை வாசிக்கப்பட வேண்டியதாயிற்று. தீர்க்கதரிசி வந்த போது. அவன் பார்த்தது - இன்னும் சரியாக சொல்லப்போனால், ஆவியானவர் தீர்க்கதரிசியின் மீது வந்த போது அவன் ஒரு தரிசனத்தைக் கண்டான். இப்பொழுது, அது தான் வழியாகும். பாருங்கள், அவனால் அதைச் செய்ய முடியவில்லை... அறிவாளிகள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மிக மிக உயர்ந்த நிலையில் உள்ள குழுக்கள், ராஜாக்கள், ஆளுநர்கள், கல்வி துறை அறிவாளிகள் ஆகியோரால் தரிசனத்தைக் காண முடியவில்லை. அது சரி, அவர்கள் குருடாயிருந்தனர். இன்றிரவு அதுதான் காரணமாகும். தேவனுடைய தரிசனத்தை அவர்கள் ஒரு மனோதத்துவ நிலை என்றும், ஐம்புல தொடர்பின்றி பிறர் மனதை அறிதல் என்றும், பிசாசின் ஆவி என்றும் அல்லது ஏதோ என்றும் கூறுகின்றனர். ஏன் அவ்விதம் கூறுகின்றனர் என்றால் அவர்கள் அறிவுபூர்வமாக இருந்து, தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாமல் இருப்பதனால் தான், அது சரி. ஒரு தரிசனம் தான் உண்மையைக் கூறினது. அது தேவனுடைய திட்டமாகும். அது தேவனுடைய வழியாகும். ஏனென்றால் கர்த்தருடைய ஆவி அந்த தீர்க்கதரிசியின் மீது இருந்தது. கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் வந்தது. ஆம், ஐயா. எப்படியாக அது வந்தது? ஒரு தரிசனத்தின் மூலமாக வந்தது, ஆம், ஐயா, அது ஒரு தரிசனத்தின் மூலமாக வந்தது, அறிவுப்பூர்வமான ஒன்றின் மூலமாக அல்ல. அறிவுப்பூர்வமானது தோல்வி அடைந்திருந்தது. இப்பொழுதும் அதையே தான் செய்திருக்கின்றது. 57. அப்பொழுது அவன் எடுத்தான் - அவன் உற்றுப்பார்த்தான், ஒரு தரிசனத்தைக் கண்டான், அவன் நினைத்தான் "சரி இப்பொழுது, இது தான் அது," செய்தியின் ஆவியானது .... அப்பொழுது, அவன் எதைக் கண்டான்? அவன் "ஓ, யோராம், உனக்கு இன்னும் ஒரு கல்வி பட்டம் தேவைப்படுகின்றது. யோசபாத், நான் உனக்கு கூறுகிறேன், நீ ஒரு சிறிய பிரச்சனையில் இருக்கின்றாய் (பாருங்கள்?) நீ புறப்பட்டுச் சென்று இன்னும் சிறிது காலத்திற்கு படிப்பை தொடரு; ஏனென்றால் நான் உனக்குக் கூறுகிறேன், இந்த காரியங்களை எப்படி செய்வதென்று உனக்குத் தெரியவில்லை. அது - ஒரு சேனையை எப்படி வழிநடத்துவது அல்லது அதைப் போன்று ஒன்று உனக்குத் தெரியவில்லை" என்றா கூறினான். அவன் அப்படிக் கூறவில்லை . அவன் அதைச் செய்யவே இல்லை . அவன், "நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் கூறுகிறேன். நீ உன் மனிதரை பயிற்றுவித்து அவர்களை மெருகேற்ற வேண்டும். அவர்கள் சரியான ஒரு சீருடையை அணிந்திருக்கவில்லை. அது தான் காரணமாகும். நீ உன்னுடைய எல்லா சபை குருமார்களையும் அழைத்து அவர்கள் தங்கள் காலர் பட்டையை இந்த விதமாக திருப்பி வைத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் அவர்கள் சபை குருமார்கள் போல் காணப்படுவர். புரிகின்றதா?” என்றான். ஆம், அது வெகு விரைவில் பெந்தெகொஸ்தே சபைக்குள் வந்து விடும். ஆம் அது வெகு சீக்கிரத்தில் - சரியாக அதற்குள்ளாக வரும். அது ஹா.... நினைவில் கொள்ளுங்கள் கத்தோலிக்க சபைதான் முதலாவது பெந்தெகொஸ்தே சபையாகும். அது முற்றிலுமாக சரி. இப்பொழுது, வரலாற்று அறிஞர்களாகிய உங்களில் சிலர் அப்படி இல்லை என்று மறுதலிக்கலாம். பெந்தெகொஸ்தேவிற்கு இன்னும் நூற்றைம்பது வருடம் கொடுங்கள், அது இப்பொழுது இருக்கின்ற நிலையிலிருந்து செல்லுகின்ற வேகத்தைப் பார்த்தால் பெந்தெகொஸ்தே சபையிலிருந்து மிகவுமாக அகன்று சென்றுவிடும். அது சரி. ஓ, ஆம். கத்தோலிக்க சபை பெந்தெகொஸ்தேயில் துவங்கினது. பிறகு அவர்கள் அதை ஸ்தாபனமாக்கினர். இதை மற்றும் அதை செய்ய விரும்பிய பெரிய சமுதாய குழுக்களை அதில் உள்ளே கொண்டு வந்தனர். நிக்கொலாய் மதத்தினர் சபையாரை மேற்கொண்டனர் - அங்கே இருந்த சபையாரிடமிருந்து அதிகாரத்தை எடுத்துக்கொண்டனர். ஆகவே பரிசுத்த ஆவியானவரால் அங்கே வரமுடியவில்லை . அது எல்லாமே அப்படியாக இருக்கும், ஒரு நபர் என்ன கூறுகின்றானோ அதுதான் எல்லாமாக இருக்கும், அவ்வளவுதான், கிறிஸ்துவின் முழு சரீரத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்து... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.) 58. பரிசுத்த ஆவி சபையை விட்டு அகன்று விட்டது. ஏன், அவர்கள் தங்கள் கனிகள் எல்லாம் உலர்ந்து போக விட்டிருந்தனர். ஆகவே அது இப்பொழுது எந்நிலையில் இருக்கின்றது என்று நீங்கள் பாருங்கள். சரி, பெந்தெகொஸ்தேயும் அதே அடிச்சுவடியில் தடம் பதித்துள்ளனர். அதே பாதையில் சரியாக சென்றுள்ளனர். அதோ அது இருக்கின்ற நிலை. இப்பொழுது, நாம் காண்பது என்னவென்றால் ஆவியானவர் வருகையில் .... அது என்ன தரிசனம் - ஆவியானவர் தீர்க்கதரிசிக்கு கொடுத்த தரிசனம் என்ன? அவன் என்ன கூறினான்? அவன் "இதோ பாருங்கள், உங்கள் எல்லா இராணுவ வீரர்களையும் அழையுங்கள், அவர்களுக்கு மறுபடியுமாக போதனை செய்யுங்கள், அவர்கள் அந்த மலை உச்சிக்கு செல்லும் போது என்ன செய்ய வேண்டும் என்று அதைக் குறித்து அதிகம் தெரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு இன்னும் அதிக வேதகலாசாலை அறிவை கற்றுக் கொடுங்கள். அவர்கள் சிறிது மெருகேற்றப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் இன்னும் சற்று நீண்டதான கத்தியை அல்லது அதைப் போன்றதை எடுத்துச் செல்ல வேண்டியவர்களாக இருந்தனர். அல்லது ஒரு வித்தியாசமான சீருடையை அணிய வேண்டியவர்களாக இருக்கின்றனர்” என்று கூறவில்லை. இல்லை, அதை அவன் கூறவில்லை . அவனோ "வாய்க்கால்களை வெட்ட ஆரம்பியுங்கள், இந்த பாலைவனத்திற்குள் செல்லுங்கள், ஒரு காலத்தில் உங்கள் ஜனங்கள் இந்த பாலைவனத்தைக் கடந்தனர். பிறகு சீனாய் மலையில் ஒரு வேதாகம கல்லூரி கல்வி வேண்டும்” என்றனர் என்று கூறினான். கிருபை அவர்களுக்கு ஒரு - ஒரு தீர்க்கதரிசியையும், அக்கினி ஸ்தம்பத்தையும் மற்றும் எல்லாவற்றையும் கொடுத்தது, பிறகு தேவன் அவர்களுக்கு அதையும் படிக்க கொடுத்தார். ஆனால் அவர்களோ இன்னுமாக வாக்குவாதம் செய்யும்படிக்காக வேதாகம கல்லூரி கல்வியை பெற விரும்பினர். ஆகவே தேவன் அவர்களை வனாந்தரத்தில் அப்படியே இருக்கும்படிக்கு, அந்த பழைய போராளிகள் எல்லாம் மரிக்கும் வரைக்குமாக அங்கேயே இருக்கும்படிக்கு விட்டு விட்டார். 59. அவன், "நீங்கள் எப்படியாக இப்பொழுது மாண்டு கொண்டிருந் தீர்களோ அதே விதமாக அவர்களும் அங்கே மாண்டுபோய்க் கொண்டிருந்தனர். இதோ, அங்கே வாய்க்கால்கள் இருக்கின்றன. அங்கே வனாந்தரத்தில் கன்மலையானது இன்னுமாக இருக்கின்றதே அங்கே நிறைய வாய்க்கால்கள் இருக்கின்றன” என்றான். மேலும் அவன், “நீங்கள் போய் எங்கும் வாய்க்கால்கள் நிறைய வெட்டுங்கள்” என்று கூறினான். சகோதரனே இன்றிரவிற்கான தரிசனமும் அதுவேதான், அது ஒரு புது ஸ்தாபனத்தை துவக்குங்கள் என்றல்ல. அதற்குள்ளாக இருப்பதை தோண்டி வெளியே எடுங்கள் என்பதே. அது சரி. முதல் காரியமானது, அந்த ஸ்தாபனம் என்னும் அழுகின பழைய மரப்பகுதிகளை, கட்டைகளை வாய்க்காலில் இருந்து எடுத்து வெளியே எடுத்து போடுங்கள். தேவனுடைய ஆசீர்வாதம் என்னும் வாய்க்கால்கள் எல்லாம் இன்றிரவு நின்றுவிட்டிருக்கிறது. ஸ்தாபன மரப்பகுதிகள், மரக்கட்டைகள் அதிலே கிடக்கின்றன. "பரிசுத்த ஆவி என்ற ஒன்றானது கிடையவே கிடையாது" என்றழைக்கப்படுகின்ற மற்றொரு மரக்கட்டையானது இருக்கின்றது. நீங்கள் தோண்டி பார்த்து அந்த மரக்கட்டையை கண்டு பிடித்து அதை வெளியே எடுத்துப் போடுங்கள். "பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. அது சீஷர்களுக்கு மாத்திரம் தான்." "பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்களுக்கு மாத்திரம் தான்." அதை தோண்டி எடுத்து வெளியே போடுங்கள். பெந்தெகொஸ்தே நாளிலே டாக்டர் சீமோன் பேதுரு, "அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்று கூறினான். 60. சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு பெரிய அருமையான பெந்தெகொஸ்தே சகோதரன் என்னிடமாக, "நமக்கு இன்னுமாக தெய்வீக சுகமளித்தல் தேவையில்லை. அது என் சபையில் நடத்தப்பட நான் அனுமதிக்கமாட்டேன். இன்று நாம் அருமையான மருத்துவர் களையும் மற்றும் காரியங்களையும் வைத்திருக்கிறோம். அது தெய்வீக சுகமளித்தலின் இடத்தை எடுத்துக் கொண்டது” என்று கூறினார். உம்ம், உம்ம், உம்ம் , பாருங்கள் - என்ன விதமான பழைய மரக்கட்டையானது அதிலே இருக்கிறது என்று பாருங்கள், அது என்ன செய்கிறது? அது தண்ணீர் பாய்ந்தோடுவதை நிறுத்துகிறது. அங்கே வனாந்திரத்தில் கனிகள் எல்லாம் காய்ந்து உலர்ந்து போயிருந்ததை எலியாவின் தரிசனமானது அவனுக்கு காண்பித்தது. ஒரு புதிய ஸ்தாபனத்தையோ, மற்றொரு மாரியையோ அல்லது எதையோ ஆரம்பித்துவிடாதீர்கள். மழை நீர் ஓடும்படியாக முதலாவதாக வாய்க்கால்களை சுத்தப்படுத்துங்கள். தண்ணீர் இருக்கிறது. கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அடிக்கப்பட்ட கன்மலை வனாந்தரத்தில் இருக்கின்றது. அது இன்றிரவு இன்னுமாக அங்கே இருக்கிறது. தேவனுக்கு நன்றி. இயேசு கல்வாரியிலே மறுபடியுமாக அவர்களுக்கு அதை சுத்தப்படுத்தினார். ஆனால் அவர்களோ திரும்பவுமாக வந்து அதிலே மறுபடியுமாக மரக்கட்டைகளை போட்டு விட்டனர். எல்லாவற்றையும் அடைத்து விட்டு...... 61. ஒரு வாய்க்காலிலே மரக்கட்டையை போட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா, என்ன ஆகும். ஆம் அப்பொழுது எல்லா விதமான அழுக்குகளும் இந்த மரக்கட்டையில் வந்து மோதி நிற்கும். அதன் பிறகு முதலாவதாக என்ன நடக்கின்றது என்று தெரியுமா, தண்ணீர் அப்படியே அந்த மரக்கட்டையில் மோதி நிற்கும், நீர்நாய்கள் (beaver நீரிலும் நிலத்திலும் வசிக்கும் ஓர் மிருகம் - தமிழாக்கியோன்) செய்வது போல , அவை மரக்கட்டைகளை கொண்டு வந்து அணை போல உண்டாக்கும், அப்பொழுது தண்ணீர் ஓடாமல் தடுக்கப்பட்டு நின்று விடும், பிறகு அந்த வாய்க்காலில் எதுவுமே ஓடாது. அது சரி. இன்றைக்கு அநேக நீர்நாய் பிரசங்கிகள் இருந்து கொண்டு, தண்ணீரை அணைபோல தேக்கி நிறுத்தி "இது எங்களுடையது. இது நாங்கள் தான். இது எங்களைச் சேர்ந்தது" என்று கூறுகின்றனர். அப்பொழுது தண்ணீருக்கு என்ன நிலை நேரிடுகின்றது? அது பாயாமல் தேங்கி நிற்கும். அது நம்முடைய அநேக ஸ்தாபனங்களின் நிலையாகும், தங்களுடைய ஸ்தாபனத்திற்கு மட்டும் தண்ணீரை நிறுத்தி வைத்துக் கொள்ளுதலாகும். அது தேங்கி நின்றுவிடுகின்றது. தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறிய புழுக்கள் வந்து விடும் என்பது உங்களுக்குத் தெரியும். அதுதான் இன்று சபையின் நிலைமை ஆகும்: இங்கே ஒரு சிறிய புழு அங்கே சிறிது நெளிகின்ற புழு எல்லா காரியமும்... அற்புதங்களின் நாட்கள் கடந்த விட்டன. தெய்வீக சுகமளித்தல் என்கின்றதான ஒன்று கிடையவே கிடையாது." ஒரு கூட்டத்தில் ஐந்து நிமிடத்திற்கு மேல் உட்கார முடிவதில்லை. ஓ, என்னே, தேங்கி நிக்கும் தண்ணீர், பாய்ந்தோடும் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக நீர் நாய்கள் மரத்துண்டுகளைக் கொண்டு கட்டும் அணை. (beaver dam) அதை உடைத்தெரியுங்கள். ஆமென். இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டு. அந்த ஊற்றிலே பாவிகள் மூழ்குதலில், தங்கள் எல்லா பாவக்கறைகளும் கழுவப்படுமே. 62. "அங்கே வாய்க்காலில் இறங்குங்கள், அதில் இருக்கின்ற மரக்கட்டைகள் எல்லாவற்றையும் தோண்டி வெளியே எடுத்துப் போடுங்கள்" என்று தீர்க்கதரிசி கூறினான். "சரி, தீர்க்கதரிசியே, நான் சொல்லுகிறது என்னவென்றால், நான் திரும்பிச் சென்று மற்றுமொரு பலத்த காற்று அடிக்கிற முழக்கத்தை கொண்டிருக்கலாமா?" "இல்லை ."  "நாம் மற்மொரு பின்மாரி மழையை ஆரம்பிக்கலாமா?" "இல்லை, இல்லை, வாய்க்காலை மட்டும் சுத்தம் செய்யுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது அது ஒன்று மாத்திரமே." நம்மிடம் மக்கள் இருக்கின்றனர். அந்த வாய்க்காலை சுத்தம் செய்யுங்கள் அவ்வளவு தான். மக்கள் எல்லாம் சரியாகத் தான் உள்ளனர். வாய்க்கால்களை சுத்தம் செய்யுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவி யானவர் அதற்குள்ளாக வர ஏதுவாயிருக்கும். உங்களுடைய எல்லா அதி தீவிர மூடபக்திகள், கொள்கைகள், மற்றும் சபையில் இருக்கும் எல்லா வற்றையும் சுத்தம் செய்து வெளியே எடுத்துப் போடுங்கள். கன்மலை யானது ஏற்கெனவே அடிக்கப்பட்டுவிட்டது. தண்ணீர் புத்தம் புதிதாக இருக்கின்றது. பாய்ந்தோடிக்கொண்டிருக்கின்றது. ஆனால் நம்முடைய பக்திபூர்வமான ஸ்தாபன முறைமைகளானது நீரோட்டத்தை பாழாக்கிப் போட்டுள்ளது. எலிசா, "அந்த காரியங்களை சுத்தமாக்கி எடுத்து வெளியே போடுங்கள். மற்றுமொரு பலத்த சுழல் காற்றை நீங்கள் மறுபடியும் பெறத் தேவையில்லை. நீங்கள் காற்று முழக்க சத்தத்தை கேட்கப்போவதுமில்லை அல்லது மழையையும் காணமாட்டீர்கள். ஆனாலும் அங்கே தண்ணீர் இருக்கப்போகின்றது" என்று கூறினான். ஓ , சகோதரனே, ஒரு புதிய அமைப்பு அல்ல, நமக்கு தேவையாயிருப்பது ஒரு பதிய அமைப்பு அல்ல. நமக்கு தேவைப்படுவது என்னவென்றால் நாம் கொண்டிருக்கின்ற அமைப்பை சுத்தம் செய்வதுதான். இன்னுமொரு அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபை அல்லது ஒருத்துவ சபையை உருவாக்குவது அல்ல, ஆனால் நாம் கொண்டிருக்கின்ற அசெம்பிளீஸ் சபையை ஒருத்துவ சபையை சுத்தம் செய்வதுதான். அதில் இருக்கின்ற எல்லா மரக்கட்டைகளை எடுத்து வெளியே போடுங்கள். அதில் இருக்கின்ற எல்லாவித வித்தியாசங்கள், தர்க்கங்கள் மற்றும் சண்டைகள் காரியங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போடுங்கள், அப்பொழுது தண்ணீர் மறுபடியுமாக பாய்ந்தோடும் அப்பொழுது அதிலே அன்பு, சந்தோஷம், சந்தோஷம் ஒரு நதியைப் போல எல்லார் மேலும் பாய்ந்தோடும், ஒருவர் பேரில் ஒருவர் அன்பு கூர்ந்து பாய்ந்தோடும். "நாம் பிரிந்திருக்கவில்லை , நாம் எல்லாரும் ஒரே சரீரம். நம்பிக்கை, போதனை, அன்பில் ஒன்றாயிருக்கின்றோம்.” அதுதான். பாருங்கள்? 63. அந்த விதமாகத் தான் நாம் செய்ய வேண்டும். அதுதான் தெளிவான கருத்தாகும். அதுதான் இன்றைக்கான காட்சியாகும். அது தான் அந்த - அது அந்த தீர்க்கதரிசியின் தரிசனமாகும். இன்று அந்த அதே தரிசனத்தை காட்சியை ஒரு உண்மையான தீர்க்கதரிசி கொண்டிருக்கின்றான். ஒரு புதிய - ஒரு புதிய ஸ்தாபனத்தை துவக்குவது, ஒரு காரியத்தை துவக்கி மற்றுமொரு குழுவை உருவாக்குவது அல்ல, நீங்கள் உங்களுக்குள்ளாக தர்க்கித்து அதை ஸ்தாபித்துக் கொண்டு ஏனைய மற்றவர் செய்தது போல நீங்களும் செய்துள்ளீர்கள். நீங்களும் கூட வாய்க்காலில் மரக்கட்டைகளை போடுகிறீர்கள். நான் முதல் முதலாக ஊழியத்தை ஆரம்பித்த போது, அவர்களில் அநேகர் என்னிடமாக வந்து "சரி, சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் ஒரு சிறிய ஸ்தாபனத்தை ஆரம்பிக்க வேண்டும்” என்றனர். அதற்கு நான், "ஸ்தாபனமா? நாம் - நாம் - அதற்கு எதிராக நான் இருக்கின்றேன்” என்றேன். மேலும் நான், “நமக்கு தேவைப் படுவது ஒரு ஸ்தாபனம் அல்ல, ஆனால் நாம் கொண்டிருக்கின்றதை சுத்தம் செய்வது தான்” என்றேன். அது சரி, அதை சுத்தம் செய்யுங்கள். நமக்கு ஒரு எழுப்புதல் தேவைப்படுகிறது. நமக்கு தேவையாயிருப்பது என்னவென்றால் தோண்டி எடுத்தலின் நேரமே ஆகும். தோண்டுங்கள், தோண்டுங்கள், நீங்கள் ஆழமாக தோண்டத் தோண்ட இன்னும் அதிக அளவில் தண்ணீர் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் தோண்டி "சரி, நான் இப்பொழுது ஸ்தாபனத்தை விட்டு வெளியே வந்திருக்கிறேன் ...” என்கிறீர்கள். நீங்கள் இன்னுமாக அதில் கொண்டிருக்கின்ற காரியத்தைப் பாருங்கள் : துர்க்குணம், சண்டைகள் மற்றும் எல்லாவற்றையும் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாய்க்காலை தோண்டி சித்து ஆழத்தில் சென்று அந்த அசையாத உறுதியான பாறையை அடையும் வரைக்குமாக தோண்டி சுத்தம் பண்ணுங்கள். அது சரி. இம்மானுவேலின் இரத்த நாளங்களிலிருந்து அந்த தண்ணீரானது வேகமாக புறப்பட்டு வரும் வரைக்குமாக ஆழமாக தோண்டுங்கள். அந்த இடத்தை அடையும் வரைக்குமாக தோண்டி காத்திருங்கள். அதில் நீரூற்றைப் போல புறப்பட்டு ஓடி வரும். அது வருவது 64. "வாய்க்கால்களை வெட்டி எடுங்கள்.” அவன், "முயற்சி செய்துகொண்டிருப்பவர்களே. அங்கே மேலே உள்ள வீட்டின் மேலே இருக்கிறவர்களே. மலையின் உச்சியில் எந்நேரமும் சத்தமிட்டுக் கொண்டும், குதித்துக்கொண்டும், பனியில் உறைவது போல இறுகியும், பொரித்த, வறுத்த நிலையிலும் இருப்பவர்களே இங்கே இந்த பள்ளத் தாக்குகளில் இறங்குங்கள். ஆம், அது அதைச் செய்யாதீர்கள். இங்கே இறங்குங்கள், இங்கே இருக்கின்ற இந்த வாய்க்கால்களை ஆழமாக வெட்டுங்கள் - நல்ல தண்ணீரை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினான். அது தான் நமக்கு தேவையாயிருக்கிறது. இங்கே கீழே இறங்குங்கள் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றிரவு நமக்கு தேவைப்படுவது என்னவென்றால் தேவனுடைய தண்ணீரே. அந்த தரிசனமானது, மரித்துக்கொண்டிருக்கின்ற அழிந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கான தேவனுடைய சித்தமானது முற்றிலும் சரியாக வியாக்கியானப்படுத்தப்படுத்தல் ஆகும். இன்றிரவிற்கான கர்த்தருடைய தரிசனம் என்னவென்றால் அந்த காரியத்தை சுத்தம் செய்யுங்கள், புதியதான ... சுத்தம் பண்ணுங்கள், ஒரு புதிய ஸ்தாபனத்தை ஆரம்பிக்காதீர்கள். அந்த ஸ்தாபனத்தில் ஒரு எழுப்புதலை ஆரம்பியுங்கள். ஒரு புதிய கூட்டத்தை (meeting) ஆரம்பியுங்கள், அதில் தேவன் வரும்படியாக செய்யுங்கள். உங்களுடைய எல்லா குற்றம் கண்டு பிடிக்கும் செயல்கள், பின்புறம் பேசுதல், வணங்காக் கழுத்துக்கள், மற்றும் இந்த எல்லா மூடபக்தி கொள்கைகள் மற்றும் அவிசுவாசம் ஆகியவற்றை தோண்டி வெளியே எடுத்துப் போடுங்கள். அந்த காரியத்தை தோண்டி எடுத்து வீசியெறியுங்கள். "சரி, நான் உங்களுக்கு கூறுகிறேன் சகோதரன் பிரன்ஹாமே, அதன் அர்த்தம் இதுவல்ல...." அதன் அர்த்தம் எதுவாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஒன்று நீ தோண்ட வேண்டும் அல்லது மரிக்க வேண்டும். சிக்காகோ மெதொடிஸ்டுகளே தோண்ட ஆரம்பியுங்கள். சிக்காகோ பாப்டிஸ்டுகளே தோண்ட ஆரம்பியுங்கள் அல்லது அழிந்து போய்விடுங்கள். காரியங்களை தோண்டி எடுத்து வெளியே வீசியெறிந்து போடுங்கள். அதை வெளியே போடுங்கள். நான் உங்களுக்கு சொல்லுகிறேன். கர்த்தர் உரைக்கிறதாவது, அதின் உள்ளே இருக்கின்ற அந்த அழிவை நீங்கள் தோண்டி எடுத்துப்போடாவிடில் நீங்கள் அழிந்து போவீர்கள். உங்களுடைய கனியும் மற்றும் சபையும் உலர்ந்து போய் மரித்து போகும். தோண்டி எடுங்கள். இன்னுமொரு பின்மாரியையோ அல்லது மற்றுமொரு முன்மாரியையோ அல்லது எதுவாயிருந்தாலும் கேட்கமாட்டீர்கள், ஆனால் அங்கே தண்ணீர் மற்றும் சமாதானம் நதியைப்போலவும் ஓடும், ஒவ்வொரு இருதயத்தினூடாகவும் ஓடும். ஆம் ஐயா, நீங்கள் அடையாளங்கள், அற்புதங்களையும், தேவனுடைய வல்லமைகள் சபைக்குள்ளாக திரும்பி வருவதையும், உண்மையாகவே பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் பெந்தெகொஸ்தேயில் திரும்பி வருவதைக் காண்பீர்கள், ஆம், ஐயா . 65. ஆம், ஐயா, ஆவியானவரின் செய்தி என்னவென்றால் நாம் தோண்ட ஆரம்பிக்க வேண்டும் அல்லது அழிந்து போதல் என்பதே. ஆகவே அவர்கள் தோண்ட வேண்டியதாயிருந்தது. தோண்டி வெளியே எடுக்க வேண்டியதாயிருந்தது. சுத்தமாக்க வேண்டியதாயிருந்தது. ஆழமாக, ஆழமாக இன்னுமாக தோண்டுகையில் நீங்கள் நல்ல விதத்தில் இருப்பீர்கள். சபை ஸ்தாபன முறைமைகளானது எல்லா வாய்க்கால்களும் பாய்ந்தோடாமல் அடைப்பட்டிருக்கும்படியாகச் செய்துள்ளது அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. இன்றும் நமக்கு தெய்வீக சுகமளித்தல் தேவையில்லை” என்ற அந்த பழைய மரத்துண்டுகளை வெளியே இழுத்துப் போடுங்கள். என்ன, முன்பிருந்ததைக் காட்டிலும் இன்று தான் அது நமக்கு அதிகமாக தேவைப்படுகிறது. "நாங்கள் மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்டிருக்கிறோம்.” என்று நீங்கள் கூறலாம். அது சரி. "மிகச் சிறந்த மருந்துகள் எங்களிடம் உண்டு. சரி, "மிகச் சிறந்த மருத்துவமனைகள் எங்களிடம் இருக்கின்றன சரி ஆனால் அதிகமாக வியாதிகள் இருக்கின்றது. சரி தானே. ஏனென்றால் நீங்கள் அதிகமாக அவிசுவாத்தைக் கொண்டிருக்கிறீர்கள். சரி. அது முற்றிலும் சரியே. மக்களால் அதை... 66. இப்பொழுது, அவன் சொன்னதை கவனியுங்கள், இப்பொழுது.... அடுத்த நாள் காலை அவர்கள் என்ன செய்தனர்? அங்கே இருந்த எபிரெயர்கள் "நான் கர்த்தருடைய தரிசனத்தைக் கேட்டேன். தீர்க்கதரிசி உண்மையைக் கூறினார். நான் இந்த வாய்க்காலை வெட்டி தோண்டி எடுக்கப்போகிறேன்” என்று கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடிகின்றது. அவர்கள் கால்வாயை வெட்டினபோது அதிலே ஒரு பழைய மரக்கட்டை மீது கொத்தினர். "என்ன இது? என் சம்பளத்தில் பத்து சதவீதமா, உம், நம்முடைய பிரசங்கிக்கு பணம் கொடுக்க இரவு நேர சூப் (Soup) விருந்துகளை நடத்திக்கொண்டிருந்தோம் அல்லவா." அந்தவிதமான மரக்கட்டை தோண்டி எடுத்து வீசியெறியுங்கள். அதிலிருந்து எடுத்து வெளியே போடுங்கள். பத்தில் ஒரு பகுதியை நீங்கள் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். அதற்கு மாறான கருத்தை எடுத்து வெளியே வீசுங்கள். அதை தோண்டி எடுத்து ஓரத்தில் வீசுங்கள். கால்வாயை வெட்டுகையில் அடுத்தாக இன்னொரு சிறிய மரக்கட்டை இருந்தது. "என்னது? சரி, இப்பொழுது மிக ஆழமாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை." என்ற மரக்கட்டை. அதை வெளியே இழுத்துப் போடுங்கள். வெளியே வீசியெறியுங்கள். மேலோட்டமாக நீங்கள் அதைத்தான் கொண்டிருப்பீர்கள். ஆம், ஐயா, அந்த காரியத்தை வெளியே எடுத்துப் போடுங்கள். நீங்கள் அதிக ஆழம் தோண்டிப் பார்க்கும்போது இன்னும் அதிக தண்ணீரை நீங்கள் காண்பீர்கள். தேவனுடைய பண்டகசாலையில் தொடர்ந்து தோண்டிக் கொண்டிருங்கள். அந்த காரியத்தை தோண்டி வெளியே எடுத்து போட்டுக் கொண்டேயிருங்கள். அப்பொழுது வாய்க்காலில் உண்மையான ஜீவ தண்ணீரை உங்களால் நிரப்ப முடியும். 67. பிறகு பகல் வெளிச்சம் வந்த உடனே அவர்கள் கவன, 'க் நேர்ந்தது. தண்ணீர் வந்தது. அது எங்கிருந்து வந்தது என்று அவர் க6 அறியாதிருந்தனர். அது ஏற்கெனவே அங்கே இருந்தது. அவர்கள் தண்ணீர் பாய்ந்தோடி வராதபடி வாய்க்கால்கள் அடைத்துக் கொண்டி ருக்கும்படிக்கு வைத்திருந்தனர். சபையில் வல்லமை இருக்கின்றது. உங்களுக்கு என்னால் கூறமுடியும். எந்த ஒரு ஊழியக்காரனிடமும் என்னால் கூறமுடியும். இப்பொழுது நீங்கள் வந்து "இதோ, இப்பொழுது நான் அதை சபையிலிருந்து எடுத்துவிடுவேன்” என்று இயேசு கூறினதாக இருக்கும் வேத வசனத்தின் மீது உங்கள் விரலை வைத்து காண்பியுங்கள் பார்க்கலாம். சரி. அப்படியானால் சம்பவித்திருப்பது என்ன? காரியம் என்னவா யிருக்கிறது? நீங்கள் வாய்க்காலை முழுவதுமாக அடைத்து போட்டு விட்டீர்கள். நீங்கள் சுயமாக உருவாக்கியுள்ள உங்கள் சொந்த கருத்தானது அதை அடைப்பாக்கி விட்டது. இந்த கடைசி நாட்களில் இயேசு வாக்குத்தத்தம் செய்துள்ளது எங்கே என்று என்னால் உங்களுக்கு கூறி, செய்யப்படுகின்ற இந்த அடையாளங்களை நீங்கள் கண்டும் இருக்கிறீர்கள், அவர் அப்படியாக காரியங்களை செய்கையில், தேவனுடைய ஆவியானது சபைக்குள்ளாக வந்து தரிசனங்களை விதைத்து இன்னும் காரியங்களை செய்வார் என்பதையும் என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். அதன்பிறகு நீங்கள் - நீங்கள் அதை ஒரு முறையாவது அது தவறு என்று நிருபிக்க முயலுங்கள், அதன் பிறகு நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்று கண்டறிந்து கொள்ளுங்கள் பார்க்கலாம். 68. அப்படியாக நீங்கள் இருப்பதன் காரணம் என்னவென்றால், உங்களுக்குள்ளாக இருக்கின்ற மிக அதிக அளவிலான ஸ்தாபன வைதீக முறைமைகளின் மரக்கட்டைகளினால் உங்கள் வாய்க்கால் அடைக்கப் பட்டிருப்பதினால் தான். அது முழுவதுமாக அடைக்கப்பட்டிருக்கிறது. அந்த காரியத்தை தோண்டி வெளியே எடுங்கள். அதை வீசியெறியுங்கள், தண்ணீர் பாய்ந்தோடும்படிக்குச் செய்யுங்கள். அந்த நேரத்திலே பொழுது விடிய ஆரம்பித்தது, ஓ, சகோதரனே, தண்ணீர் தாராளமாக பாய்ந்தோட ஆரம்பித்தது, அங்கே வனாந்தரத்தில் இருந்த அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து தண்ணீர் வந்தது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால் குறுக்கில் இருக்கின்ற அந்த பழைய மரக்கட்டைகள் எல்லாவற்றையும் எடுத்துப்போடுவது தான். வழியில் குறுக்கே நிற்கின்ற அந்த பழைய எல்லா அவிசுவாசத்தையும் எடுத்துப் போடுங்கள். அந்த அவிசுவாசத்தை எடுத்து வெளியே வீசியெறிங்கள். "ஆம், இப்பொழுது கவனியுங்கள். இயேசு அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். மற்ற எவரும் என்ன சொன்னாலும் அதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. நான் அதை விசுவாசிக்கிறேன்" என்று கூறுங்கள். அவ்வளவுதான். அந்த மரக்கட்டையை எடுத்து வெளியே போடுங்கள். "தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அது சரியாக என் முன் இருப்பதை நான் காண்கிறேன். அதை நான் எப்போதுமே பரியாசம் செய்து வந்துள்ளேன். அது தவறான ஒன்று என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுதோ நான் அதை விசுவாசிக்கப் போகிறேன். ஆகவே இந்த பழைய மரக்கட்டையை வெளியே எடுக்கப்போகிறேன். அதை வெளியே போடப்போகிறேன்" என்று கூறுங்கள். வழியை அடைத்து குறுக்கே இருக்கின்ற அந்த கட்டையை எடுத்து வெளியே போட்டவுடனே, தேவ சமாதானமாகிய இனிப்பான தண்ணீரானது பாய்ந்தோட ஆரம்பிக்கும். அது ஒரு நதியைப் போல உங்களினூடாக பாய்ந்தோடும். 69. "சரி, நான் - நான் எப்பொழுதுமே நினைத்ததுண்டு சுகமளித்த லானது..." என்று நீங்கள் கூறலாம். இதோ நான் காண்பது என்ன வென்றால் சுகமளித்தலைக் குறித்து மக்கள்... தேவன் இங்கே வந்து அவர் தாமே சரியாக இங்கேயே உங்கள் மத்தியிலே இருப்பதை நிருபிக்கும்போது... அது என்ன என்று உங்களால் அறிந்து கொள்ள முடிகின்றதா? நீங்கள் முயற்சி செய்வது என்னவென்றால் - விசுவாசத்தை வண்ணமலர்செடி வகையைக் கொண்டு பூசப் பார்க்கிறீர்கள். விசுவாசம் காட்டுப்புதர் செடிவகையான ஈசோப்பைக் கொண்டு பூசப்பட்டது. ஈசோப்பு ஒரு சாதாரண செடி வகையாகும். விசுவாசத்தை உணர்ச்சி வசத்தால் உண்டாக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். விசுவாசத்தை உங்களால் உணர்ச்சி வசத்தினால் உருவாக்க முடியாது. விசுவாசம் எல்லோருக்குமுரிய மிகவும் பொதுமுறையான ஒன்றாகும். தண்ணீரை எடுத்து குடிக்க நீங்கள் செல்லும் போது கொண்டிருக்கிற நம்பிக்கையைப் போலத்தான் விசுவாசமும் ஆகும். எப்படியாக நீங்கள் ஒரு மோட்டார் வாகனத்தை எந்த நம்பிக்கையைக் கொண்டு இயக்குகிறீர்களோ அதே போலத்தான் விசுவாசமும் ஆகும். பாருங்கள், அது பொதுவாக இருக்கின்ற ஒன்றாகும்... நீங்கள்.... ஆம், ஈசோப்பு, அது நிலத்திலும் கட்டடங்களின் வெடிப்புகளிலும், எல்லா இடங்களிலும் வளர்வதை நீங்கள் காணலாம். அவர்கள் இரத்தத்தை ஈசோப்பைக் கொண்டு பூசினபோது, விசுவாசத்தை இடுவது போலாகும். 70. நீங்கள் விசுவாசத்தை வெறுமனே - இரத்தத்தை அந்த சாதாரண காரியத்தைக் கொண்டு பூசுங்கள், காட்டுப்புதர் செடிவகை விசுவாசம். ஆனால் நீங்களோ சுற்றுமுற்றும் எல்லாவிடங்களிலும் பார்த்து நான் இயேசுவில் நான் கொண்டிருக்கின்ற விசுவாசத்தை - நான் பூசும்படிக்கு எனக்கு ஒரு வண்ணமலர்ச் செடிவகை கிடைத்தால் நலமாயிருக்கும். நான் கை நீட்டி ஒரு வண்ணமலர்ச்செடியை பறிக்கூடுமானால்” என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு ஒரு வண்ணமலர்ச்செடி தேவைப்படாது. உங்கள் பக்கத்தில் இருக்கின்ற காட்டுப்புதர் செடியை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிற்கு எப்படி விசுவாசத்தோடு, நம்பிக்கையோடு செல்கிறீர்களோ அதே விசுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை இங்கே கொண்டு வந்த அந்த விசுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதே விசுவாசத்தை இன்றிரவு எடுத்துப் பூசுங்கள். என்ன நடக்கப் போகின்றது என்பதை கவனியுங்கள், ஓ, சகோதரனே, உங்கள் மனதில் எந்த ஒரு சந்தேகமும் இருக்காது. அது உண்மையாகவே, அந்தவிதமான ஒரு விசுவாசத்தைக் கொண்டு இரத்தமானது பூசப்பட்டிருக்குமானால் அவ்வளவுதான். நீங்கள் "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அந்த பழைய ஸ்தாபன முறைமைகளின் மரக்கட்டைகள் மற்றும் எல்லா காரியத்தை சரியாக இப்பொழுதே என்னுடைய முறைமையிலிருந்து எடுத்து வெளியே போடுகிறேன். கர்த்தராகிய தேவனே, எளிமையான விசுவாசத்தைக் கொண்டு நீர் என்னுடைய இரட்சகர் , நீர் என்னுடைய சுகமளிப்பவர் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். ஆமென். ஆமென். அந்த விதமாக விசுவாசியுங்கள். ஒரு நதியைப் போன்று சமாதா னத்தை உணருங்கள். அந்த நீரூற்றிலிருந்து வருகின்ற பெரிய நீரோட்டமானது உலர்ந்து போகாமல் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கும், அந்த பழைய மரக்கட்டைகள் எல்லாவற்றையும் நீங்கள் எடுத்து வெளியே போடுவீர்களானால் அப்போது அந்த நீருற்று பாய்ந்தோடி வரும். 71. அதிலே உங்களை ..... ஏதாவதொன்றை நீங்கள் காணும் வரைக்குமாக தோண்டிக்கொண்டேயிருங்கள். நீங்கள் ஏதாவது தவறு செய்திருப்பீர்களானால் "நான் - நான் இன்னார் - இன்னாருக்கு இவ்வளவு பணம் கடன்பட்டிருக்கிறேன்” என்று கூறுங்கள், ஆம் போய் அந்த கடனை செலுத்தி முடியுங்கள். நீங்கள் "உம், என்னால் அவனுக்கு கடனை திரும்ப கொடுக்க முடிய வில்லை" என்பீர்களானால், அப்படியானால் நீங்கள் கடன் கொடுத்த வனிடம் சென்று அவனிடம் கூறுங்கள். அது சரி, இப்படி அப்படி என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். போய் அவனிடம் சொல்லுங்கள். பாருங்கள்? மேலும் அவனிடமாக "சகோதரனே, அதை செலுத்தி முடிப்பேன். பணத்தை திருப்பி தர எனக்கு சிறிது அவகாசம் மட்டும் கொடுங்கள். நான் கடனை திருப்பி தர முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறுங்கள். "என்ன என்று உங்களுக்கு கூற விரும்புகிறேன். பெந்தெகொஸ்தே என்று அழைக்கப்பட்ட மக்களை நான் பரியாசம் செய்தேன்." எழுந்து சென்று அவ்வாறு செய்ததற்காக என்னை மன்னியுங்கள்" அது சரியே. "கர்த்தாவே நீர் என் இருதயத்தை அறிந்திருக்கிறீர். மக்களே, என்னை மன்னியுங்கள்" என்று கூறுங்கள். அப்பொழுது அந்த பழைய மரக்கட்டை யானது வெளியே செல்வதை நீங்கள் உணர்வீர்கள். அப்பொழுது இன்னும் அதிகமான தண்ணீரானது உள்ளே பாய்ந்தோடும் (ஒ, என்னே.) அப்படியே தண்ணீர் புரண்டோடி வரும். முதலாவதான காரியம் என்ன தெரியுமா, "தரிசனங்கள் பிசாசினா லானது என்று நான் எப்பொழுதுமே நினைத்ததுண்டு. ஆனால் இப்பொழுதோ அது தேவனாலுண்டானது என்று நான் காண்கிறேன். சரி. அப்பொழுது அந்த பழைய மரக்கட்டையானது வெளியே சென்று விடும். அப்பொழுது தண்ணீர் மறுபடியுமாக புரண்டு ஓடி வர ஆரம்பிக்கும். அது சரி. வாய்க்காலிலிருந்து எல்லாவற்றையும் எடுத்து வெளியே போடுங்கள், தண்ணீர் அதில் இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று வேதாகமம் கூறுகிறது. ஆகவே அவர் இன்னுமாக அந்த அடிக்கப்பட்ட கன்மலையாக இருக்கிறார். அவர் இன்னுமாக ஜீவனையுடையவராக இருக்கின்றார், இன்னுமாக தண்ணீரைக் கொண்டிருக்கின்றார். அவர் சுகமளிக்கும் வல்லமையைக் கொண்டவராக இருக்கின்றார். நீங்கள், சகோதரன் பிரன்ஹாம், இயேசு என்னை சுகமாக்குவாரா?" எனலாம். அவர் ஏற்கெனவே அதைக் கொண்டிருக்கிறார். வழியை குறுக்காக மடக்கிக் கொண்டிருக்கின்ற அந்த மரக்கட்டைகளை எடுத்து வெளியே போடுங்கள். 72. குப்பைகள், பழைய வாளிகள் மற்றும் தொட்டிகள் எல்லாவற்றையும் வெளியே எடுங்கள்... பொத்..... ம்ம்மம்ம்.... (சகோதரன் பிரன்ஹாம் எடுத்துரைக்கின்றார் ஆசி.) எல்லா குப்பைகளையும் எடுத்து வெளியே போடுங்கள். உங்கள் வழியில் குறுக்கே கிடக்கின்ற அந்த பழைய செத்த குதிரைகள் மற்றும் ஸ்தாபன காரியங்கள் ஆகியவற்றை எடுத்து வெளியே போடுங்கள். அது ..... அதைப் போன்ற ஒன்றின் மீது தேவன் வரவே மாட்டார். அது தண்ணீரை மாசுபடுத்தி கெடுத்து விடும். ஆகவே தண்ணீரானது மாசு பிடித்திராது ஆகவே நீங்கள் சென்று உங்கள் சொந்த அழுக்காகிய அவிசுவாசம் என்னும் அழுக்கை எடுத்து வெளியே போடுங்கள், அப்போது தேவன் தண்ணீரை அதற்குள்ளாக ஊற்றுவார். அது ஏற்கெனவே அங்கே இருக்கின்றது. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், நீரோட்டத்தை தடை செய்கின்றதை எடுத்துப் போட வேண்டியது தான். அதற்கான தீர்வானது ஏற்கெனவே செய்து தீர்க்கப்பட்டிருக்கிறது. தேவன் ஏற்கெனவே உங்களை சுகப்படுத்தி விட்டார். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் குறுக்காக இருக்கின்ற உங்கள் அவிசுவாசத்தை எடுத்துப் போட்டு விடுவதுதான்... அதுதான் தரிசனமாகும். அந்த நாளிலே எலிசா கூறினது போல அதே விதமாக நானும் அதை உங்களுக்கு கர்த்தருடைய நாமத்தில் கூறுகிறேன். கர்த்தர் உரைக்கிறதாவது, உங்கள் அவிசுவாசத்தை வழியிலிருந்து எடுத்துப் போடுங்கள். என்ன சம்பவிக்கப்போகின்றது என்பதைப் பாருங்கள். வழியில் குறுக்காக நிற்கின்ற உங்கள் முறைமைகளை எடுத்துப் போடுங்கள், எப்பேற்பட்ட ஒரு எழுப்புதலானது சிக்காவோவை குலுக்கப்போகிறது என்பதை கவனித்துப் பாருங்கள், நாம் நம்முடைய வழியில் இருக்கின்ற ஸ்தாபன முறைமைகளை எடுத்துப்போடுவோமானால் எப்பேற்பட்ட ஒரு எழுப்புதலானது உலகத்தை குலுக்கப் போகிறது என்று கவனித்துப் பாருங்கள். குறுக்கே நிற்கின்ற உங்கள் சொந்த கருத்துகளை எடுத்துப்போடுங்கள், பிறகு.... ஆவியானவர் தாமே ..... அந்த கன்மலை ஏற்கெனவே அடிக்கப்பட்டுவிட்டது. ஆகவே நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்ன என்றால் வழியில் குறுக்காக நிற்கின்ற காரியங்களை எடுத்துப்போட்டு தண்ணீரானது பாய்ந்தோடும் படிக்குச் செய்வது தான். மக்கள் சுகமாக்கப்படுவதை நீங்கள் காண வேண்டுமா? உங்களுக்கே வியாதியிலிருந்து குணமாக்கப்பட விரும்புகிறீர்களா? குறுக்கே இருக்கின்ற எல்லா சந்தேகத்தையும் எடுத்துப் போடுங்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள், அது ஒரு நதியைப் போல பாய்ந்தோடும். 73. ஆகவே அப்பொழுது அடுத்த நாள் காலையில் சத்துரு நோக்கிப் பார்த்தான். தூரத்திலிருந்த அந்த இடத்தை அவன் பார்த்தபோது அது தண்ணீராய் இருந்தது. ஆனால் விரோதிக்கு எப்படி காணப்பட்டது என்றால் சூரியன் தண்ணீர் மேல் பிரகாசித்ததினால் அவர்களுக்கு அது இரத்தம் போல் காணப்பட்டது. அது அவனுக்கு பயத்தை உண்டாக்கினது. அது சரியே. அப்பொழுது அவனுடைய மனதில் சிறிய அற்ப எண்ணமானது ஏற்பட்டு அவனைக் குழப்பி அதற்குள்ளாக அவனை சிக்க வைத்தது. தீர்க்கதரிசி அவர்களிடமாக என்ன கூறினான்? அவன் "என்ன, இது கர்த்தருக்கு அற்ப காரியம். அந்த மரக்கட்டைகள் எல்லாவற்றையும் வழியிலிருந்து நீங்கள் அகற்றுவீர்களானால், மற்றதை நான் பார்த்துக்கொள்வேன். நீங்கள் அதை எடுத்துப் போட்டால் - குறுக்கே இருக்கின்ற எல்லா அவிசுவாசத்தையும் நீங்கள் எடுத்துப் போடுவீர்களானால் மற்ற எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொள்வார்" என்று கூறுனான். 74. என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அவன், "நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கல்லை (rock) எடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு அந்த தேசத்தை கொடுக்கப்போகிறேன். நீங்கள் அதை சுதந்தரிக்கும்படிக்கு நான் உங்களுக்கு செய்யப்போகிறேன்" என்றான் . அப்பொழுது ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்லை எடுத்துக் கொண்டான், அவன் அங்கே அந்த பழைய குளிர்ந்த போன சடங்கச்சாரமான கிணறுகள் இருந்த இடத்திற்கு சென்ற போது, அவன் ஒரு அருமையான கல் (rock) சாட்சியைக் கொண்டிருந்தான். ஆமென். "கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவனே எனக்கு பரிசுத்த ஆவியைத் தாரும். நான் - நான் சீமோனைப் போல இருக்கின்றேன். அந்த சிறிய கல்லாகிய பேதுருவாக நான் இப்பொழுது இருக்கிறேன்.” ஆமென். அப்பொழுது ஒவ்வொருவனும் தன் கையில் ஒரு கல்லை வைத்திருந்தான் , ஒரு உண்மையான சாட்சி, ஒரு உண்மையான தீப்பிழம்பான ஒரு சாட்சி .... இயேசு பேதுருவுக்கு முன் வந்து நின்று, "உன் பெயர் சீமோன். இது முதல் சிறிய கல் என்ற, பேதுரு என்று நீ அழைக்கப்படுவாய்" என்று கூறின போது, சகோதரனே, அவன் அதைப் பிடித்துக்கொண்டான். அது மேசியா என்று அவன் அறிந்து கொண்டான். அவன் புறப்பட்டுச் சென்றான். அந்த கல்லுடனே அந்த குளிர்ந்த சடங்காச்சாரமான கிணறுகளை அவன் நிறுத்திப் போட்டான். 75. இன்றிரவு நமக்கு தேவைப்படுவது என்னவென்றால் அதே விதமான ஒரு சாட்சியை நாம் கொண்டிருப்பது தான் அது.... ஓ, இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார், அவர்... அது இந்த பழைய குளிர்ந்த சடங்காச்சார சாட்சியான அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லவே இல்லை” என்று கூறுகின்ற காட்சிகளை அது நிறுத்தி விடும். அது பழைய வெடிப்புள்ள தொட்டிகள் ஆகும். எப்படியாயினும், அதில் நெளிந்து கொண்டிருகின்ற புழுக்கள் இருக்கும். அது அவைகளை நிறுத்திப்போடும். நீங்கள் சாட்சி என்னும் கல்லை அங்கே அதிலே போடுங்கள். "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்று மாறாதவராயிருக்கிறார்.'' ஆவிக்குள்ளாகுங்கள். நீங்கள் ஆவிக்குள்ளாகச் செல்ல வேண்டியவர் களாக இருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு நடனத்திற்குச் சென்று நடனமாக ஆரம்பிக்கும் போது அப்பொழுது அவர்கள் தங்கள் கைகளைத் தட்ட ஆரம்பிப்பார்கள். (சகோதரன் பிரான்ஹாம் விளக்கத்துடன் எடுத்துரைக்கின்றார் - ஆசி) உங்களுடைய எல்லா .... நீங்கள் நடனமாடுபராக இருப்பீர் அல்லவா? நிச்சயமாக. ஆமாம். நீங்கள் நிச்சயமாக அதன் ஆவியில் இருக்கிறீர்கள். ஆனால் அவர்களோ ஆர்வக்குரலிட்டு அதை எழும்பச் செய்து நடனமாடி, கூச்சலிட்டு, சத்தமிடுவார்கள். 76. அந்த விதமாகத்தான் நீங்கள் ஒரு எழுப்புதலை பெறுகிறீர்கள். அது எப்படியென்றால் நீங்கள் உண்மையாகவே அந்த எழுப்புதலின் ஆவிக்குள்ளாகச் செய்வதனால் தான். அதை ஆர்வகுரலிட்டு எழும்பச் செய்வது அல்லது ஏதோ ஒன்றைக் கொண்டு செய்வது அல்ல, ஆனால் ஒரு எழுப்புதலானது உங்கள் இருதயத்தை அடையும் வரைக்குமாகவும், ஸ்தாபன பக்தி காரியங்களான மரக்கட்டைகள் எல்லாம், அதி தீவிர மூட பக்தி வைராக்கியம் என்ற மரக்கட்டைகள் எல்லாம் ஸ்தான அமைப்புகள் மரக்கட்டைகள் எல்லாம், அவிசுவாசம் என்ற மரக்கட்டைகள் எல்லாம் வெளியே அடித்துச் செல்லப்படும் வரைக்குமாக அமைதியுடனே ஜெபித்தலினால்தான். அப்பொழுது தேவனுடைய தண்ணீர் உங்கள் மேல் விழும். உங்களுக்கு புரிகின்றதா. அப்பொழுது உங்கள் சாட்சி எப்படியிருக்குமென்றால் வீட்டிற்கு பின்புறமும் இங்கே வெளியிலும் நீங்கள் சிகரெட் புகைக்கமாட்டீர்கள், சபை முழுவதுமாக குதித்துக் கொண்டு நான் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டேன் என்று கூறிக்கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் சத்தமிடுகிற வெண்கலமும் ஓசையிடுகிற கைத்தாளமுமாக இருப்பீர்கள். அதை மக்கள் சரியாக அறிந்து கொள்வார்கள். நீங்கள் இங்கிருந்து சென்று இப்படிப்பட்டதான வாழ்க்கையை வாழ்ந்து, பெண்கள் தங்கள் தலை மயிரை கத்தரித்துக் கொண்டும், தங்கள் உதடுகளுக்கு வர்ண சாயம் இட்டுக்கொண்டும் அங்கே வெளியே சென்று “நான் ஒரு பெந்தெகொஸ்தேயினன்” என்று கூறுகிறீர்கள். ஓ, மிகவும் பரிதாபத்திற்குரிய நீங்கள்......... 77. பிரசங்கிகளாகிய நீங்களும் உங்கள் சபையின் டீக்கன்களும் நான்கு அல்லது ஐந்து வெவ்வேரு மனைவிகளை வைத்துக் கொண்டு அவ்விதமான காரியங்களுடன் "நான் பெதெகொஸ்தே” என்று கூறுகிறீர்கள். ஓ. அதை விட உலகமானது அதிகமான உணர்வாற்றல் விவேகத்தைக் கொண்டிருக்கிறது. அவர்கள் இதைக் காட்டிலும் காரியங்களை அறிதலில் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஆம் ஐயா... ஓ, என்னே. சபையை விட்டுச் சென்று பிறகு குதிரைப் பந்தயங்களில் பங்குக் கொண்டு பந்தயம் கட்டுதல் மற்றும் எல்லா காரியங்களையும் செய்தல், அதன் பிறகு உங்களையே.... என்று அழைத்துக்கொள்கிறீர்கள். உங்களில் அநேகர் வீட்டிலே இருந்து விடுகிறீர்கள். ஜெபக் கூட்டத்திற்கு செல்லும் முன்னர் தொலைகாட்சி நிகழ்ச்சியைக் கேட்கிறீர்கள். "நான் ஒரு பெந்தெஸ்கொதே" என்று கூறுகிறீர்கள். ஹோ, ஹோ , உங்களுக்கு பெந்தெகொஸ்தே என்ற பெயர் மாத்திரமே சூட்டப்பட்டிருக்கிறது. பெந்தெகொஸ்தேயின் அனுபவத்தை நீங்கள் பெறவேயில்லை. சகோதரனே, சபைதான் உங்கள் இருதயத்தில் முதலாவதாக இருக்கின்றது. அதன் எல்லாமும் தேவனே, தேவன் தான். அதில் நீங்கள் கண்டு அறிந்து கொள்வதாக இருக்கின்ற ஒன்றே ஒன்று தேவன் தாமே. பெந்தெகொஸ்தே என்ற பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்ற அந்த குழு தாமே "ஓ, அந்த காரியம் பைத்தியக்காரத்தனமான அர்த்தமற்ற ஒன்றாகும். அதை விசுவாசிக்காதே" என்று கூறுகிறது. பாருங்கள்? ஆனால் கர்த்தருடைய தரிசனமானது கர்த்தருடைய வார்த்தையினால் தான் வருகின்றது. அதன் எல்லாவற்றையும் தோண்டி வெளியே எடுத்துப் போடுங்கள். அதில் இருக்கின்ற எல்லா அவிசுவாசத்தையும் தோண்டி வெளியே எடுத்துப்போடுங்கள். அப்பொழுது ஜீவ தண்ணீர் தாராளமாக புரண்டோடி "அற்புதங்களின் நாட்கள் கடந்து போயிற்று” என்று கூறிக் கொண்டிருத்தலை நிறுத்திப் போடட்டும். சபையானது உண்மையாகவே திரும்பட்டும். 78. “பெந்தெகொஸ்தே வெறும் பாவனை விசுவாசமே தவிர வேறொன்றும் அல்ல” என்று கூறப்படுகின்றது. வாய்க்காலில் இறங்கி பாறை படும் வரைக்கும் -- தோண்டிக் கொண்டே இருங்கள். பெந்தெகொஸ்தே அனுபவமானது உங்களுக்கு சம்பவிக்கட்டும், பிறகு சகோதரனே என்ன நடக்கின்றது என்று பாருங்கள். உங்கள் ஜீவியத்தை யாராலுமே குற்றப்படுத்தவே முடியாது. ஆம் ஐயா, ஒரு துப்பாக்கியின் குழலானது எப்படியாக நேராக இருக்கின்றதோ அதே போல எந்த வளைவும் இல்லாமல் இருப்பீர்கள். ஒரு நற்பண்பான உண்மையான மனிதனாக இருப்பீர்கள். நீங்கள் ஒரு தேவ மனிதனாக, உண்மையான மனிதனாக இருப்பீர்கள், நீங்கள் ஒரு தேவ மனுஷியாக, உண்மையான ஒரு பெண்மணியாக இருப்பீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்படும் போது, ஒரு காகிதத்தின் இரு பக்கங்களிலும் முத்திரையானது இருக்கும். அப்பொழுது அவர்கள் நீங்கள் போகும்போது காண்பார்கள், நீங்கள் வரும்போதும் பார்ப்பார்கள். நீங்கள் கிறிஸ்தவனாக காணப்படுவதையும், கிறிஸ்தவனாக நடந்து கொள்வதையும், கிறிஸ்தவனாக பேசுவதையும், அதைப் போன்றவர்களுடனே உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதை யும் உலகம் கண்டு அறிந்து கொள்ளும். நீங்கள் பரிசுத்த ஆவியால் முத்தரிக்கப்படும்போது நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறீர்கள். நமக்கு அதைச் செய்யும்படிக்கு தேவனை நாம் அனுமதிப் போமானால், அதைச் செய்வதற்கு அவர் ஆயத்தமாயிருக்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 79. இப்பொழுது அடுத்தாக செய்ய வேண்டிய காரியமானது என்ன? "பிரசங்கியே, நீங்கள் செய்யவேண்டிய அடுத்த காரியமானது என்னவென்றால், நீங்கள் வந்து என் மீது கைகளை வைத்தல் தானே?" அதற்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அப்படிச் செய்வதானது நீங்கள் ஏதாவதொரு சிறிய காரியத்தை உதைத்து தள்ளும்படிக்குச் செய்யும். அவ்வளவுதான். அது அப்படி அல்ல. சகோதரனே, செய்ய வேண்டிய காரியமானது என்னவென்றால், தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு "அது சாத்தியம், அதை நான் விசுவாசிக்கிறேன். எனக்குள்ளாக அப்படியே இருக்கின்ற தேவை யற்ற காரியங்கள் இருக்கின்றன, சரியாக இப்பொழுதே அவைகளை தூக்கி வெளியே போடுகிறேன். என் அவிசுவாசத்தை வெளியே போடுகிறேன், அதை நான் தேவனுடன் சரிப்படுத்திக் கொள்கிறேன். நான் விசுவாசிக்கப் போகிறேன்" என்று கூறுங்கள். உங்கள் இரட்சிப்பிற்காக விசுவாசியுங்கள். இப்பொழுது - இப்பொழுது, உங்கள் இரட்சிப்பைக் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. அதை நீங்கள்தான் கண்டு நீங்களே செயலில் இறங்க வேண்டும். ஆனால் கிறஸ்து இன்னுமாக ஜீவிக்கின்றார். அரசாளுகிறார். இன்றிரவு அவர் இங்கே இருக்கின்றார். அதை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் செய்ய வெண்டியது என்ன? ஆவிக்குள்ளாகச் செல்லுதல் தான். நீங்கள் ஆவிக்குள்ளாகச் செல்லும் போது அப்பொழுது நீங்கள் அந்த தரிசனத்தைக் காண்பீர்கள். ஆனால் நீங்கள் “சரி, தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் ஒரு மெதோடிஸ்ட். அந்தவிதமான ஒரு காரியத்தை நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறுவீர்களானால்... "நான் ஒரு பாப்டிஸ்ட்.'' "நான் அசெம்பிளீஸ் சபையைச் சேர்ந்தவன்." "நான் ஒருத்துவ சபையைச் சேர்ந்தவன்.” - என்பீர்களானால், சரி. அப்படியானால் தொடர்ந்து செல்லுங்கள் - அந்த தரிசனத்தை உங்களால் காணவே முடியாது. ஆனால் நீங்கள் அந்த காரியத்தை புறம்பே வீசி எறிந்து விட்டு பிறகு ஒரு தரிசனத்துக்குள்ளாக சென்று இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்று பார்ப்பீர்கள், இங்கே சபையானது அழிந்து கொண்டிருப்பதை பார்ப்பீர்கள், தரிசனத்துக்குள்ளாகச் செல்லுங்கள், சகோதரனே இன்னும் ஆழமாகத் தோண்டுங்கள். நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அப்பொழுது உங்களுக்கு ஏதோ ஒன்று சம்பவிக்கும், நீங்கள் எழுப்புதலின் ஆவிக்குள்ளாகச் செல்லுவீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 80. அப்படியானால் நாம் எல்லாருமே ஆவிக்குள்ளாகச் சென்று அதை விசுவாசிப்போமாக. நமக்கு அவர் தரிசனத்தை தரும்படியாக நாம் கேட்கையில் சிறிது நேரம் நம் தலைகளை தாழ்த்துவோமாக. பரலோகப் பிதாவே. அழிந்துபோய் கொண்டிருக்கின்ற ஒரு தேசத்தில் நாங்கள் இருக்கின்றோம். அழிந்துகொண்டிருக்கின்ற ஒரு உலகத்தில் இருந்து, அழிந்து கொண்டிருக்கின்ற மக்களிடமாக நாங்கள் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறோம். நான் - நான் ஒரு மனிதன் மாத்திரமே. மற்ற எல்லா பிரசங்கிகளும் மனிதரே. ஆனால் நீரோ அழியாத தேவன், நான் இன்றிரவு ஜெபிப்பது என்னவென்றால், கர்த்தாவே, நான் பேசியுள்ள இந்த செய்தியானது, மேலும் நான் ஆறு மாத காலமாக நடுக்கத்துடனே நான் மேற்கொண்டு முடித்துள்ள என்னுடைய பிரயாணமானது. அதினாலே கர்த்தாவே நான் சரியாகக் கூறாதிருக்க வாய்ப்புண்டு. ஆகவே நான் சரியாக கூறாதிருக்கும் பட்சத்தில் பரிசுத்த ஆவி அதை சரிப்படுத்தி எல்லா கோணல்களையும் எடுத்துப் போடும்படிக்குச் நீர் தாமே செய்வீராக. தேவனே, ஆபிரகாமுக்கு நீர் செய்தது போல. அவன் கூறினது..... அவனுக்கு... அவனுக்கு பதைபதைப்புகள், கலக்கம் இருந்தது என்று எங்களுக்கு தெரியும். அவன் சந்தேகம் (staggered) கொண்டான். மேலும் அவன்.... ஆனால் அவனுடைய ஜீவியத்தை குறித்து எழுதப்பட்டுள்ள தெய்வீக விளக்க உரை என்ன கூறுகிறதென்றால், என்ன, தேவனுடைய வாக்குத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவனை மகிமைப்படுத்தி வல்லவனானான் என்று கூறுகிறது. 81. ஆகவே தேவனாகிய கர்த்தாவே, என்னுடைய எல்லா தடுமாற்றங்களையும், சரியாக உருவகப்படாத வார்த்தைகளும், தவறாக உச்சரிக்கப்பட்ட சொற்களும் இன்னுமாக பிறவற்றும் ஆகியவற்றை பரிசுத்த ஆவி தாமே எல்லாவற்றையும் சமன்படுத்தி சரி செய்து இன்றிர விற்கான இந்த செய்தியின் ஒவ்வொரு காரியத்தை குறித்தும் ஒவ்வொரு இருதயத்திலும் தெய்வீக விளக்க உரையை அது அளிக்கும்படிக்கு நீர் தாமே செய்வீராக. நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது... இன்னுமாக தேவனுடைய ஊழியக்காரர் இருக்கின்றனர். தேவனை நேசிக்கும் மக்களும் இன்னுமாக இருக்கின்றனர். அவர்கள் பேரில் அக்கறை கொள்ளுகிற தேவனும் இருக்கின்றார். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் அடிக்கப்பட்ட ஒரு இரட்சகர் இன்னுமாக இருக்கின்றார். அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். அந்த அதே இரட்சகர் "நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான் ” என்று கூறினார். தேவனே, இருக்கின்ற ஒவ்வொரு பழைய கட்டைகள் அகற்றப்படட்டும், ஒவ்வொரு துரும்பு பிடித்த வாளிகளும், காரியங்களும் இன்றிரவு வழியிலிருந்து எடுத்துப் போடப்படுவதாக. அதினாலே ஜீவத்தண்ணீர் தாராளமாக புரண்டோடுவதாக. தேவனே, என்னை உள்ளும் புறமுமாக திருப்பி என்னைக் கழுவி என்னை சுத்தமாக்கும் கர்த்தாவே. உம்முடைய ஆவியினாலே என்னை இப்பொழுது நிரப்பும். இங்கே இருக்கின்ற மக்களை விசுவாசத்தினாலே நிரப்பும். இங்கே இருக்கின்றவர்களில் விசுவாசியாமல் இருப்பார் களானால் அவர்கள் தாமே கண்டு விசுவாசிக்கும்படி செய்யும். இயேசு வின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். இப்பொழுது இன்றிரவு, அவர்கள் ஒவ்வொருவரும் ஆவிக்குள்ளாகச் செல்லட்டும், ஆவியினாலே நாங்கள் எல்லாரும் நிரப்பப்பட்டு, எல்லாரும் சுகமாக்கப்பட்டு இரட்சிக்கப்படுவார்களாக. அதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.  82. இம்மானுவேல் இரத்த குழாய்களிலிருந்து வருகிற ஊற்றுண்டு அந்த இரத்ததில் மூழ்கும் பாவிகளின் எல்லா குற்றக் கறைகளும் நிவிர்த்தியாகுமே எல்லா குற்றக் கறைகளும் நிவிர்த்தியாகுமே (நாம் இதை..நம்முடைய கரங்களை உயர்த்துவோமாக) ... எல்லா குற்றக் கறைகளை நிவிர்த்தியாகுமே அந்த இரத்தத்தில் மூழ்கும் பாவிகளின் எல்லா குற்றக் கறைகளும் நிவிர்த்தியாகுமே. இப்பொழுது நம்முடைய தலைகளை தாழத்துவோம். மரித்துக் கொண்டிருந்த அந்த... (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய வாய் மூடிய வாறே அந்த பாடலை இசைக்கின்றார் - ஆசி.) 83. ஓ தேவனாகிய பிதாவே, நாங்கள் இப்பொழுது எங்கள் எல்லா அவிசுவாசத்தினின்றும் மரித்துக்கொண்டிருக்கிறோம். நீர்தாமே எங்களுக்குள்ளாக இப்பொழுது இன்னும் ஆழமாக தோண்ட வேண்டும் என்னும் வாஞ்சையை உண்டாக்கும். பிதாவே, நாங்கள் தோண்டு கிறோம். என்னை ஆராய்ந்து என்னை சோதித்து எனக்குள்ளாக ஏதாவது அவிசுவாசம் இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும். அப்படி இருக்குமானால், அதை சரியாக இப்பொழுதே வழியிலிருந்து அகற்றி போட எனக்கு உதவி செய்யும். இந்த - அந்த வாய்க்காலை நான் சுத்தம் செய்ய எனக்கு உதவி செய்யும். அதினாலே தேவனுடைய வல்லமை யானது பாய்ந்தோட ஏதுவாயிருக்கும். கர்த்தாவே இந்த மக்கள் திரளுக்கு உதவி செய்யும். நான் அவர்களுக் காக ஜெபிக்கின்றேன். ஒவ்வொரு வாய்க்காலும் சுத்தமாயிருக்கும்படிக்கு நீர்தாமே உதவி செய்ய நான் ஜெபிக்கின்றேன் . கர்த்தாவே இங்கே வந்திருக்கின்ற ஒவ்வொரு சபையையும் சுத்தமாக்கும். எல்லாரையும், ஒரு ஸ்தாபனத்திலிருந்து மற்றொரு ஸ்தாபனம் வரைக்குமாக இங்கு வந்துள்ள எல்லாரையும் சுத்தப்படுத்தி எல்லா அவிசுவாசத்தையும் வெளியே எடுத்துப் போடும் கர்த்தாவே. அதிலிருக்கின்ற உலக முறைமைகள் எல்லாவற்றையும் வெளியே எடுத்துப் போட்டு சுத்தப்படுத்தும், அப்பொழுது பரிசுத்த ஆவியின் இனிமையான ஐக்கியமானது தேவனுடைய வாய்க்கால்களின் வழியாக இன்றிரவில் இங்கே பாய்ந்தோடி வந்து, புதிய வெளிப்பாட்டை ஜீவ வார்த்தையைக் கொண்டு வருவதாக, அது தாமே இன்றிரவு இங்கே இருக்கின்ற ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் செல்வதாக. 84. கர்த்தாவே, நீர் இங்கே இருக்கின்றீர் என்பதை நான் அறிவேன். அவர்கள் என்னை உம்முடைய ஞானதிருஷ்டிக்காரன் அல்லது உம்முடைய விசுவாசியாக, ஒரு உதாரணமாக காண்பிக்கப்படுகின்ற விதத்தில் இருக்கின்ற ஒருவனாக என்னை நோக்கிப் பார்க்கின்றனர். ஆகவே பிதாவாகிய தேவனே, நீர்தாமே இன்றிரவு எனக்கு உதவி செய்யும்படிக்கு நான் ஜெபிக்கின்றேன். அதினாலே பரிசுத்த ஆவியா னவர் தாமே என்னுடைய ஆத்துமாவிற்குள்ளும் என்னுடைய இருதயத் திற்குள்ளும், என் ஜீவியத்திற்குள்ளும், என் கண்களுக்குள்ளும், என் சரீரத்திற்குள்ளும் தாராளமாக செல்ல நுழைவுரிமை கொண்டிருப்பதாக. என்னிடம் மாத்திரம் அல்ல இங்கே இருக்கின்ற ஒவ்வொரு நபருக்குள்ளாகவும் செல்லட்டும். விசுவாசிக்காதவர்கள் விசுவாசிகளின் மூலமாக ஆவியானவர் கிரியை செய்வதைக் கண்டு அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து தண்ணீரானது புறப்பட்டு வந்து அவர்களினூடாக செல்லுமானால், எனக்குள்ளாகவும் அந்த தண்ணீரால் செல்ல முடியும்” என்று கூறுவார்களாக. பிதாவே இதை அருளும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கின்றேன். ஆமென். மேலும் பிதாவே, இங்கே என் பின்னால் உட்கார்ந்திருக்கின்ற என் சகோதரரை, இந்த விலையேறப் பெற்ற மனிதரை நீர்தாமே ஆசீர்வதிக்கும் படியாக நான் ஜெபிக்கின்றேன். நான் ஒரு பாவியான பையனாக இருந்த போது அவர்களில் சிலர் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருந்தனர். தேவனே, அதை அருளும், இங்கே உட்கார்ந்திருக்கின்ற மனிதரில் சிலர் ஊழியக் களத்தில் நீண்ட காலமாக இருக்கின்றனர். அவர்கள் காய வடு பெற்றிருக்கின்ற போர் வீரர் ஆவர். அநேக சமயங்களில் ஸ்தாபன முறைமைகளானது மனிதரை..... ஆனால் கர்த்தாவே, அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் தேவனுடைய அசைவை காண வேண்டுமென்று அவர்கள் - அவர்கள் - அவர்கள் விரும்புகின்றனர். மேலும் நாங்கள் காண்பது என்னவென்றால் பிசாசு ஒரு காரியத்தை செய்ய மாட்டான். மற்றொரு காரியத்தை செய்வான் என்பதே. அவன் ஒரு காரியத்தை குழப்பிவிடுவான் மற்றும் வேறொரு காரியத்தை ஒழுங்கில்லாமல் செய்துவிடுவான். அப்பொழுது அது இவர்கள் காரியத்தில் சிறிது பின் தங்கி விட நேரிடுகின்றது. பிதாவே, அந்த உண்மையான நீரூற்றிற்கு ஒவ்வொரு இருதயமும் இன்றிரவு திறக்கப்படுவதாக. 85. இப்பொழுது, தேவனே. என்னால் பேச முடியும். நான் ஒரு மனிதன் மாத்திரமே. என்னால் எந்த ஒரு காரியத்தையும் கூறி அது சரியானதாக தொனிக்கும்படிக்கும் செய்யக்கூடும். ஆனால் இன்னுமாக அது நீரே என்பதாக இருக்காது. கர்த்தாவே, உம்மிடமிருந்து பிறக்கும் ஒரு வார்த்தை மாத்திரமே அதை நிருபிக்கும். நீர் "உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால் அல்லது ஆவிக்குரியவனாக இருந்தால், கர்த்தராகிய நான் அவனுடன் பேசி, அவனுக்கு தரிசனங்கள் காண்பித்து, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். அவன் சொன்னது நடந்தால் அப்பொழுது அவனுக்கு செவிகொடுங்கள். ஆனால் அவன் கூறினது நிறைவேறாமலும் போனால் அவனுக்கு நீ பயப்படவேண்டாம். ஏனென்றால் நான் அவனுடன் இல்லை. ஆனால் அது நிறைவேறு மானால் அதற்கு நீங்கள் செவி கொடுங்கள்” என்று கூறியிருக்கின்றீர். இப்பொழுதும், பிதாவாகிய தேவனே, அதை நான் இன்றிரவு வேதவாக்கியங்களைக் கொண்டு நிருபித்திருக்கிறேன். நீர் கிறிஸ்து என்று ஒவ்வொரு இரவும் நிருபித்திருக்கிறேன். நீர் - நீர் தான் அந்த மனுஷ குமாரன். எங்கள் பாவங்களையும் அவிசுவாசத்தையும் எடுத்துப் போடவும் உம்முடைய ஜீவன் தாமே எங்கள் மூலமாக பாய்ந்தோடவுமே நீர் அடிக்கப்பட்டீர். இப்பொழுது, இன்றிரவு நீர்தாமே தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கின்றீர் என்றும், அங்கே மேலே சிங்காசனத்தில் எங்களுடைய பலவீனங்களுக்காக பரிதபிக்கப்படக்கூடிய மகா பிரதான ஆசாரியராக இருக்கின்றீர் என்றும் நான் மக்களுக்கு கூறுகிறேன் . கர்த்தாவே, இன்றிரவு அநேக இரத்தப்போக்கு பெரும்பாடுகள் கொண்டிருப்பவர் இருப்பர், அது நின்று போவதாக. அதை அருளும். ஏனென்றால் அவிசுவாசமானது வெளியே ஓடிச் செல்கிறது. இதை நான் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கின்றேன். ஆமென். 86. எனக்குத் தெரிந்த வரையில் கடந்த ஞாயிறு பிற்பகலிற்கு பிறகு நாங்கள் ஜெப அட்டையை கொடுக்கவில்லை என்று நான் நம்புகிறேன். ஜெப வரிசையை நாம் அழைக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு இரவும் பரிசுத்த ஆவியானவர் நேராக மக்களின் மத்தியிலே சென்றார். அது உண்மை என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்? பத்து, பதினைந்து. இன்னுமாக, ஒரு இரவில் அங்கே உள்ள மக்களின் மத்தியில்தான். ஜெப அட்டைகள் இல்லாமல் மக்கள் இருந்தார்கள். அந்த அட்டைகளில் சிலவற்றை நான் எடுக்காததற்கு சிறிது குற்ற உணர்ச்சி போல உணருகிறேன். நான் சிறிது தாமதமாக முடித்தேன் என்று எனக்கு தெரியும். ஆனால் கடந்த இரவு கூறினேன். (கடந்த இரவும் நான் தாமதமாக முடித்தேன்) நான் "நாளை இரவு சில ஜெப அட்டை களை தியோகிக்க முயற்சிப்போம்” என்று கூறினேன். ஆகவே பில்லி, நான் அவனை இன்றிரவு அனுப்பினேன். அவனிடமாக ” சில ஜெப அட்டைகளைக் கொடு” என்று கூறினேன். ஆகவே அவன் அதை கொடுத்திருக்கின்றான். அவன் B1 முதல் 50 அட்டை எண் கொடுத்தாக கூறினானா? 1 முதல் 100 வரைக்குமா? B1லிருந்து 100 வரை சரி, அதிலிருந்து ஆரம்பிக் கின்றது. நாம் தாமே.... முன்பொரு நாள் நீங்கள் ஆரம்பித்தீர்கள். நாங்கள் மற்றொரு நாள் எண் 1லிருந்து ஆரம்பித்தோம். அப்படித்தானே? ஓ, ஆம். நமக்கு இரண்டு இரவு இருந்தது. என்னை மன்னிக்கவும். அடுத்த தடவை நாங்கள் B .... ஆரம்பித்தோம். நான் ஆரம்பித்தது 80... 1 லிருந்து 25 வரை, அதன் பிறகு நாங்கள் 85லிருந்து 100 வரைக்கும் துவக்கினோம். 87. சரி, அப்படியானால் இன்றிரவு நாம் இந்த எண்களின் நடுவி லிருந்து ஆரம்பிக்கலாம். நான் எண்.25லிருந்து - 25 முதல் 50 வரை, நாம் ஆரம்பிப்போம். அது எப்படியாக இருக்கும்? எண்.B-25 வைத்திருப்பவர் யார், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அங்கே யாரோ ஒரு பெண்? பெண்ணே, நேராக இங்கே வாருங்கள். 26. 26? சரி பெண்ணே இங்கே வாருங்கள். அவர்கள் கட்டடம் முழுவது மாக உள்ளனர். இப்பொழுது, பையன் வந்து இந்த அட்டைகளை கொடுக்கும் போது அவைகளை அவன் எடுத்து உங்களுக்கு முன்னர் குலுக்கி, அதன் பிறகுதான் ஒரு அட்டை உங்களுக்கு கொடுக்கின்றான். அதின் எண் எங்கிருந்து ஆரம்பித்தாலும் சரி. நாங்களும் ஏதாவதொரு எண்ணிலிருந்து அழைக்க ஆரம்பிக்கிறோம். நீங்கள் பாருங்கள். அட்டை எண்கள் எதிலிருந்து அழைக்கப்படும் என்று யாருக்குமே தெரியாது. நாங்கள் ஒரு எண்ணிலிருந்து இன்னொரு எண் வரைக்குமாக அழைக்க ஆரம்பிக்கிறோம். இப்பொழுது, எங்கிருந்து ... 25. அப்படித் தானே? 26 எண்ணா ? 25, 26, யாரிடம் அட்டை எண்.26 உள்ளது? சரி, 26 இங்கே வாருங்கள். 27, யாரிடம் ஜெப அட்டை எண்.B-27 உள்ளது? B என்றால் பாஸ்டன் என்ற வார்த்தையில் உள்ளவாறே, 27 சரி 28? என்னால் கரத்தை காண முடியவில்லை . தயவு செய்து, 29, 30, 31, யாரிடம் 31 இருக்கின்றது? உங்கள் எண்ணை நான் அழைக்கும் வரை நீங்கள் சற்று காத்திருக்க நான் விரும்புகிறேன். அப்பொழுது எண் சரியாக வருகிறதா என்று என்னால் நிச்சயிக்க முடியும். யாராவது ஒருவர் செவிடராக அல்லது ஏதோ ஒன்றால் பீடிக்கப்பட்டு "சகோதரன் பிரன்ஹாம், (அவர்கள் எனக்கு எழுதி காண்பிப்பார்கள்) என் எண் அழைக்கப்பட்டது. ஆனால் நான் கேட்கும் திறன் இல்லாத செவிடன், நீங்கள் அழைத்தபோது யாருமே என்னிடம் கூறவில்லை. ....ஏன் என்று கேட்டால் உங்கள் எண் அழைக்கப்படும் போது நீங்கள் வெளியே சென்று விட்டீர்கள் என்று நாங்கள் நினைத்தோம் என்பார்கள்" என்று கூறுவர். இன்னொருவர்... "நான் முடமாயிருந்தேன், என்னால் என் கரத்தை உயர்த்த முடியவில்லை. யாருமே என்னை மேலே தூக்கவில்லை. எனக்கு ஜெபம் செய்யப்படவில்லை” என்பார். பிள்ளையே, தேனே, உனக்காக ஜெபிக்கப்படுகிறது. ஒவ்வொரு இரவும் உங்களுக்கு ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது. இயேசு சரியாக இப்பொழுது உங்களுக்காக அந்த மகத்தானவருடைய வலது பாரிசத்தில் இருந்து பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நீங்கள் அவரை விசுவாசிக்க மாத்திரம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 88. சரி. நான் எந்த எண்ணில் இருக்கின்றேன்? எண் . 26? இருபத்தொன்று, இரண்டு... எப்படி... சகோதரன் எங்கே...31, 32? சரி. 33? 34? 34? என்னால் காணமுடியவில்லை . 30 - 34? ஜெப அட்டை எண்.34? நீங்கள் அந்த அட்டை வைத்திருப்பவரைக் காண்பீர்களானால்.... யாராவது சற்று சுற்றமும் முற்றும் பாருங்கள். ஒருக்கால் யாரோ ஒருவர் செவிடராக இருப்பார், பேச முடியாத ஊமையாக இருப்பார் அல்லது எழுந்து நிற்க முடியாதவராக இருப்பார். 34? அவர்களை தவறவிட நான் விரும்பவில்லை. ஒருக்கால் அவர்கள் இங்கே வர புறப்பட்டார்களா. 34? 35? B - 35? சரி. சரி. 34, எண் 34 வந்து விட்டாரா, 34? B-34? 35 அங்கே இருந்தாரே. 36? பயப்படாதீர்கள், நீங்கள் பாவம் செய்திருப்பீர்களானால், தவறு செய்திருப்பீர்களானால் அதை அறிக்கையிடுங்கள், நீங்கள் இங்கே வருகையில் அது இரத்தத்தாலே மூடப்பட்டிருக்கும். அறிக்கை செய்யாத பாவத்தை நீங்கள் கொண்டிருந்து இங்கே வந்து நிற்கும் போது என்ன சம்பவிக்கும் என்று உங்களுக்கு தெரியுமல்லவா? ஆம். அப்படியானால் ஜெப அட்டையை வாங்கவே வேண்டாம். முதலில் ஜெபம் செய்யுங்கள். பிறகு ஜெப அட்டையை வாங்குகள். புரிகின்றதா? சரி, நாம் இப்பொழுது ஜெப வரிசையை ஆரம்பிப்போம். சரி. அங்கே எத்தனைப் பேரிடமாக இருக்கிறது. எனக்கு தெரியாது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, மூன்று என்பது ஒரு சாட்சியாகும். அது போதுமானதாக இருக்கும். சரி... 89. இந்த கூட்டத்திலே ஜெப அட்டை இல்லாதவர்கள் எத்தனைப் பேர் அங்கே இருக்கிறீர்கள். சரி, உங்கள் கரத்தை நான் காணட்டும். நீங்கள் வியாதி உள்ளவர்கள். தேவன் உங்களை சுகமாக்க விரும்புகிறீர்களா. கட்டடத்தில் எங்கிருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை . (எந்த எண்?) 36? 37? 38? 39? 40? அதில் இரண்டு பேர் வருகின்றனர். நாற்பது முதல் ஐம்பது வரைக்குமா? மூன்று. மற்றொன்று? (நான் தவறாக அழைக்கின்றேன். அப்படித்தானே? நான் பிரசங்கித்துவிட்டு பீட அழைப்பை செய்திருக்க வேண்டும்.) சரி. சரி. நீங்கள் வருவீர்களானால். ஜெப வரிசையை நாம் ஆரம்பிப்போமாக. எல்லாரும் மிகுந்த பயபக்தியுடன் இருங்கள். உங்களால் கூடுமான வரைக்குமாக இப்பொழுது பயபக்தியுடன் இருங்கள். சிறிது நமது தலைகளை தாழ்த்துவோமாக. ("நம்பிடுவாய்,” சகோதரனே, நீங்கள்............) நம்பிடுவாய்... இன்றிரவு மிகவும் கடுமையான ஒரு செய்தியாக இருந்தது. இப்பொழுது ஆவியானவர் வரும்படிக்கு நாம் விரும்புகிறோம். நம்பிடுவாய்...  90. இப்பொழுது, அவர்கள் வருகையில், இதை நான் கேட்க விரும்புகிறேன் : கிறிஸ்து இங்கே இருக்கின்றார் என்று அவர் நிருபிப்பாரானால் உங்களில் எத்தனை பேர் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்கள். உங்கள் இருதயத்தில் இருக்கின்ற ஒவ்வொரு கட்டையை எடுத்து வெளியே போடுவீர்கள் ......... இதற்கு முன் என் கூட்டங்களில் பங்கெடுத்திராத எத்தனைப்பேர் இருக்கின்றீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். என் கூட்டங்கள் ஒன்றில் கூட வராதவர்கள்? (அவர்கள் எல்லாரும் ஒரே இரவில் வராதது ஒரு நல்ல காரியம்தான். சரி, சகோதரரே, நீங்கள் எல்லாரும் எனக்காக ஜெபம் செய்யுங்கள். நீங்கள்........... நாளை இரவு...? .... நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன் ............ நான் ஒரு ........... ........ நீங்கள் உண்மையான மனிதர்.........தோளோடு தோள், இருதயத்திற்கு இருதயம், நீங்கள் என் சகோதரர் ஆவீர்.....) (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.) என் சகோதரரே, நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். என் பின்னால் இருக்கும் இந்த குழுவினர், அங்கே பின்னால் ஜெபித்துக் கொண்டிருக்கும் அவர்களை நான் அழைக்கப் போகிறேன். ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகின்றது. உண்மையான தேவனுடைய மனிதர்...... இப்பொழுது, நீங்கள் விசுவாசத்தை மாத்திரம் கொண்டிருங்கள். சரி, நான் யூகிப்பது என்னவென்றால் காட்சியானது இன்றிரவு ஆரம்பித்து... நான் - நான் மக்களாகிய உங்களிடமாக முதலாவதாக கூற விரும்புகிறேன். ஒவ்வொரு இரவும் அநேக மக்கள் ஜெபத்திற்கு இருந்தனர். ஜெபத்திற்கு மக்கள் வராமல் ஒரு இரவு கூட்டம் கூட இருந்ததில்லை. கட்டடம் முழுவதுமாக எட்டு, பத்து அல்லது பதினைந்து மிகவும் வியாதிப் பட்டவர் நிச்சயமாக இருந்தனர். அது சரியா? நீங்கள் எல்லாரும் இங்கே இருந்தீர்களா? பாருங்கள்? 91. இப்பொழுது, புதிதாக வந்திருப்பவர்களாகிய நீங்கள் சற்று கவனியுங்கள், நான் தெய்வீக சுகமளிப்பவன் என்று என்னைக் கூறிக் கொள்வதில்லை. அதைப் போன்ற ஒரு நபர் பூமியில் இருக்கிறார் என்று விசுவாசிப்பதில்லை. இயேசு கிறிஸ்து தான் சுகமளிப்பவர் என்று நான் விசுவாசிக்கிறேன். அவரால் செய்யக்கூடுமான எல்லாவற்றையும் அவர் ஏற்கெனவே செய்து விட்டார். ஏனென்றால் அவர் அங்கே முன்னரே அடிக்கப்பட்டார். அவர் தான் கன்மலையாவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அந்த அக்கினி ஸ்தம்பம். இருக்கிறவராக இருக்கிறவர் அவர்தான் . அவர் அதை... நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று என்னவென்றால் வழியிலிருந்து அடைப்புகளை மாத்திரம் எடுத்துப்போடுதல்தான். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் சரி, இங்கே இருக்கின்ற வியாதிப்பட்ட நபர் ஒவ்வொருவரையும் அவர் ஏற்கெனவே சுகமாக்கிவிட்டார். ஒவ்வொரு பாவியும் ஏற்கெனவே குணமாக்கப்பட்டு விட்டனர். ஒவ்வொரு பாவியும் ஏற்கெனவே இரட்சிக்கப்பட்டு விட்டனர். ஆனால் சகோதரனே, நீங்கள் அதை ஏற்றுக் கொள்வது நல்லது, உங்கள் சுகமளிப்புக்காகவும் அதை செயதல் நல்லது. 92. நாம் சற்று இங்கே பார்ப்போம். முன்பொரு இரவு ஒரு பெண் சாட்சி கொடுத்ததை நாம் பார்த்தோம். ஆம். சிறிது காலத்திற்கும் முன்னர் அவளை இங்கே கூடாரத்தில் கொண்டு வந்தார்கள். அந்த பெண் இந்தவிதமாக இருந்தாள். அவளுக்கு இருந்த ஒரு சதை வளர்ச்சியால் அவளால் நடக்கக்கூட முடியவில்லை. மனிதர் அவளை தூக்கிக் கொண்டு வந்து அங்கே படிக்கட்டுகளில் உட்கார வைத்தார்கள். அந்த இரவு நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவில்லை. அவள் என் கால்சட்டையை பிடித்துக் கொண்டாள். அப்பொழுது நான் வெளியே நடந்து போய்க் கொண்டிருந்தேன் என்று நம்புகிறேன். அப்பொழுது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டு காரியமானது மாற்றப்பட்டது. "ஆகவே அந்த பெண் அன்றொரு இரவு இங்கே இருந்தாள். அவள் சரி சமமாக, இயல்பாக ஒரு பெண் இருப்பது போலவே இருந்தாள். பாருங்கள்? மற்ற எல்லா ... ஓ, என்னே , நாங்கள் அப்படியாக... நான் அதை விளம்பரப்படுத்துவதில்லை, அதைப் போன்ற காரியங்களை செய்து, அப்படியாக நான் செல்வதில்லை. ஏனென்றால் அநேக முறை இயேசு கூறியதாவது... இன்றைக்கு அது தான் காரியம் என்று நான் நினைக்கிறேன். நாம் தெய்வீக சுகமளித்தலை மிகவும் பகட்டாக கவர்ச்சியான விதத்திலே சித்தரித்துக் காண்பிக்கிறோம். பாருங்கள்? அது ஒரு வசியக் கவர்ச்சியல்ல. அதன் காரணமாகத் தான் நான் உங்களிடம் கூறினேன். என் முழு இருதயத்தோடு நான் விசுவாசிப்பது என்னவென்றால் சிக்காகோ நகரத்தார் இங்கே கடைசி முறையாக காண்கின்றனர். பாருங்கள்? நான் - நான் நம்புகிறேன், நீங்களும் அதை நினைவில் கொண்டுள்ளீர்கள். அவர் என்ன கூறினார் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும். நான் உங்களிடம் கூறினதை அவர் எனக்கு கூறினார். 93. கர்த்தருடைய நாமத்தில் எதையுமே நான் உங்களிடம் கூறவில்லை. ஆனால் அது கூறின விதமாகவே காரியமானது சம்பவித்தது. அதை நான் உங்களிடம் இப்பொழுது கேட்கின்றேன். பாருங்கள்? ச அப்படியானால், நீங்கள் என்னை விசுவாசியுங்கள். கிறிஸ்து உங்களை ஏற்கெனவே சுகமாக்கிவிட்டார். நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே இப்பொழுது, நான் அணிந்து கொள்ளும்படிக்கு அவர் அளித்திருக்கும் இந்த சூட்டை (Suit) அவர் அணிந்து இங்கே நின்றிருந்தால் எப்படியாக இருக்கும்? நீங்கள் வந்து அவரிடமாக, ”கர்த்தாவே, நீர் என்னை சுகமாக்குவீரா?” என்று கேட்பீர்களல்லவா, அதற்கு அவர், "வழியில் இருக்கும் எல்லா கட்டைகளையும் எடுத்து வெளியே போடுங்கள். நான் உங்களிடமாக வருவதற்கு என்னை முந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பது உங்கள் அவிசுவாசம்தான்” என்பார். 94. இப்பொழுது, இங்கே - இங்கே புதிதாக வந்துள்ள உங்களுக்கு, இதோ ஒரு வேதாகமக் காட்சி, பரிசுத்த யோவான் ஏழு-4-வது அதிகாரத்தில் சமாரிய ஸ்திரீ என்று அழைக்கப்பட்ட ஒரு ஸ்திரீயிடமாக இயேசு வந்தார். அந்த சம்பவம் நம் எல்லாருக்குமே தெரிந்த ஒன்றாகும். அவர் தம்மை மேசியாவாக எப்படி அவளுக்கு தெரியப்படுத்தினார்? அவர் என்ன செய்தார்? அவர் அந்த ஸ்திரீயிடமாக.... அவர் அந்த ஸ்திரீயிடமாக "எனக்கு தாகத்துக்கு தண்ணீர் கொண்டு வா” என்று கேட்டார். அவர் அவளு டைய ஆவியை தொடர்பு கொள்ள முனைந்து கொண்டிருந்தார். அவள், “தண்ணீர் - கிணறு ஆழமாயிருக்கிறதே. மொண்டு கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே" என்று கூறினாள். மேலும் அவள் கூறினது... அப்பொழுது அவர்கள் பக்தி மார்க்கத்தைக் குறித்து பேச ஆரம்பித்தனர். அவள் மார்க்கத்தைக் குறித்து பேசவிரும்பினாள். ”நாங்கள் இந்த மலையிலே தொழுதுகொள்ளுகிறோம். நீங்கள் எருசலேம் என்று கூறுகிறீரே... ஏனென்றால் .... நாம் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக்கூடாதே, நீர் ஒரு யூதன், நான் ஒரு சமாரிய ஸ்திரீ ஆயிற்றே" என்று கூறினாள். அவர் "ஸ்திரீயே நீ போய் உன் புருஷனை கூப்பிட்டு இங்கே அவனை அழைத்துக் கொண்டு வா” என்றார். அதற்கு அவள், "எனக்கு புருஷன் இல்லை ” என்றாள். அவர், "நீ சொன்னது சரிதான். உனக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள். இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருக்கிறவனும் உன் புருஷன் அல்ல” என்று கூறினார். 95. இப்பொழுது, அந்த நாளிலே அதைக் குறித்து சபை ஊழியமானது என்ன கூறினது? இதோ, நான் ஊழியம் என்று கூறும் போது, இந்த விதமான ஊழியக்காரர்களை குறித்து நான் குறிப்பிடவில்லை. இவர்கள் சகோதரர்கள், என்னோடு இதயத்திற்கு இருதயமாக இருக்கிறவர்கள். நான் கூற விழைவது இதை பரியாசம் செய்து, இந்த ஊழியத்தில் எதுவுமே கிடையாது என்று கூறுகிற சபை ஊழியத்தை நான் குறிப்பிடுகிறேன். உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற ஸ்தாபனங்களைப் பற்றி நான் கூறவில்லை. அவைகளில் தேவனுடைய முறைமையை கொண்டிருக் கின்றனர். ஆனால் இவர்களோ இந்த காரியத்தை மறுதலிக்கின்றனர். இவர்களைக் குறித்துதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். பாருங்கள்? அவர் மறுதலிப்பது... "அதனோடு ஒன்றுமே கிடையாது. அது பிசாசினால் உண்டானது?" என்று கூறுகின்றவைகள்தான். அங்கே அந்த காலத்திலே அவர்கள் செய்த விதமாகவேதான் இதுவும். ஆனால் அந்த சிறிய விபச்சாரியோ, “ஆண்டவரே, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். எங்களுக்கு தெரியும். எங்களுக்கு போதிக்கப் பட்டுள்ளது - மேசியா வரும்போது இந்த காரியங்கள் எல்லாவற்றையும் எங்களுக்கு அறிவிப்பார் என்று எங்களுக்குத் தெரியும்” என்று கூறினாள். இப்பொழுது, அது உண்மை என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்? அது சரியே. அதற்கு அவர் "உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்று கூறினார். அப்பொழுது அவள் ஊருக்குள்ளே போய் .... இங்கே வாருங்கள். "நான் செய்த எல்லா காரியங்களையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள், அது அந்த மேசியா தானே? என்று அந்த ஊர் மனிதரிடமாகக் கூறினாள். அந்த முழு ஊராரும் இயேசுவை விசுவாசித்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. அவர் அதை மறுபடியுமாக செய்ய வில்லை. அவர் அதை ஒரு முறை மாத்திரமே செய்தார். ஏனென்றால் அந்த ஸ்திரீயானவள், அந்த விபச்சார ஸ்திரீ தன் ஊராரிடமாக தான் ஒரு தவறான மனிதனுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை இயேசு கூறினார் என்று கூறினாள். அப்பொழுது அந்த மூழு ஊராரும் அவர்தான் அந்த மேசியா என்று விசுவாசித்தனர். ஏனென்றால் அது மேசியாவின் அடையாளமாக இருந்தது. 96. இப்பொழுது, வேதாகம கல்லூரி அறிவுதான் மேசியாவின் அடையாளம் என்று நீங்கள் நினைப்பீர்களானால், அது என்னவென்றால் இதைவிட மேலான ஒரு அடையாளம் என்றும்... இயேசு, "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்," என்று கூறினார். நீங்கள் சுவிசேஷத்தை பிரசங்கிப்பது தான் மகத்தான, பெரிய கிரியைகள் என்று கூறுகிறீர்கள். சரி, அப்படியானால் நீங்கள் இங்கே வந்து சிறிது கிரியைகளை செய்யலாமல்லவா. இதோ பிரசங்க மேடை இங்கே இருக்கின்றது. நீங்களாகவே இங்கே வரலாம். மேலே இங்கே வாருங்கள். இந்த ஜெப வரிசையில் செல்லுங்கள். பரிசுத்த ஆவியானவர். அங்கே ஜனக்கூட்டத்தின் மத்தியில் செல்வாராக, உங்கள் மேலாக கடந்து செல்வாராக. அப்பொழுது நீங்கள் அந்த கிரியைகளை செய்து அதன் பிறகு போய் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறீர்களா என்று நான் பார்க்கட்டும். அப்பொழுது நீங்கள் இன்னும் பெரியதான கிரியைகளை செய்கிறீர்கள் என்பதாகும். இயேசுவால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை குறித்து பிரசங்கிக்க முடியவில்லை . ஏனென்றால் அது இன்னுமாக வராதிருந்தது. அது பெரிய கிரியைகளாகும். நிச்சயமாக அதுவே தான். சபையானது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து பிரசங்கிக்க வேண்டியதாயிருக்கின்றது. அது வருகின்றது என்று இயேசு கூறினார். ஆனால் சபை அதைக் கொண்டிருக்கிறது. "நாங்கள் அதை பெற்றிருக்கிறோம். அது உங்களுக்கும் தான்" என்று கூறுகிறது. பாருங்கள்? ஆகவே அது தான் பெரிதான ஒன்றாகும். அது உண்மை . 97. ஆனால் அவர் செய்த அதே கிரியைகள்... என்னை விசுவாசிக் கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்.'' இப்பொழுது, எனக்கு முன்பின் தெரியாத ஒரு பெண் இங்கே இருக்கின்றாள். நாம் முன்பின் அறிந்திராத ஒருவருக்கொருவர் அந்நியர் தானே? இதை கூறுவது ஏன் என்றால் கூடியிருப்பவர்கள் புரிந்து கொள்ளத்தான். இப்பொழுது, இந்த பெண்ணை கவனியுங்கள். உங்களை எனக்குத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் ஆவோம். இதுதான் நம்முடைய முதல் சந்திப்பாகும். அது உண்மையென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது, இதோ ஒரு மனிதனும் ஒரு பெண்ணும் மறுபடியும் சந்திக்கிறார்கள். இந்த பெண் யார் என்றும் அல்லது எதற்காக இந்த பெண் இங்கே வந்திருக்கிறாள் என்றும் அல்லது அதைவிட வேறு ஒரு காரியமும் இவளைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. இவள் எனக்கு முன்பின் தெரியாத ஒரு அந்நிய பெண் ஆவாள். இப்பொழுது, மனோதத்துவம் அதிகமாகவே இருக்கின்றது. "யாரோ ஒருவருக்கு முதுகில் பிரச்சனை இருக்கின்றது என்று கர்த்தர் எனக்கு கூறுகிறார்." என்கின்றனர். நிச்சயமாக அங்கே கூட்டத்தில் உள்ள நிறைய பேருக்கு முதுகில் பிரச்சினை இருக்கின்றது. நரம்பு தளர்ச்சி, கோளாறு நிச்சயமாக. அப்பிரச்சினைகளை கொண்டிருக்கின்ற ஒரு பெரிய மக்கள் கூட்டமே இருக்கும். பாருங்கள்? யார் அது? அது எங்கே இருக்கின்றது? எங்கிருந்து அது வருகின்றது? அதைப் பிறப்பித்தது என்ன? அதற்கு என்ன சம்பவிக்கப்போகின்றது? அதுதான் அடுத்த காரியமாகும். பாருங்கள்? அது வித்தியாசமான ஒன்றாகும். 98. இந்த ஸ்திரியை இங்கே நான் மேலே கொண்டு வந்து "வியாதியஸ்தருக்காக ஜெபிக்க தேவன் என்னை அனுப்பினார். உன் மீது நான் கைகளை வைத்து உன்னை எண்ணையால் அபிஷேகம் பண்ணட்டும். தேவனுக்கு மகிமை. நீ சுகமாக்கப்படப்போகிறாய்”- என்று கூறினால், அதை விசுவாசிக்க அவளுக்கு உரிமை உண்டு. அது உண்மை . ஆனால் என் அனுபவத்தைக் குறித்தும், நான் அவளுக்கு உண்மையை அல்லது பொய்யைக் கூறுகிறேனா என்று அவள் சந்தேகிக்கக்கூடும். அவள் அதை சந்தேகிக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து என் உதடுகளின் மூலமாக பேசி எப்படியாக அவள் இருக்கின்றாள் என்ற ஒரு காரியத்தைக் குறித்து அவளிடமாகக் கூறுவாரானால், அது சரியாக இந்த இடத்திலே காரியத்திலிருந்து சந்தேகத்தை முற்றிலுமாக எடுத்தப் போட்டுவிடும். பாருங்கள்? ஏனென்றால் என்னை அவளுக்கு முன்பின் தெரியாது என்று அவள் அறிவாள். நாங்கள் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் என்று நாங்கள் தேவனிடமாக எங்கள் கரங்களை உயர்த்தியுள்ளோம். இதோ, இதுதான் சுவிசேஷமாகும். கிறிஸ்து கொண்டிருக்கின்ற சுவிசேஷமாக அது இல்லையென்றால்... நீங்கள் சகோதரன் பிரன்ஹாம் நீங்கள்தான் மேசியா என்று கூறுகிறீரா?" எனலாம். இப்பொழுது, நீங்கள் அப்படியாக நினைப்பீர்களானால் உங்களிடமாக ஆவிக்குரிய பகுத்தறிதல் இல்லை என்பதாகும். பாருங்கள்? எப்படி என்னால் ஒரு மேசியாவாக இருக்க முடியும்? நான் வில்லியம் பிரன்ஹாம், கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி ஆவேன். இயேசு கிறிஸ்துதான் மேசியா ஆவார். ஆனால் அவருடைய ஆவி, நமக்குள்ளாக ஜீவனோடு இருக்கின்றது. அந்த பரிசுத்த ஆவி. 99. ஆகவே இதை விசுவாசிக்காத மக்களாகிய உங்களுக்கு கூறுகிறேன், மக்களை அழும்படிக்கும், சத்தமிடுவதற்கும் அந்நிய பாஷையில் பேசும்படிக்குச் செய்கின்ற இந்த காரியத்தில் நம்பிக்கை இல்லாத மக்களாகிய உங்களுக்கு கூறுகிறேன், அது அந்த அதே ஆவியாகும். வேதா... "ஒருவன் உள்ளே வந்து, அப்பொழுது நீங்கள் எல்லாரும் அந்நிய பாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, அவர்கள் உங்களை பைத்தியம் பிடித்தவாகளென்பார்களல்லவா. ஒருவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்து இருதயத்தின் அந்தரங்கங்களை வெளிப்படுத்துவானால் அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து "தேவன் உங்களுடனே இருக்கிறார்” என்று கூறுவான்” என்று பவுல் கூறியுள்ளான். ஆம், பாருங்கள் சகோதரரே அது - அது ஒரு பெந்தெகொஸ்தே வரமாகும். அது என்ன வென்றால் சபைக்கு கூட்டி வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு காரியமாகும். (சகோதரராகிய உங்களிடமாக அந்நிய பாஷையில் பேசுவதைக் குறித்து பாப்டிஸ்டுகளும் மெத்தொடிஸ்டுகளும் எப்படியாக சண்டையிட்டனரோ அதே போலத்தான் இதன் பேரிலேயும் அதே விதமான எனக்குச் செய்கின்றனர். ஆகவே... ஆனால் சத்தியத்திற்காக நில்லுங்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது தொடர்ந்து செல்லட்டும்) 100. உங்களை எனக்குத் தெரியாது. ஆகவே நீங்கள் எதற்காக இங்கு வந்துள்ளீர்கள் என்றும், நீங்கள் செய்துள்ள ஒரு காரியத்தையும், மேலும் நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தையும் அல்லது ஒரு உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு பாவம் அல்லது - ஒரு ஆசீர்வாதமானது இருப்பதைக் குறித்தும், ஒரு காரியமானது உண்மையா இல்லையா என்று அறியாமலிருப்பதையும், அது சரியா அல்லது சரியில்லையா என்று நீங்கள் அறிந்து கொள்ளும்படிக்கு கர்த்தர் என்னிடமாகக் கூறுவாரானால், அப்பொழுது அது அப்படிதான் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாப்பீர்களா.......... அது ஏதோ ஒரு ஆவிக்குரிய வல்லமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் அல்ல. அது அந்த மேசியா என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? நான் அல்ல ஆனால் அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றபடியே அவருடைய ஆவி தாமே என் மூலமாக பேசுகின்றது என்று விசுவாசிப்பீர்களா? சபையார் முழுவதுமாக அதை ஒரு மனதோடே விசுவாசிப்பீர்களா? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். உங்களுக்கு நன்றி , இப்பொழுது, நீங்கள் விசுவாசியுங்கள். 101. அந்த பெண் என்னிடமிருந்து சுமார் பத்து, பன்னிரண்டு அடி ' தூரத்தில் நின்று கொண்டிருக்கின்றாள். நான் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான், பிரசங்கம் செய்து முடித்த பிறகு, அங்கே முன்னர் இருந்த அந்த தீர்க்கதரிசி செய்து போலவே தான், நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல. ஆனால் அங்கே அந்த தீர்க்கதரிசி அதைச் செய்தான் . அவன் யோராமையும் மற்றும் அவனோடு இருந்தவர் களையும் உரத்த கூச்சலிட்டு தாக்கிக்கொண்டிருந்தான். ஆகவே முதலாவதாக அவர், தாம் அபிஷேகிக்கப்படுகின்ற வரைக்குமாக அவளுடைய ஆவியைத் தொடர்பு கொள்ள வேண்டியதாயிருந்தது. இப்பொழுது அதற்கு தான் நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். வில்லியம் பிரன்ஹாம் என்னும் மரக்கட்டையை வழியிலிருந்து எடுத்துப் போட என் அறிவாற்றல்களை, என் ஆவியை, எனக்குத் தெரிந்த எந்த ஒன்றையும் நான் எடுத்துப் போடுகிறேன். அவை எல்லாவற்றையும் நான் வழியிலிருந்து எடுத்துப் போடுவேனானால், அப்பொழுது தம்முடைய மக்கள் முன்னே தம்மை மகிமைப்படுத்தும்படிக்கு அவரால் என் கண்களையும், என் உதடுகளையும் உபயோகிக்க ஏதுவாக இருக்கும். அப்படியே சமர்ப்பித்து கொள்ள..... இங்கு உள்ள இதைப் போன்று, இதனால் பேசவே முடியாது. அது அப்படியே அமைதியாக இருக்கின்ற ஒரு பொருள் ஆகும். அதை பேசும்படிக்குச் செய்ய ஒரு உயிருள்ள ஒன்று தாமே அதற்கு முன் நின்று பேசினால் தான் இதிலிருந்து குரலொளி எழும்பும். அதனால் தானாகவே பேச முடியாது. அதை போலவே என்னாலும் உங்களைக் குறித்து எதுவுமே கூற முடியாது. அவ்வாறு கூற நித்திய ஜீவனைக் கொண்டிருக் கின்ற ஏதோ ஒன்றால்தான் முடியும். உங்களைக் குறித்து அறிந்திருக்கின்?) ஒன்றினால் உங்கள் காரியத்தைக் குறித்து பேச முடியும். அது சரியே 102. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் பிரச்சனை என்னவென்றால் .... மக்களால் என் சத்தத்தை இன்னுமாக கேட்க முடியுமென்றால் ஒரு பெண்ணை என்னால் காண முடிகின்றது. அவள் நரம்புத்தளர்ச்சியால் முழுவதுமாக பாதிக்கப்பட்டு சின்னாபின்னமான நிலையில் இருக்கின்றாள். இதோ பாருங்கள். அது சரி தான், முற்றிலும் சரியானது தான். ஏனென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் வழக்கமாக கூறுவது போல நான் ஒவ்வொரு முறையும் ஒரு காரியத்தைக் கூறுகையில் மக்கள் எப்பொழுதுமே "யூகித்து கூறுகின்றார்" என்று கூறுகின்றனர். (அப்படி கூறுவதை என்னால் உணர முடிகின்றது.) நான் அதை யூகிப்பதில்லை. அதை யூகித்துக் கூற எனக்கு எந்த ஒரு வழியும் இல்லை என்று உங்களுக்குத் தெரியுமா. இப்பொழுது, நான் கூறினது உண்மை தானே? அது உண்மை என்றால், எப்படியாக கூறப்பட்டதென்றால்... இப்பொழுது, எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுக்கு நன்றி, இப்பொழுது நீங்கள் தாமே... பிலிப்பை போல, இயேசு அவனைப் பற்றியும், அவன் எங்கிருந்தான் என்றும் கூறின போது..... அவன் 'ரபீ, நீர் தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் ராஜா” என்றான். அப்பொழுது அவர் "நீ அதை விசுவாசிக்கின்றபடியால், இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்” என்று கூறினார். அது சரிதானே? 103. அந்த அதே வாக்குத்தத்தம் தான். நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே நில்லுங்கள். உங்களிடம் இருக்கின்ற கோளாறு என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் எதுவாயிருந்தாலும், உங்களுக்கு வியாதி இருக்கிறது என்பது உண்மை . சரி, ஆம். இப்பொழுது அதை என்னால் காணமுடிகிறது. ஆம். நரம்பு தளர்ச்சி. சிறிது காலமாக அது உங்களுக்கு இருக்கின்றது. உங்களுக்கு மாதவிடாய் முடிவாக நின்று போனதிலிருந்து இந்த நரம்பு தளர்ச்சி ஆரம்பித்துள்ளது. இதனோடு கூட உங்களுக்கு பெண்களுக்கான கோளாறும் இருக்கின்றது. அது... இதனால் நீங்கள் அவதியுறுகிறீர்கள். அது உண்மை . மேலும் மற்றொரு காரியம். நீங்கள் யாரோ ஒருவருக்காக உங்கள் இருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது சரியே. இங்கே இல்லை ..... கண்களில் கோளாறு காணப்படுகிறது... உங்கள் தாய்க்கு. அது சரியே. இப்பொழுது, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது இருக்கையில் நீங்கள் வைத்திருக்கின்ற அந்த கைக்குட்டையை உங்கள் தாயிடம் அனுப்புங்கள். எல்லாம் சரியாக விடும். வீட்டிற்கு செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 104. இப்பொழுது, நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். தேவனை அப்படியே நம்புங்கள், அவ்வளவு தான். இப்பொழுது, இயேசு கிறிஸ்து செய்வார் என்று பற்றுறுதி கொள்கிறீர்களா.... இப்பொழுது, தயவு செய்து அங்கும் இங்கும் செல்லாதீர்கள். நேரமானது கடந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும். உங்களால் அதை உணர்ந்து கொள்ள முடியவில்லை (பாருங்கள்?) கர்த்தருடைய தூதன் என்ன கூறினார் என்று தெரியுமா? "மக்கள் உன்னை விசுவாசிக்கும் படிக்கு நீ செய்தால்." ஆகவே அப்பொழுது நீங்கள் - நான் அப்படியே அமர்ந்திருங்கள்” என்று கூறும் போது அவ்விதமாக நீங்கள் செய்யாவிடில் என்ன நடக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? அப்படியே நேராக என் முகத்தில் வந்து விழும்படிக்கு அது திருப்பி என்மேல் வீசியெறிகின்றது. சாத்தான் "இதோ பார், அவர்கள் உன்னை விசுவாசிப்பதில்லை” என்று கூறுகிறான். உங்களில் சிலர் அப்படியே செய்கிறீர்கள், சிலர் செய்வதில்லை, ஆனால் நீங்கள் மற்றவர்களை பாதிக்கிறீர்கள். ஒரு சமயத்தில் இயேசு அவர்கள் எல்லாரையும் வீட்டைவிட்டு வெளியே அனுப்பினார். பாருங்கள், நான் சுவிசேஷகனாக மற்றும் ஒரு ஞானதிருஷ்டிக்காரனாக இரண்டையுமே செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களால் அவ்விதம் செய்ய முடியாது. ஒன்று நான் காட்டிற்குச் சென்று ஒரு ஞானதிருஷ்டிக்காரனாக இருந்து என் செய்தியுடனே பலத்துடனே நடை போட்டு வருவேன் அல்லது திரும்பச் சென்று விடுவேன் அல்லது அதை அப்படியே ஓரத்தில் வைத்து விட்டு தேவன் அதை என்னை விட்டு எடுத்துப்போட்டு நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி செய்து ஒரு சுவிசேஷகனாக இருப்பேன். 105. சகோதரியே, நீங்கள் நலமா? உங்களை எனக்குத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத அந்நியாராக இருக்கின்றோம். அது சரி தானே? நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லா அந்நியராக இருக்கின்றோம். நாம் அந்நியர் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் படிக்கு நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா அதினாலே நாம் அறிமுகமில்லாதவர்கள் என்று மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாயிருக்கும். நீங்கள் இங்கே எதற்காக நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்துவாரானால் நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா?..?...! இந்த பெண் ஒரு நல்ல ஆவியை உடையவளாக இருப்பதாகத் தெரிகிறது, விசுவாசிக்கின்ற ஒரு ஆவி. ஆம் ஐயா, இதோ அது வெளிப்படுகிறது. இவள் இருதய கோளாறினால் அவதியுறுகிறாள். இவளுக்கு இருதய பிரச்சனை இருக்கின்றது. உ.ஹ் அஹ். உங்களுக்கு மூட்டு வாதமும் கூட இருக்கின்றது. உஹ்-அஹ். உங்களுக்கு நரம்பு தளர்ச்ச்சியும் கூட இருக்கின்றது. மேலும் நீங்கள் ஒரு நபருக்கு உங்கள் இருதயத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்த நபர் யார் என்றும் அல்லது அவர்களைக் குறித்து தேவன் எனக்கு கூறுவாரானால் நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்கள் பிள்ளையாகும். உங்கள் மகள், அவள் இங்கே இல்லை. அவள் இங்கிருந்து வேறு இடத்தில் இருக்கின்றாள். அவள் கலிபோர்னியாவில் இருக்கிறாள். அவளும் நரம்பு தளர்ச்சியால் அவதியுறுகிறாள். கர்த்தர் உரைக்கிறதாவது. இப்பொழுது, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக் கிறீர்களா? அப்படியானால் சென்று நீங்கள் கேட்டபடியே விசுவாசித்தபடியே அப்படியே அதைப் பெற்றுக் கொள்ளுங்கள், அது உங்களுக்கு அப்படியே வாய்க்கும், சரி. 106. வாருங்கள், ஐயா, உங்களை எனக்குத் தெரியவில்லை . ஒரு சமயம் நம்முடைய கர்த்தர்.... வரிசையில் கடந்து சென்ற இரண்டு அல்லது மூன்று பேர் பெண்களாயிருந்தார்கள் என நம்புகிறேன். இதோ ஒரு ஆண் இருக்கின்றார். இயேசு ஒரு ஸ்திரீயை சந்தித்த போது என்ன செய்தார் என்று நான் உங்களுக்கு கூறினேன். இப்பொழுது, வேதாகமத்தில் ஒரு ஆணை சந்தித்த காரியத்தை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுவேனாக. அதினாலே ஆண் பெண் என்கின்ற வித்தியாசத்தை அவர் கொண்டிருப்பதில்லை என்பதை பெண்களும் ஆண்களும் காணும்படிக்கு ஏதுவாக இருக்கும். அவர் பேதுருவை சந்தித்த போது. அவர் சீமோன் பேதுருவை சந்தித்தார். அப்போது அவனுடைய பெயர் சீமோன் என்பதாக இருந்தது. அவன் யார் என்பதையும் அவனைக் குறித்தும் அவர் கூறினார். இப்பொழுது உங்களையும், உங்களை குறித்தும் இன்னும் பிற காரியங்களையும் தேவன் என்னிடமாக கூறுவார் என்று நீங்கள் விசுவாசிக்ககிறீர்களா? அது நீங்கள் விசுவாசம் கொள்ளும்படிக்குச் செய்யுமா? ஒரு நிமிடம் பொறுங்கள். ஏதோ ஒன்று சம்பவித்துக் கொண்டிருக்கின்றது. அங்கே ஜனக் கூட்டத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள், இடது பக்கத்தில் இருக்கின்றாள், அவளுக்கு பிளவுற்றுள்ள தொப்புள் நிலை உள்ளது. சகோதரியே தேவன் உங்களை கமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடு அதை விசுவாசிப்பீர்களானால், நீங்கள் கேட்பது எதுவோ அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். 107. அங்கே இரண்டு மனிதர் நின்று கொண்டிருக்கின்றனர். யாரோ ஒருவர் அந்த பிரதான ஆசாரியரை தொடுகின்றனர். அங்கே உங்கள் மூக்கில் விரலை வைத்துக்கொண்டிருப்பவரே, அங்கே பின்னால் உட்கார்ந்துள்ள ஒரு மனிதன் : அவருக்கு இருதய நீர்க்கோவை, தோல் புற்று நோய் உள்ளது. சகோதரனே, இயேசு உங்களை குணமாக்கி விட்டார். உங்கள் விசுவாசம் உங்களை சொஸ்தமாக்கினது. அவர் எதைக் தொட்டார்? இங்கே இருக்கின்ற இந்த மனிதனை விட அவர் வயது சென்றவர். அவர்களுக்குள்ளே வித்தியாசம் இருந்ததை என்னால் காண முடிகிறது. இப்பொழுது, உங்களுக்கு உள்ள கோளாறு என்ன என்று தேவன் என்னிடம் கூறுவாரானால் நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? ஒரு காரியம், உங்களுக்கு பிரச்சனை உங்கள் உடலின் பக்கவாட்டில் இருக்கிறது. அது ஒரு விதமான வெடிப்பாக இருக்கிறது, குடலிறக்கம் இருக்கின்றது. அது சரி. மற்றொரு காரியம். உங்களுக்கு நரம்பு தளர்ச்சி இருக்கிறது. சரி. இப்பொழுது ஆண்களாகிய நீங்கள் எல்லாரும் விசுவாசிக்கிறீர்களா? அவர் ஒரு நல்ல மனிதனாக காணப்படுகிறார். 108. இந்த மனிதனுடன் சிறிது நேரத்தை செலவிடுவோம். தயவு செய்து பயபக்தியாகவும் அமைதியாகவும் இருங்கள், உங்களுடைய இருதயத்தில் ஏதோ வைத்திருக்கின்றீர்கள்; தேவன் ஒன்றை கூறும்படிக்கு ஏதோ ஒன்று உங்களுக்கு தேவையாயுள்ளது. அது சரியே. ஏனென்றால் நீங்கள் ஆசைப்படுவது என்ன என்று கூற முடியும் என்பதால் , ஓ, என்னே, அது ஒரு பெண்ணாய் இருக்கின்றது, மனைவி, அவளுக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது, அதினால் வீக்கம் உண்டாயிருக்கிறது. அது சரியே. உங்களுக்கு ஒரு மகளும் உண்டு. ஒரு சமயத்தில் அவள் காசநோயால் அவதியுற்றாள். அவள் தெய்வீக சுகமளித்தலினால் சுகமாக்கப்பட்டாள். இப்பொழுது அவளுக்கு வயிற்றுக் கோளாறு உள்ளது. அது உண்மையே. அவர்கள் இன்றிறவு இங்கே இருக்கின்றனர். அவர்கள் கூட்டத்தில் இருப்பதை என்னால் உணர முடிகின்றது. அவர்கள் சுகமாக்கப்படப் போகின்றார்கள். நீங்கள் யார் என்று தேவனால் எனக்கு கூறு முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சீமோன் பேதுரு யார் என்று இயேசுவால் கூற முடியுமானால்..... நீங்கள் ஆர்க்கன்சாஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆவீர். உங்கள் பெயர் திரு.ப்ளாக்வெல். வீடு செல்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கினார். சகோதரனே உங்கள் வாஞ்சைகள் சந்திக்கப்பட்டு நிறைவேறினது. 109. பெண்ணே , நலமாயிருக்கிறீர்களா? நீங்கள் ஒரு எத்தியோப்பிய பெண், நான் ஒரு ஆங்கிலேய சாக்சன் இனத்தைச் சேர்ந்தவன் ஆவேன். அது இரு வித்தியாசப்பட்ட மனித இனம் ஆகும். உங்கள் வாழ்க்கையிலே முதல் முறையாக நாம் சந்திக்கிறோம் அல்லவா? உங்களுடைய பிரச்சனை, கோளாறு என்ன என்று பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நான் அவருடைய - அந்த பரிசுத்த ஆவியின் - பரிசுத்த ஆவியின் தீர்க்கதரிசி என்று நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? விசுவாசம் மாத்திரம் கொள்ளுங்கள், சந்தேகிக்காதீர்கள். விசுவாசியுங்கள். உங்கள் இருதயத்தில் ஒரு பெரிய வாஞ்சையைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையாகவே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற வாஞ்சிக்கிறீர்கள். அது உண்மை. நீங்கள் நாடித் தேடுகின்ற அது ஒரு மகத்தான காரியமாகும். ஒரு மனிதனின் பெயரை தேவன் அறிந்திருப்பாரானால், ஒரு பெண்ணிண் பெயரும் கூட அவருக்குத் தெரியும். அப்படித்தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பரிசுத்த ஆவியைக் கொண்டு நீங்கள் யார் என்று நான் கூறுவேனானால், பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா, தேவன் உங்களுடைய வாஞ்சையை உங்களுக்கு அளிக்கப்போகிறார் ... திருமதி பிட்ஸ்பாட்ரிக், நீங்கள் வீடு செல்லுங்கள். அந்த அபிஷேகத்தை இயேசு கிறிஸ்து உங்களுக்கு அளிக்கப்போகிறார். வேதாகமம் கூறுகிறது கடைசி நாட்களில் - அந்த அதே ஆவியானவர் இதைச் செய்யும்படிக்கு இந்த கடைசி நாட்களில் வருவார் என்று இயேசு கூறினார். ஆபிரகாமின் நாளிலே தம்முடைய முதுகு புறத்தை கூடாரத்தின் பக்கம் திரும்பினாவாரே நின்றிருந்த அந்த மானிட மாம்சத்தில் இருந்த அந்த அதே ஆவியானவர் தாமே. அது சரியா? 110. . இதோ எனக்கு பின்னால் நின்றிருக்கின்ற அடுத்த நபர். ஒரு பெண் ஆகும். எனக்கு பின்னால் நின்றிருக்கின்ற பெண்ணே நான் சொல்வது உங்களுக்கு கேட்கின்றதா? சரி. ஆம் என்று அவள் தன் தலையை அசைக்கிறாளா? நீங்கள் - நான் உங்களை நோக்கிப் பார்க்கட்டும். உங்களுடைய பிரச்சனை என்ன என்று கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துவாரானால் - இந்த புறமாக நான் திரும்பிப் பார்க்கையில், இந்த கடைசி நாட்களில் இங்கே இருக்கும் என்று இயேசு கூறின அந்த அதே வல்லமை, அந்த அதே தேவ தூதன் என்று அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் எல்லாருமே அதை விசுவாசிப்பிர்களா? உங்களுக்கு பெண்களுக்கான கோளாறு இருக்கின்றது. பெண்களுக்கான கோளாறு - ஸ்திரீகளுக்கான பிரச்சனை இருக்கின்றது. வீடு செல்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறர். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அங்கே சக்கர நாற்காலியிலே இருதயக் கோளாறுடன் உட்கார்ந்திருக்கிற உங்களை அவர் சுகமாக்கினார் என்று நான் கூறுவேனானால், நீங்கள் விசுவாசிப்பீர்களா? அப்படியானால் "கர்த்தாவே உமக்கு நன்றி" என்று கூறிக்கொண்டே செல்ல ஆரம்பி யுங்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 111. இப்பொழுது நீங்கள் அந்த கட்டியை அகற்ற ஒரு அறுவைக் சிகிச்சைக்கு தயாராயிருக்கிறீர்கள். ஆனால் தேவன் உங்களை சுகமாக்கப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. அப்படியே செல்லுங்கள், கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி" என்று கூறிச் செல்லுங்கள். மேலும்.... இப்பொழுது, இன்றிரவு நீங்கள் ஆகாரம் உண்ண உங்களுக்கு விருப்பமா, அந்த நீண்ட நாளான வயிற்றுப் பிரச்சனையானது நீங்கி விட்டதா? சாப்பிட உங்களுக்கு விருப்பமா? போய் உங்கள் சாப்பாட்டைச் சாப்பிடுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிப்பீர்களானால். என்னுடனே கூட கல்வாரிக்கு வந்து இரத்தத்தை உங்களுக்குள்ளாக செலுத்திக் கொண்டு அந்த சர்க்கரை வியாதியை வெளியே விரட்ட உங்களுக்கு விருப்பமா? சென்று அதைச் செய்யுங்கள். சர்க்கரை வியாதியுடன் அங்கே பின்னால் உட்கார்ந்துள்ள அந்தபெண்ணும் கூட அதே காரியத்தைச் செய்யலாம், சகோதரியே, அதை நீங்கள் விசுவாசிப்பீர்களானால், செல்லுங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள். சற்று முன்னர் நான் வயிற்றுக் கோளாறு என்று கூறின போது, அது உங்களுக்கும் கூட தான். நீங்கள் புறப்பட்டுச் சென்று உங்கள் இரவு ஆகாரத்தை சாப்பிடுங்கள். சுகமாகுங்கள். சரி. சங்கே பலமுடன் பெரியதாக காணப்படுகிற அந்த பெண், ஆனாலும் நீங்கள் நரம்பு தளர்ச்சியினால் அவதியுறுகிறீர்கள். உலகத்திலேயே அது மிகவும் கடினமான ஒன்றாகும். இப்பொழுது நீங்கள் அதிலிருந்து விடுதலையானீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். செல்லுங்கள், உங்கள் முழு இருதயத்தோடு அதை விசுவாசியுங்கள். 112. சிறிய பெண்ணே , உங்களுக்கு இருக்கும் அந்த ஆஸ்துமா உங்களை விட்டு செல்லப்போகிறது என்றும், நீங்கள் சுகமாக்கப்படப் போகிறீர்கள் என்றும், வீட்டிற்கு சென்று சுகம் பெற்றிருக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறர்களா? புறப்பட்டு நடந்து செல்லுங்கள், "கர்த்தாவே உமக்கு நன்றி” என்று கூறிக் கொண்டே செல்லுங்கள். எத்தனைப் பேர் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்கள்? உங்களில் ஒவ்வொருவரும், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து... உங்களைக் குறித்து என்ன? உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்து நீங்கள் .... அப்படியே நடந்து செல்லுங்கள், தேவனை ஸ்தோத்தரித்துக்கொண்டே செல்லுங்கள்? அப்படியே செல்லுங்கள். உங்கள் முழு இருதயத்துடன் அவரை விசுவாசியுங்கள். உங்களைக் குறித்து என்ன? கிறிஸ்து உங்களை சுகமாக்கப் போகிறார் என்று உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடு அதை விசுவாசித்து “கர்த்தாவே உமக்கு நன்றி” என்று கூறிக்கொண்டே அப்படியே நடந்து செல்லுங்கள். எல்லாம் சரியாயிருக்கிறது என்று நீங்களும் கூட விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் மாரடைப்பினால் மரிக்கப்போவதில்லை. ஆகவே தொடர்ந்து செல்லுங்கள். அதை விசுவாசியுங்கள். நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்க மாத்திரம் செய்வீர்களானால், அப்பொழுது நீங்கள் சுகமாயிருப்பீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படியாக நான் உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் அல்லவா, ஆகவே எல்லாம் இப்பொழுது முடிவு பெற்று விட்டது. உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசித்துக்கொண்டே செல்லுங்கள். 113. எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்கள்? இப்பொழுது எத்தனை பேர் எல்லா அவிசுவாசத்தையும் தோண்டி வெளியே எடுத்துப்போடு, எல்லா மதசம்பந்தமான கட்டைகளை வெளியே எடுத்துப்போட்டு, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள ஆயத்த மாயிருக்கிறீர்கள்? ஒருவர் பேரில் ஒருவர் உங்கள் கரங்களை வையுங்கள். இது தான் உங்களுடைய தீர்மானத்தின் மணி நேரமாகும். ஒவ்வொருவரு அப்படியே அசையாமல் அமர்ந்திருங்கள். அவர்.... (ஒருவர் அந்நிய பாஷையில் பேசுகிறார், மற்றொருவர் அதற்கு வியாக்கியானத்தை அளிக்கிறார். ஆசி.) ஆமென் . நான் உங்களுக்கு என்ன கூறிக்கொண்டிருந்தேன் என்பதைப் பார்த்தீர்களா? மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட எலியாவின் ஊழியத்தைப் போன்றே இந்த ஊழியம் அப்படித்தான் . எலிசா இரட்டிப்பான பங்கை பெற்றிருந்தான். ஒரு இரட்டிப்பான பங்கு. இயேசு தாமே , ஆவியானவரை அனுப்பின அவர் தாமே, "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்" என்று கூறினார். பாருங்கள்? அந்த மனிதனும், அந்த பெண்ணும் ஒருவரையொருவர் அறிந் திருப்பார்களா அல்லது இல்லையா என்று நான் சந்தேகிக்கிறேன், ஆம் நான் சந்தேகிக்கிறேன். அந்நிய பாஷையில் பேசின அந்த பெண், பேசப்பட்ட அந்நிய பாஷையை வியாக்கியானம் செய்த அந்த மனிதன் உங்களுக்கு அறிமுகமானவரா? அப்படி இல்லை என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அந்த மனிதனை உங்களுக்கு தெரியாது என்றால்... பேசப்பட்ட அந்நிய பாஷையை வியாக்கியானம் செய்த நீங்கள். அந்த பெண் உங்களுக்கு முன்பின் தெரியாதவள் என்றாள் உங்கள் கரத்தை உயர்த்துவீரா? அதோ அங்கே பின் புறத்தில் . ஐயா, தெரியாது. அவர்கள் ஒருவருக்கொருவர் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் ஆவர். 114. ஆகவே இதோ அவர்கள் பேசினது சரியாக இந்த அளிக்கப்பட்ட செய்தியுடன் பொருந்தினது, அதை அப்படியே உறுதிப்படுத்தினது. இயேசு இங்கே இருக்கின்றார். இருதயத்தின் நினைவுகளை அறிந்திருக்கின்றார். அதைப் போன்ற ஒரு வரத்தைக் கொண்டு பேசுகின்றார். தீர்க்கதரிசன வரத்தின் மூலமாக ஒரு சபையின் வரத்தைக் கொண்டு, சபையின் வரத்தின் மூலமாக , தம்முடைய வார்த்தையின் மூலமாக பேசுகின்றார். இதோ அவர் இருக்கின்றார். என்னே... என்னே, ஓ, என்னே ....?..... மகிமை. ஒருவரின் மேல் ஒருவர் கைகளை வையுங்கள், நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவே தான். நீங்கள் அபிஷேகிக்கப்பட்டவர்கள் என்றால் தொடுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்கு கொடுப்பார். ஓ, தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த கட்டடத்தை உம்முடைய ஆவியினாலே ஒருமுகப்படுத்தி அபிஷேகித்து சுத்திகரியும். ஒவ்வொரு கட்டையையும் வெளியே எடுத்துப் போடும் அப்பொழுது பரலோகத்தின் தேவன் தாமே பரிசுத்த ஆவியினாலே நிரப்பி இந்த சபையை கொழுந்து விட்டெரியச் செய்யட்டும். இந்த கூட்டத்தின் ஆவிக்குள்ளாக செல்லுங்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே சுகமாவீர்களாக. அதுதான், அல்லேலூயா, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அதை பெற்றுக் கொள்ளும் ஆவிக்குள்ளாக நீங்கள் இருக்கிறர்களா? இதுதான் அது, வழியில் இருக்கின்ற ஒவ்வொன்றையும் எடுத்து வெளியே போடுங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் எழுத்து நின்று அதை இயேசுவின் நாமத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு புரிகின்றதா. உங்கள் கரங்களை உயர்த்துங்கள். மகிமை, மகிமை. ஆமென். தேவனுக்கு ஸ்தோத்திரம். 2